Published:Updated:

''அழகுக்குக் காரணம் 6 வேளை உணவு!''

கணேஷ் வெங்கட்ராமனின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

##~##

'உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்து, அனைவரையும் ஈர்த்தவர் கணேஷ் வெங்கட்ராமன். ஸ்வீட் ப்ளஸ் ஸ்ட்ராங் பையன். 'தீயா வேலை செய்யனும் குமாரு’, 'இவன் வேற மாதிரி’ என வரிசையாகப் படங்களில் படு பிஸியாக இருந்தாலும், தன் ஃபிட்னெஸ் மீதான காதல் தொடர்கிறது.

 அதிகாலையிலேயே ஆழ்வார்பேட்டை 'கோர்’ ஜிம்மில், செம ஜோராக வொர்க்அவுட்ஸ் செய்தபடி இருந்தவரிடம் ஓர் ஆரோக்கியமான சந்திப்பு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உங்க பாடி ஃபிட்னெஸோட ஆரம்பப் புள்ளி எது?''

''அழகுக்குக் காரணம் 6 வேளை உணவு!''

''ஸ்கூல் படிக்கும்போது நான் எல்லா விதமான விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வேன். வாலிபாலில் ரொம்ப ஆர்வம். நான்தான் காலேஜ் டீம் கேப்டன். மாநில அளவில் நிறைய ஜெயிச்சிருக்கோம். அடிக்கடி காடுகளுக்குப் போய் டென்ட் போட்டுத் தங்கி, பெரிய மலைகளில் ட்ரெக்கிங் போவோம். அதனால், உடம்பு தானாகவே ஃபிட்டா இருக்கும். தொடர்ந்து உடல் ஆரோக்கியமா இருக்க நிறைய ஹெல்த் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிச்சேன். யோகா, தியானம் இதெல்லாம் முறையாகக் கத்துக்கிட்டேன். தற்காப்புக் கலைகள் எனக்கு அத்துப்படி. நண்பர்களோட போட்டி போட்டு ஜிம்முக்குப் போக ஆரம்பிச்சேன். ஏற்கெனவே கொஞ்சம் ஃபிட்டா இருந்த உடம்பு, அதன் பிறகு ஒரு அழகான வடிவத்துக்கு வந்தது. காலேஜ் முடிஞ்சதும் மிஸ்டர் இந்தியாவில் கலந்துக்கிட்டேன். அதில் செலக்ட் ஆகி, துருக்கியில் 92 நாடுகள் கலந்துக்கிட்ட 'மிஸ்டர் வேர்ல்டு’ போட்டியில் இந்தியா சார்பில் கலந்துக்கிட்டு முதல் ஐந்து பேரில் ஒருவனா வந்தேன்.''

''உங்க பாடி ஃபிட்னெஸ் சினிமாவில் உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கு?''

''அழகுக்குக் காரணம் 6 வேளை உணவு!''

'''உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்காகப் பயங்கரமா உடம்பு ஏத்தணும்னு கமல் சார் சொல்லிட்டார்.

''அழகுக்குக் காரணம் 6 வேளை உணவு!''

மூணு மாசம் டைம் எடுத்துக்கிட்டேன். ஜிம் வொர்க்அவுட்ஸ் பொறுத்தவரைக்கும் கோர் ஜிம்மைச் சேர்ந்த அஜித் ஷெட்டிதான் என் குரு. அவருடைய ஆலோசனைப்படி, ஒரு சார்ட் தயார் பண்ணி, வொர்க்அவுட்ஸ், டயட், ஓய்வு இந்த மூன்று விஷயங்களையும் சரிவிகிதக் கலவையில் செய்தேன். மூணே மாசத்தில் சொன்ன மாதிரியே, உடம்பைக் கொண்டுவந்து, இப்பவும் அப்படியே மெயின்டைன் பண்ணிட்டு இருக்கேன். கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகள் தெரிஞ்சு வெச்சிருக்கிறது, ஃபைட் சீன்களில் ரொம்பவே உதவியா இருக்கு. ஜிம் வொர்க்அவுட்ஸ் முடிஞ்சதும்... யோகா.''

''ஃபிட்னெஸ் வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியம்?''

''வாழ்க்கையில் மிகப் பெரிய முதலீடுன்னு நான் நினைக்கிறது ஆரோக்கியம்தான். ஒரு மனுஷன்கிட்ட பணம், புகழ் எல்லாம் இருந்தும் ஹெல்த் இல்லேன்னா... அதெல்லாம் வேஸ்ட். ஃபிட்டாக இருந்தால், அதுக்குக் கிடைக்கிற மரியாதையே தனி. ஒருத்தருக்குத் தற்காப்பு கலைகள் தெரிஞ்சிருக்கிறதும் ரொம்ப முக்கியம். படிக்கும்போதும் சரி, ஊர் சுத்தும்போதும் சரி, அது நம்மளை அலெர்ட்டா வைத்திருக்கும். இதெல்லாம் கத்துக்கிட்டோம்னா, சரியான நேரத்துக்கு விழிப்பு... சரியான நேரத்துக்குத் தூக்கம்னு வாழ்க்கை ஒரு ஒழுங்குக்குள் வந்துடும்.''

''உங்க டயட் பத்தி சொல்லுங்க?''

''பாடி ஃபிட்னெஸ் விஷயத்தில், நான் 60 சதவிகிதம் டயட்டைத்தான் நம்புறேன்.  பொதுவாக என் சாப்பாட்டில் சிக்கன், மீன், வொயிட் மீட் இதெல்லாம் அதிகம் இருக்கும். ரெட் மீட் குறைவாத்தான் சாப்பிடுவேன். வெள்ளை அரிசி சாப்பிடவே மாட்டேன். எப்போதாவது கொஞ்சமா பிரவுன் ரைஸ் சாப்பிடுவேன். ஒரு நாளைக்குக் கொஞ்சம் கொஞ்சமா ஐந்து அல்லது ஆறு முறை சாப்பிடுவேன். இயல்பான ஜீரணம்தான் உடல் நலத்துக்கும் அழகுக்கும் முக்கியமானது. பழங்கள் நிறைய சாப்பிடுவேன். ஜிம்முக்கு வர்றதுக்கு முன்னாடி ரெண்டு வாழைப்பழம், ஓட்ஸ் சாப்பிடுவேன். ஜிம்மில் இருந்து வந்து 11 மணிக்கு ஆப்பிள், வாழைப்பழம், உலர்ந்த பழங்கள் கலந்த ஒரு மில்க் ஷேக் குடிப்பேன். இதுதான் என் காலை டிஃபன். அடிக்கடி பெருங்காயம் கலந்த மோர் குடிப்பேன். ராத்திரி எட்டு மணிக்கு நிறைய சாலட், கொஞ்சம் சிக்கன் சாப்பிடுவேன். சரியா 11 மணிக்கு தூங்கப்போயிடுவேன்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், வெண்ணெய், வறுத்த உணவுகள் இதெல்லாம் எனக்கு அறவே பிடிக்காது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 'ஈட்டிங் டே’வா கொண்டாடித் தீர்த்துடுவேன். அன்னைக்கு ஒரு நாள் மட்டும் எந்தவிதமான டயட்டும் இல்லாமல் எனக்குப் பிடிச்ச சாக்லேட், பிரியாணினு வெளுத்து வாங்கிடுவேன். ஆனால் மத்த நாட்கள்ல ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருப்பேன்.''

''அழகுக்குக் காரணம் 6 வேளை உணவு!''

''ஜிம்முக்குப் போறவங்களுக்கும் நீங்க கற்றதும் பெற்றதும்னு என்ன அட்வைஸ் தருவீங்க?''

''எதுக்குமே ஒரு முறை இருக்கு. பாடி ஃபிட்னெஸும் அப்படித்தான். சும்மா, டி.வி.யில் ஒருத்தரைப் பார்த்துட்டு அவர் உடம்பு மாதிரி நாமும் கொண்டுவரணும்கிறதில் தப்பு இல்லை. ஆனால், உடனடியாகக் கொண்டுவரணும்னு நினைப்பது தப்பு. முறைப்படி, ஒரு சரியான பயிற்சியாளருடன், சரியான உத்திகளுடன் படிப்படியாக உடம்பை ஃபிட் செய்வதுதான் நல்லது. இதுதான் நான் கத்துக்கிட்டது. அதுதான் புத்திசாலித்தனம்!''

- உ. அருண்குமார்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்