Published:Updated:

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

Published:Updated:
பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

முறுக்கேறிய சிக்ஸ் பேக் உடம்பு, மொட்டைத் தலை, கோபம் கொப்பளிக்கும் முகம்... இப்போ மிரட்டல் பரத்! 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'555’ படத்திற்காக இந்தப் புதிய அவதாரம்.

''உங்க சிக்ஸ் பேக் படங்கள் ரொம்ப நல்லா இருக்கு. என்ன திடீர்னு சிக்ஸ் பேக்?''

''தேங்க்ஸ்!

555 படத்துக்காகத்தான் இந்த சிக்ஸ் பேக். படம் ஆரம்பிக்கும்போது எங்களுக்கு இந்த ஐடியா இல்லை. அப்புறம் ஆக்ஷன் காட்சிகள் ஆரம்பிக்கும்போதுதான் சிக்ஸ் பேக் வைச்சா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணினோம். அதே சமயம் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் நிறைய பேர் சிக்ஸ் பேக் கொண்டுவந்திருக்காங்க. அவங்களைவிட வித்தியாசமா ஹாலிவுட் லெவல்ல ஏதாவது பண்ணலாம்னு முடிவுபண்ணினோம். இதுக்காக என்னோட ட்ரெயினர் சிவக்குமார் ஆலோசனைப்படி நிறைய மெனக்கெட்டு இந்த சிக்ஸ் பேக் உடம்பைக் கொண்டுவந்தேன். இதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்திருக்கு. படத்துக்கும் நிறைய எதிர்பார்ப்பைக் கொடுத்திருக்கு.''

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

''சிக்ஸ் பேக் கொண்டுவர எப்படி எல்லாம் மெனக்கெட்டீங்க?''

''நிறைய!

சிக்ஸ்பேக் முயற்சி செய்யும்போது நாம் நாமாகவே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் வொர்க் அவுட்ஸ் செய்தேன். சிக்கன், முட்டை வெள்ளைக்கரு மட்டும்தான் சாப்பிட்டேன். அதையும் அளவாத்தான் சாப்பிடணும். முக்கியமா, நேரத்துக்குச் சாப்பிடணும். அதிகமா ஊர் சுத்தக் கூடாது. சரியான நேரத்துக்குத் தூங்கி எந்திரிக்கணும். சரியான அளவு தண்ணீர் குடிக்கணும். எந்த ஜூஸும் குடிக்கக் கூடாது. பழங்களோ காய்கறிகளோ சாப்பிடக் கூடாது. ரிசல்ட் நல்லா வரணும்கிறதுக்காக நான் கஷ்டங்களைப் பொறுத்துக்கிட்டேன். அது மட்டும் இல்ல... சாதாரண சிக்ஸ் பேக் வைக்கணும்னா, ரெண்டே மாசத்துல அதை செஞ்சு இருக்கலாம். ஆனால் அவுட்புட் துல்லியமா இருக்கணும், தனித்துவமா இருக்கணும்னு எதிர்பார்த்ததால், முழுசா ஆறு மாசம் ஆச்சு இப்படி இந்த உடற்கட்டைக் கொண்டுவர.''

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

''அந்தக் காலகட்டத்தில் உங்களுடைய ஒருநாள் எப்படி இருக்கும்?''

''காலையில் ஆறு மணிக்கு எந்திரிப்பேன். ஏழு மணியில் இருந்து எட்டரை மணி வரை ஜாக்கிங் பண்ணுவேன். முடிஞ்சதும் முட்டை வெள்ளைக்கரு ஏழு சாப்பிடுவேன். இதுதான் பிரேக்ஃபாஸ்ட். அதன் பிறகு தொடர்ந்து ரெண்டு மணி நேரம் ஜிம் வொர்க்அவுட்ஸ், சரியா 12.45 மணிக்கு அரைக் கிலோ சிக்கன் சாப்பிடுவேன். இது மதியச் சாப்பாடு. கொஞ்சம் அதிகம் பசிச்சா, ஒரு சப்பாத்தி மட்டும் எக்ஸ்ட்ராவா சாப்பிடுவேன். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு கொஞ்ச நேரம் தூங்குவேன். திரும்ப சாயந்திரம் ஒரு மணி நேரம் ஜாக்கிங், அதன் பிறகு ஆறு மணியில் இருந்து எட்டரை மணி வரைக்கும் வொர்க்அவுட்ஸ் செய்வேன். 9.30 மணிக்கு அரைக் கிலோ சிக்கன் சாப்பிடுவேன். சரியா 10 மணிக்குத் தூங்கப்போயிடுவேன். இதுக்கு இடையில் தண்ணீர் மட்டும்தான் குடிப்பேன்.''

''ஜிம்மில் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்வீங்க?''

''மொத்த உடம்புக்கும் தேவையான எல்லா உடற்பயிற்சிகளுமே செய்வேன். இதுபோக சிக்ஸ் பேக்குக்கு எனச் சில சிறப்புப் பயிற்சிகள் இருக்கு. அதைத் தினமும் ஒரு மணி நேரம் செய்வேன். இதை 'ஆப்ஸ்’ (Abs) 'சைட்ஸ்’ (Sides)  என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆப்ஸ் பயிற்சி, வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும். சைட்ஸ் பயிற்சி, வயிற்றின் பக்கவாட்டுப் பகுதியை வலுவாக்கும். இந்த இரண்டு பயிற்சிகளையும் ஒரே நாளில் செய்யக் கூடாது. ஒரு நாளைக்கு ஆப்ஸ் பயிற்சிகளை ஒரு மணி நேரம் செய்தால், மறுநாள், சைட்ஸ் பயிற்சிகளை ஒரு மணி நேரம் செய்வேன். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் இந்தப் பயிற்சிகளைச் செய்வேன். இடைவெளிவிட்டுச் செய்யும்போது தசைப் பகுதி சீக்கிரம் வலுவாகும்.''

பரத் சிக்ஸ் பேக் சீக்ரெட்ஸ்

''சிக்ஸ் பேக் வைக்கிறதால் உடம்பில் நிறையப் பிரச்னைகள் வரும்னு சொல்றாங்களே?''

''பிரச்னைகள் இருக்கும்தான். இதுக்காக நம்ம லைஃப்ஸ்டைலையே மாத்திக்கணும். எந்த நேரமும் உடம்பு ரொம்ப டயர்டா இருக்கும். சுறுசுறுப்பாவே இருக்க முடியாது. உடம்பில் இருக்கும் கொழுப்புச் சத்து சுத்தமாக் குறைஞ்சிடும்கிறதால் கன்னம் ஒட்டிப்போகும். சிக்ஸ்பேக்கைத் தொடர்ந்து மெயின்டெய்ன் பண்றதுதான் தவறு. தவிர, ஒரு தடவை சிக்ஸ் பேக் நிலைக்குக் கொண்டுவந்துட்டு பிறகு சாதாரண உடம்புக்கு வந்துட்டால் அது உடம்புக்கு நல்லதுதான் பண்ணும். இது நம்ம உடம்புக்கு ஒரு விரதம் மாதிரி. பிடிச்ச எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு ஒரு கட்டுக்கோப்பு இல்லாமல் இருக்கும் நம்ம உடம்பை, நேரத்துக்குத் தூங்கி, அளவாச் சாப்பிட்டு, கடுமையா வொர்க்அவுட்ஸ் செய்யவைக்கும்போது, அது நம்ம உடம்பை எப்போதுமே கட்டுக்கோப்பா வெச்சுக்க உதவும். வயிறு சுத்தமாகும். இது ஓர் அழகான மாறுதல். ஆறு மாசம் வரைக்கும் சிக்ஸ் பேக்ல இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிக்ஸ் பேக்கை விட்டுடணும். இப்போ எனக்கு ஷூட்டிங் முடிஞ்சது. நான் பழைய லெவலுக்கு மெள்ளத் திரும்பிகிட்டு இருக்கேன்.''

''சிக்ஸ் பேக் வைச்சுட்டு விட்டால், வெயிட் போடும்னு சொல்றாங்களே?''

''சிக்ஸ் பேக்கில் இருந்து பழைய நிலைக்குத் திரும்பணும்னா, ரிவர்ஸ் முறையில்தான் போகணும். நேரடியா பழைய டயட்டுக்குப் போயிடக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாத்தான் சாப்பிடுற சாப்பாட்டை அதிகரிக்கணும். ஏன்னா சிக்ஸ் பேக் காலத்துல காரம், புளி எதுவுமே சாப்பிடாமல் இருப்பதால், வயிறு அப்போ நாம சாப்பிட்ட முட்டை, சிக்கனுக்கு மட்டுமே பழகி இருக்கும். அப்படி இருக்கும்போது தடாலடியா திடீர்னு ஒருநாள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், அவ்வளவுதான். அதனால் படிப்படியா ஒரு கப் தயிர் சாதம், பழங்கள், ஒரு இட்லி, ஒரு தோசை இப்படி மெள்ள மெள்ளதான் சாப்பாட்டு அளவைக் கூட்டணும். இப்படி பண்ணினோம்னா கொஞ்சம் கொஞ்சமாப் பழைய நிலைக்குத் திரும்புவோம். உடம்பு வெயிட்டும் போடாது. ஃபிட்னெஸும் குறையாது.  என் உடம்பு மாதிரி. என்ன கரெக்ட்டா?''

கரெக்ட்தான் பாஸ்!

- உ.அருண்குமார்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்