Published:Updated:

வியர்க்கட்டுமே கொஞ்சம்...

வியர்க்கட்டுமே கொஞ்சம்...

வியர்க்கட்டுமே கொஞ்சம்...
##~##

'நெற்றி வியர்வை நிலத்தில் விழ’ உழைத்த தலைமுறை நம்முடையது. உடலில் வியர்வை அதிகம் சுரந்தால்தான், கொழுப்பு கரையும்; உடலின் எடையும் கச்சிதமாக இருக்கும். ஆனால், வியர்வை சிந்தி வேலை பார்ப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? இருக்கையில் அமர்ந்து இரு கைகளுக்கு மட்டுமே வேலை என்றாகிவிட்டது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஃபாஸ்ட் மூவிங்கில் வொர்க்அவுட்ஸ் செய்வதன் மூலம் உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம் என்கிறார் ஓ2 பிட்னெஸ் மையத்தின் சிறப்பு ட்ரெய்னர் செந்தில்குமரன்.

''அதிரவைக்கும் மியூசிக் ஒலிக்க, நடன அசைவுகளுடன் செய்யும் போக்வா என்ற பயிற்சி இப்போது இந்தியாவில் பிரபலம். இதை வடிவமைத்தவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஃபிட்னெஸ் குரு பால் மாவி.

வியர்க்கட்டுமே கொஞ்சம்...

தினமும் பல்வேறு வொர்க்அவுட்ஸ் செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம்தான். ஆனால்,

வியர்க்கட்டுமே கொஞ்சம்...

அத்தனைப் பயிற்சிகளும் ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடும். நடனம் போன்ற உடல் அசைவுகளைக் கொண்ட இந்த போக்வா பயிற்சியில் ஈடுபடும்போது உடல் மற்றும் உள்ளம் இரண்டுமே உற்சாகத்தில் துள்ளுவது நிஜம்.'' என்ற செந்தில்குமரன் பயிற்சிமுறையைப் பற்றிச் சொன்னார்.

  போக்வா ஃபிட்னெஸ் என்பது பயிற்சி செய்பவர்கள் எழுத்துக்களையும் எண்களையும் தங்கள் காலால் தரையில் வரைந்துகொண்டே கூடுதலாக கார்டியோ வொர்க்அவுட்ஸ் செய்யவேண்டும்.

  போக்வா எல் மற்றும் போக்வா ஜெ போன்ற பல எழுத்துக்களை ஸ்டெப்பாகப் போட வேண்டும். அதற்கு ஏற்றபடி மியூசிக் ஒலிக்கும். சைகை மொழியிலேயே அடுத்தடுத்த ஸ்டெப்களை சிக்னலாக டிரெயினர்கள் காட்டுவார்கள். குரூப்பாக செய்யும்போது, ஒருவிதப் பூரிப்பும், ஏகப்பட்ட எனர்ஜியும் தெறிக்கும்.

 எதிரில் பெரிய அளவில் நிலைக்கண்ணாடி இருக்கும். நம் அசைவுகளை நாமே பார்க்கும்போது தன்னம்பிக்கை பிறக்கும்.  

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் செய்யலாம். ஆனால், முதலில் ஒரு பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்ட பிறகு செய்வது நல்லது.

  இதற்கென மியூசிக் சி.டி-க்கள் கிடைக்கின்றன. வீட்டின் சின்ன ஹாலில் மியூசிக் ஒலிக்கவைத்து தினமும் வொர்க் அவுட்ஸ் பண்ணலாம்.

  உடல் நலப் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இதைச் செய்யலாம்.

 பலன்கள்:

  இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

  இந்தப் பயிற்சியைச் செய்யச் செய்ய உடல் நன்றாக வியர்க்கும். தேவையற்ற கொழுப்பு குறைந்து, உடலை ஃபிட்டாக வைத்திருக்கும். சருமம் நன்றாகப் பொலிவு பெறும்.

  இதில் சில ஸ்டெப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு தினமும் 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் செய்யலாம்.

- உமா ஷக்தி, படங்கள்: செ.நாகராஜன்

மாடல்கள் - ராஜ், செந்தில், ஆயிஷா, ரம்யா ரவிகுமார், ஷீனா