தமிழ் சினிமாவின் தடம் மாற்றிய தரமான இயக்குநர் மணிரத்னம். தப்பித்தவறிப் பேசினால்தான் உண்டு. அவ்வளவு அமைதி. ஆனால், இவரைப்பற்றிப் பேசாமல் தமிழ் சினிமாவில் எந்த சாதனையும் நிகழ்ந்தது இல்லை. அசாத்திய படைப்பாளரின் ஃபிட்னெஸ் ரகசியம் இங்கே...

தினமும் சரியாக அதிகாலை நாலரை மணிக்கு எழுந்துவிடுவார். கோல்ப் மைதானத்துக்குச் சென்று ஏழு மணி வரை உற்சாகமாக விளையாடுவார்.

தினமும் யோகா உண்டு. கடுமையான ஆசனங்களைக்கூட பயிற்சியாளர் உதவி இல்லாமல் தானே செய்வார்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஜிம்முக்குச் சென்று கார்டியோ வொர்க்அவுட்ஸ் செய்வார்.

காலையில் ஸ்ட்ராங் ஃபில்டர் காபி, சிறிது நேரம் கழித்து ஓட்ஸ் கஞ்சி அல்லது பழங்கள். பிறகு இட்லி அல்லது தோசை. அதன் பின் ஜூஸ். மதியம் மிகக் குறைவான சாதத்துடன் கீரை, காய்கறிகள் சாப்பிடுவார். தயிர், எண்ணெய், ஸ்வீட்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவார். மாலை ஜூஸ். இரவு உணவாக ஏதாவது டிபன்.

'சரியான நேரத்துக்குத் தூங்குவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்பார்.

அமைதி விரும்பி. தனிமையில் அமர்ந்து தன் படங்களுக்கான கதைகளை எழுதுவார்.

இயற்கையை நேசிப்பவர். வீட்டிலும், அலுவலகத்திலும் பச்சை பசேலென அழகான தோட்டம் அமைத்து அதைப் பார்த்து பார்த்து ரசிப்பவர். கோடைக் காலம் என்றாலே, கொடைக்கானலில்தான் வாசம்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் புத்தகங்கள் படிப்பது, சினிமா பார்ப்பது என்று நாளின் பெரும்பகுதியைச் செலவிடுவார்.

யார் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளி விடுகிற இயல்பு.

உடை விஷயத்திலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர். எளிமையான பருத்தி ஆடைகளை விரும்பி அணிவார்.

- உமா ஷக்தி