Published:Updated:

கார்த்திகாவின் அழகு சீக்ரெட்ஸ்!

''நடனம் கற்றால் நளினம்!''

கார்த்திகாவின் அழகு சீக்ரெட்ஸ்!

''நடனம் கற்றால் நளினம்!''

Published:Updated:
##~##

பாரதிராஜாவின் லேட்டஸ்ட் கிராமத்துக் குயில் 'அன்னக்கொடி’ கார்த்திகா.  இந்த குல்ஃபி ஐஸுடன் ஒரு கூல் 'ட்ரிங்... ட்ரிங்...’

 ''இப்பத்தான் ஜாக்கிங் போய்ட்டு வந்து செம ஃப்ரெஷ்ஷா இருக்கேன், ம்... பேசலாமே...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்க அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா இரண்டு பேருமே 80-களில் சென்சேஷனல் ஹீரோயின்ஸ். அவங்க இப்ப உங்களுக்கு சொல்கிற ஹெல்த் டிப்ஸ் என்ன?''

''80-களில் அம்மா எவ்வளோ பிஸின்னு எல்லோருக்குமே தெரியும். ஆனா, அவ்ளோ பிஸி நாட்களிலும் அவங்க உடற்பயிற்சிகள் செய்யத் தவறியதே இல்லை. எங்கே அமைதியான இடம் கிடைக்குதோ, அங்கேயே உடற்பயிற்சிகள் செய்வாங்களாம். 'என்னை மாதிரி நீயும் இருக்கணும், எக்சர்ஸைஸ் பண்ண எல்லா வசதிகளையும் தேடிக்கிட்டு இருக்காதே. கிடைக்கிற நேரத்தில் ஒரு அமைதியான இடத்தில் பண்ணிடு’னு அடிக்கடி சொல்வாங்க.

அம்பிகாம்மா என்கிட்ட ரொம்ப ஜோவியல். அவங்க ரெகுலரா யோகா பண்றவங்க. என்னையும் யோகா பண்ணச் சொல்வாங்க. நானும் ரெகுலரா யோகா பண்ண ஆரம்பிச்சிருக்கேன். எந்த ஊர்ல எந்த இடத்தில இருந்தாலும், ஒரு அமைதியான இடம் கிடைச்சுட்டாப் போதும். அங்கேயே யோகா பண்ண ஆரம்பிச்சுடுவேன். 'பவர் வொர்க் அவுட்ஸ் வேணாம்; எளிமையான வொர்க் அவுட்ஸே போதும்’கிறது அம்பிகாம்மாவோட நம்பிக்கை. எனக்கும்கூட பவர் வொர்க் அவுட்ஸ் பிடிக்காது.''

கார்த்திகாவின் அழகு சீக்ரெட்ஸ்!

''அப்புறம் எப்படி உங்க உடம்பை இவ்வளவு ஃபிட்டா வெச்சிருக்கீங்க?''

''எல்லாத்துக்கும் பரதநாட்டியம்தான் காரணம். அதுதான் என் உயிர். ஒரு பொண்ணு பரதநாட்டியத்தை மட்டும் முழுசாக் கத்துக்கிட்டாலே போதும். அவளுக்கு வேற எந்தவிதமான உடற்பயிற்சிகளும் தேவை இல்லை. பரதநாட்டியத்தில் அவ்வளவு நன்மைகள் இருக்கு. தொடர்ந்து பரதநாட்டியம் ஆடும்போது, நம்ம உடம்பில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைஞ்சு, உடல் வடிவமைப்பு அழகாகிடும். ஒரு பெண்ணின் அத்தியாவசியத் தேவைகளான நளினம், அழகான உடல்வாகு போன்றவை எல்லாம் தரக்கூடிய சக்தி பரதநாட்டியத்துக்கு இருக்கு. இதைவிட ஒரு நடிகையாகவும் பரதநாட்டியம் எனக்கு உதவுது. நடிக்கும்போது முகத்தில் அடிக்கடி வெவ்வேறு உணர்ச்சிகள் கொடுக்க, பரதம் கைகொடுக்குது. இந்தியக் கலாசார நடனங்கள் எல்லாத்துக்குமே இந்த சிறப்புகள் இருக்கு. அதனால் பரதநாட்டியம் ஆட விரும்பலைன்னாலும், வேற ஏதாவது ஒரு கலாசார நடனத்தைக் கத்துக்கிட்டு ஆடினாலே போதும்... செம ஃபிட்டா இருக்கலாம்.''

கார்த்திகாவின் அழகு சீக்ரெட்ஸ்!

''எப்போது முதல் உடல் ஆரோக்கியம் மேல் இவ்வளவு அக்கறை வந்தது?''

''2009-ல் தெலுங்கில் வெளியான 'ஜோஸ்’ படத்தில்தான் நான் சினிமாவுக்கு அறிமுகமானேன். அப்போ எனக்கு 17 வயசு. நல்ல உயரமா இருப்பதால், பார்க்க ரொம்ப ரொம்ப ஒல்லியாத் தெரிஞ்சேன். அந்தப் படத்துக்கு கோரியாகிராஃபி பண்ண வந்த ராஜூ சுந்தரம் மாஸ்டர், 'நீ என்ன இவ்ளோ ஒல்லியா இருக்குற?, சீக்கிரமா ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சு, பாடியை ஃபிட் பண்ற வழியைப் பாரு!’னு உரிமையாக் கோபப்பட்டார். அந்த நொடியில்தான் எனக்கு உடம்பு மேல் அக்கறை வந்தது. அந்த படம் முடியறதுக்குள்ளாகவே ஒரு நல்ல கோச்சைத் தேர்ந்தெடுத்து, அவரோட ஆலோசனைப்படி ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சேன்; யோகா மூலமாகவும் உடம்பை ஃபிட் பண்ணினேன். அதுக்குப் பிறகுதான் என் உடம்பு என் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதனாலதான் இப்பக்கூட 'அன்னக்கொடி’ படத்தில் வரும் ஒரு லைஃப் ஜர்னி கேரக்டருக்காகச் சின்னப் பொண்ணாகவும் பெரிய பெண்ணாகவும் எடையைக் கூட்டியும் குறைச்சும் ஈஸியா நடிக்க முடிஞ்சது.''

''உடல் ஆரோக்கியத்துக்காக நீங்க தொடர்ந்து செய்யும் விஷயங்கள் என்னென்ன?''

''யோகா, சிம்பிள் பயிற்சிகள், பரதம் இதெல்லாம் போக ஜாக்கிங் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கிரவுண்டில் உடம்பு முழுக்க நல்லா வியர்க்கும் அளவுக்கு ஜாக்கிங் போவேன். தினமும் சூரிய நமஸ்காரம் பண்ணுவேன். இதில் வைட்டமின்-டி தாராளமாகக் கிடைக்கும். காலையில் தினமும் பீட்ரூட், தர்பூசணி, மாதுளை இந்த மாதிரியான உடலுக்கு ரொம்ப சக்தி

கார்த்திகாவின் அழகு சீக்ரெட்ஸ்!

தரக்கூடிய காய் மற்றும் பழங்களில் இருந்து தயாரிக்கும் ஜூஸ் வகைகளில் ஏதாவது ஒன்றைக் குடிப்பேன். ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை உலர்ந்த பழங்கள் சாப்பிடுவேன். இதெல்லாம் எனக்கு ஷூட்டிங் நேரத்தில், தூசிகளாலும் அதிக லைட் வெளிச்சத்தாலும் சருமத்தில் பாதிப்பு வராமல் பாதுகாக்கும். மதியம் சப்பாத்தி, புல்கா, அப்புறம் கொஞ்சம் பிரவுன் ரைஸ் சாப்பிடுவேன். ஆறு மணிக்கு ரொட்டியும் சப்பாத்தியும் சாப்பிடுவேன். இதனால், என் உடம்புக்கு நிறைய கார்போஹைட்ரேட் கிடைக்கும். சரியா ரெண்டு மணி நேரம் கழித்து ஜூஸ் மட்டும் குடிப்பேன். ராத்திரி சாப்பிட மாட்டேன்.''

''ஜிம்முக்குப் போவீங்களா?''

''போவேன். ஆனால், ரொம்ப ஹெவியான ஒர்க்அவுட்ஸ் பண்ண மாட்டேன். பவர் ஒர்க்அவுட்ஸ் எனக்கு செட் ஆகாது. அதே சமயம் நல்ல ரிசல்ட்ஸ் தரும் எளிமையான ஒர்க்அவுட்ஸ் செய்யத் தவற மாட்டேன். வாக்கர்ல கொஞ்ச நேரம் நடப்பேன். உடம்பில் இருக்கும் தசைகள் இறுகி வலுப் பெறுவதற்காக ட்ரெட்மில், ஏரோபிக்ஸ் மாதிரியான கார்டியோ வகை ஒர்க்அவுட்ஸ் செய்வேன். இதெல்லாம் என்னோட ட்ரெயினரோட ஆலோசனையோடுதான் செய்வேன். பிறகு ஜிம்மிலேயே கொஞ்ச நேரம் மூச்சுப்பயிற்சியும் பண்ணுவேன்.''

''உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கே... அதுக்காக என்ன பண்றீங்க?''

''இது எங்க அப்பா, அம்மாவோட ஜீன்கள் எனக்கு கொடுத்த பரிசு. வைட்டமின் ஏ அதிகமா இருக்கும் உணவுகள் நிறைய எடுத்துப்பேன். என்னோட கண்களின் பாதுகாப்புக்காக டாக்டரோட ஆலோசனைப்படி தொடர்ந்து கண்ணுக்கு ஒரு சொட்டு மருந்து போட்டுக்குவேன். இது ஷூட்டிங் நேரத்தில் கண்களில் விழும் தூசிகளை வெளியேத்திடும். ராத்திரி சீக்கிரமாகவே தூங்கிடுவேன். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நீங்க என் வீட்டுக்கு வந்தால், பெட்லதான் என்னைப் பார்ப்பீங்க. அந்த அளவுக்குத் தூக்கம் எனக்குப் பிடிக்கும். இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் நல்லாத் தூங்குவதால், என் கண்களில் கருவளையம் மாதிரியான பிரச்னைகள் இல்லவே இல்லை.''

''உங்களோட ஃபிட்னெஸ் ரோல்மாடல் யாரு?''

''எங்க அப்பா ராஜசேகர்தான். அவர் யூத்தா இருக்கும்போது, மிஸ்டர் இந்தியா டைட்டிலோட ரன்னர்-அப். கன்னாபின்னான்னு எக்சர்சைஸ் பண்ணுவார். சான்ஸே இல்லை!''

- உ.அருண்குமார்