Published:Updated:

''சிரிச்சா... அழகாகலாம்!'' தீக்ஷா சேத் பியூட்டி ரகசியம்

''சிரிச்சா... அழகாகலாம்!'' தீக்ஷா சேத் பியூட்டி ரகசியம்

'ராஜபாட்டை’ பட நாயகி யூத் தீக்ஷா சேத்தை நினைவு இருக்கிறதா? 5 அடி 9 அங்குல உயரம், 59 கிலோ எடை என பெர்ஃபெக்ட் பார்பி கேர்ள். நடுவில் சில காலம் தெலுங்கில் தூள் கிளப்பியவர், திரும்பவும், சிம்புவுடன் 'வேட்டை மன்னன்’ படத்தில் நடிக்கிறார். 'கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்’ என்று இந்தி, தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளைத் தேனில் கலந்ததுபோல் சிணுங்கியவரின் பியூட்டி ரகசியம் இங்கே...

''சூப்பர் ஸ்லிம் பியூட்டியா இருக்கீங்களே எப்படி?''

''விரும்பினதைச் சாப்பிடுவேன். ஆனா, அதுவும் லிமிட்தான்.  ஐ லவ் பஞ்சாபி ஃபுட்ஸ். மீன், சாலட், வெஜிடபிள்ஸ்னு இந்திய உணவு எல்லாமே பிடிக்கும். ஹெல்த்தியான சாப்பாடு எதுவா இருந்தாலும் அதுக்கு நான் அடிமை. ஆனால், என் அளவு தெரிஞ்ச அடிமை. தவிர உடம்பை ஃபிட்டா வெச்சிருக்க, ஸ்விம்மிங், ஏரோபிக்ஸ் ரெண்டும் ரெகுலராப் பண்றேன். பேசிக்கலி நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.  தினமும் காலை 30 நிமிஷம் டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுவேன். இதுவேம் உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கு.  காலையில் ஒரு மணி நேரம் ஜாக் பண்ணுவேன். வாக்கிங்கை விட இது பெஸ்ட்.  எது தவறினாலும் ஸ்விம்மிங் செய்ய தவறவே மாட்டேன். குறைஞ்சது இரண்டு மணி நேரம் தினம் 'ஸ்விம்’ கட்டாயம் செய்வேன். இந்தப் பயிற்சி எல்லாமே, உடம்புல இருக்கிற கெட்ட நீரெல்லாம் வியர்வையா வெளியேத்திடும்.  உடம்புல அநாவசிய கொழுப்பு சேராது.''  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''சிரிச்சா... அழகாகலாம்!'' தீக்ஷா சேத் பியூட்டி ரகசியம்

''உங்க ஸ்கின், பேபி ஸ்கின் மாதிரி மென்மையா இருக்கே. ஸ்பெஷல் கேர் எடுக்கிகறீங்களா?

''என் அப்பா ஐ.டி.சி-யில் வேலை பாத்தப்போ, அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகும். கிட்டத்தட்ட இந்தியால எல்லா ஊருக்கும் போயிருக்கேன். அஞ்சு வருஷம் சென்னையில்கூட இருந்திருக்கோம். இப்ப... ஐதராபாத். அந்தந்த ஊருக்கு ஏற்ப, நம்ம ஸ்கின் தன்மை மாறிட்டே இருக்கும். அதனால், மாய்ஸ்சரைஸ் க்ரீம்ஸ் நிறைய யூஸ் பண்ணுவேன். நல்ல உணவுப் பழக்கவழக்கம், ஹெல்த்தியான லைஃப் ஸ்டைல் கூடவே தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும்... ஸ்கின் ஜொலிக்கும். மனசும் உடம்பும் ரொம்ப லேசா இருக்கும். தினமும் மறக்காம கஞ்சி, இளநீர், ஜூஸ்னு லிக்விட் ஃபுட் நிறைய எடுத்துப்பேன். நிறைய தண்ணீர் குடிப்பேன்.  இதனால்தான் என் ஸ்கின் பளபளப்பா இருக்கு.''

    ''உங்க ஸ்மைல் ரொம்ப க்யூட்....''

''சிரிச்சா... அழகாகலாம்!'' தீக்ஷா சேத் பியூட்டி ரகசியம்

''மனசு சந்தோஷமா இருந்தால்தான் சிரிப்பே வரும். அதுவே அழகை அதிகப்படுத்திடும். என்னோட இயல்பே எப்பவும் உற்சாகமா சிரிச்சிட்டு இருக்கறதுதான். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருக்கு. எப்ப பாரு சோகமா இருந்தீங்கனா, நோயாளி போல ஆகிடுவீங்க. சின்னச் சின்ன விஷயங்களைக்கூட ரசிச்சு, எப்பவும் மனசை சந்தோஷமா வெச்சிருக்க பழகிக்கணும்.''  

''உங்க நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு. எதாவது ஹோம் வொர்க் பண்ணுவீங்களா?''

''எல்லாவித உணர்ச்சிகளும் நமக்குள்ளயே இருக்கும். நான் நடிக்கற படங்கள்ல அதை யோசிச்சு வெளிப்படுத்துவேன். எனக்கு இந்த இண்டஸ்ட்ரி ரொம்பவே பிடிச்சிருக்கு.

''பொழுதுபோக்கு?''

''மழைக்காலம் வந்தால் என்னை வீட்டுல பார்க்க முடியாது.  வெளியில் போய், மழையில் சொட்டச் சொட்ட நனையறது ரொம்பப் பிடிக்கும். இதுவரைக்கும் சளி, தும்மல்கூட வந்ததில்லை.  ஆழ்கடல் தொடர்பான புத்தகங்களை வாங்கி வீட்டுல அடுக்கியிருக்கேன். நேரம் கிடைக்கிறப்ப எல்லாம், படிப்பேன். டிவி சேனல்ல, வானம், பூமி, ஆழ்கடல் என்று ஆராய்ச்சி பற்றிய விஷயங்களை போடும்போது, உடனே, பார்க்க உட்கார்ந்திடுவேன்.  

''பிடிச்ச விஷயங்கள்?''

''டிரெஸ் விஷயத்துல ஜீன்ஸ், டி ஷர்ட் ரொம்பப் பிடிக்கும். தெலுங்கு படத்துல புடவைக் கட்டி நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்ப பழகிடுச்சு. எந்த டிரெஸ்ஸா இருந்தாலும் அது நமக்கு சௌகர்யமா இருக்கணும்.  அதுதான் முக்கியம். அடிக்கடி ஆயில் மசாஜ் பண்ணிப்பேன்.  ஆயில், தலையில் படும்போதே, 'ஜில்’னு உடம்பு குளிர்ச்சியாயிடும்.  உடம்பும், மனசும் சோர்வில்லாம வைத்துக் கொள்ள மசாஜ் ரொம்பவே நல்லாயிருக்கு.''  

- உமா ஷக்தி