Published:Updated:

'ஸ்வீட்டி' டாப்ஸியின் பியூட்டி டிப்ஸ்!

''ஸ்லிம் ஆகணுமா... ஸ்விம் பண்ணுங்க!''

##~##

டாப்ஸி... டமில் சினிமாவில் முன்னணி நடிகை. பாருங்க... டாப்ஸியிடம் பேசினா தமிழே தள்ளாடுகிறது நமக்கு. கொஞ்சம் ரிலாக்ஸ்... ம்... இப்போ எழுதலாம். அழகான குண்டுப் பொண்ணாக அறிமுகம் ஆகி, இப்போ சிலையாக மெலிந்து இருக்கிறார் டாப்ஸி. பேசுகிறாரா... சிரிக்கிறாரா... என ஆராய்ச்சி நடத்தினாலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியரு கொஞ்சலும் குஷியுமான யுவதி. டாப்ஸி உடனான 'டாப் மோஸ்ட் பியூட்டி சீக்ரெட்' பற்றிய ஒரு 'ஜில்’ பேட்டி...

'வெள்ளாவி வெச்சித்தான் வெளுத்தாய்ங்களா’ என்ற பாடலை படத்துல வர்ற உங்களுக்காகவே எழுதுன மாதிரி இருக்கே... உங்க ஸ்கின், கலரை எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க?

''என் ஸ்கின் டைப் எனக்குக் கிடைச்சப் பெரிய கிஃப்ட். அதை கடைசிவரை அப்படியே பார்த்துறதுதான் சேலஞ்சிங்கான விஷயமே. அதனால் ஸ்கின்னைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன். முக்கியமா உதடுக்கு ரொம்பவே கேர் எடுத்துக்குவேன். ஸ்மோக், ட்ரிங்ஸ் பக்கமே போகமாட்டேன். கஞ்சி, ஜூஸ், நிறைய வாட்டர் என்று திரவ உணவை அதிகமாக எடுத்துப்பேன். முக்கியமான விஷயம்... என்னை எப்பவும் சந்தோஷமா வைத்துக் கொள்வேன். ஏன்னா, நம்ம மனசுதான் முகத்துல ரிஃப்ளெக்ட் ஆகும். கஷ்ட நஷடம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்யும். நல்லது, கெட்டது ரெண்டுமே நடக்கும். எது நல்லதோ அதை எடுத்துட்டு கஷ்டத்தை விட்டுடணும். எப்பவும் பாசிட்டிவ்வா, மனசை காம் அண்ட் கம்போஸ்டா வெச்சிருந்தா உடம்பு, சருமம், முகமும் க்ளோயிங்கா இருக்கும்.''

'ஸ்வீட்டி'  டாப்ஸியின் பியூட்டி டிப்ஸ்!

''ஸ்லிம் அண்ட் க்யூட்டா இருக்கீங்களே. அது எப்படி?''

''ரெகுலரா ஜிம் போய் வொர்க்அவுட்ஸ் பண்ணிட்டு இருக்கேன். உடம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது தவிர தினமும் ஒன் அவர் ஸ்விம் பண்றேன். இது ரெண்டு போதாதா உடம்பை ஸ்லிம்மா வெச்சிருக்க?''

''டயட்டிங் உண்டா டாப்ஸி?''

''நோ சான்ஸ். ஐ லவ் ஃபுட். பொதுவா, எல்லாருமே நல்லா சாப்பிடலாம். ஆனா, சாப்பிட்டதும், உட்கார்ந்திட்டே இருந்தால்தான் வெயிட்போடும். அதுக்கேத்த வொர்க்அவுட் பண்ணி எக்ஸ்ட்ரா கலோரிகளை விரட்டிடணும். அதுதான் பெஸ்ட். என்னோட ரொட்டீன் டயட், பசிக்கும்போது மட்டும் சாப்பிடுவேன். கண்டபடி சாப்பிட மாட்டேன். அதுவும் எப்போதுமே அளவோடுதான்.  நைட்ல ஹெவியாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுவேன். நிறையத் தண்ணி குடிப்பேன்''.

'ஸ்வீட்டி'  டாப்ஸியின் பியூட்டி டிப்ஸ்!

'' 'குட்டைப் பாவாடை தேவதை’னு உங்களுக்கு ஒரு நிக்நேம் இருக்கு தெரியுமா? உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் பற்றி.?''.

(சிரிக்கிறார்) ''இந்த வயசுல குட்டைப் பாவாடை போட்டுக்காம எப்பங்க போட்டுக்குறது? எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே ஸ்டைலா இருக்கப் பிடிக்கும். முடிஞ்ச வரைக்கும் ட்ரெண்டியாக, ஃபேஷனில் அப்டேட்டடா இருப்பேன். விதவிதமான டிசைனர் காஷ§வல் டிரெஸ், ஆக்சஸஸ்சரீஸ் ரொம்பப் பிடிக்கும். கலர்ஸ்ல பொருத்தவரைக்கும் நான் ரொம்ப சூஸி... பிரைட் கலர்கள் ரொம்பவே பிடிக்கும். சினி ஃபீல்டுக்கே உரித்தான அழகு வேணும் இல்லையா? இப்படி எல்லாம் பண்ணித்தானே ஆகணும்?''

''இது சம்மர் சீஸன்... உங்களுக்குப் பிடிச்ச பழம், காய்கறி எது?''

''தர்பூசணி ரொம்பப் பிடிக்கும். காய்கறியில் காளான்தான் என் ஆல் டைம் ஃபேவரைட்''.

''இப்ப என்ன படத்தில் நடிக்கிறீங்க?''

''நடிப்பு ஃபீல்டில் கொஞ்ச வருஷமாவது நிலைச்சிருக்க பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப முக்கியம். தமிழ்ல விஷ்ணுவர்த்தன் படம், அப்பறம் லாரன்ஸுடன் முனி பார்ட் - 3. டாப்சி இப்ப படுபிசி தெரியுமா.''

''ரசிகர்களுக்கு நீங்க சொல்ற பியூட்டி டிப்ஸ்?''

''ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா உணர்வுபூர்வமா வாழ கத்துக்குங்க.  

நிறையத் தண்ணி குடிங்க. ஸ்மோக் பண்ணாதீங்க, குடி பக்கம் போகாதீங்க... நிறைய உடற்பயிற்சி செய்யுங்க.  அப்பத்தான் ரொம்ப நாள் இளமையா இருக்க முடியும். உடல் மீதான அக்கறையும், லைஃப்மேல இருக்குற ஆர்வமும்தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். மறந்திடாதீங்க மகிழ்ச்சி உங்கள் கையில்!''

டாப்ஸி சொன்னா ஓ.கே... ஜி!  

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு