Published:Updated:

பார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்!

''உடலை வருத்தாததே உண்மையான அழகு!''

பார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்!

''உடலை வருத்தாததே உண்மையான அழகு!''

Published:Updated:
##~##

'பூ’ படத்தில் அறிமுகமான பூ, இப்போது 'மரியான்’ படத்திலும் மலராகவே! ஆம், மரியான் படத்தில் பார்வதி பாத்திரத்தின் பெயர் பனிமலர். 

உலகளாவிய திரைப்படங்கள், மலையாள நாவல்கள் எனச் சரளமாகச் சிலாகிக்கும் சேர நன்னாட்டிளம் பெண்ணின் பியூட்டி சீக்ரெட்ஸ் இங்கே...

''உங்களைப் பார்த்ததும் 'ப்பச்சக்’ என்று பிடிக்கும் அளவுக்கு  அழகான முக அமைப்பு. கூடவே சூப்பரான சருமம். என்ன சீக்ரெட்?''  

''எனக்கு இயல்பா இருக்கத்தான் பிடிக்கும். ஸ்கின் பாதுகாப்புக்காக, சன்ஸ்க்ரீன் போட்டுக்கணும்கிறது அம்மாவோட அட்வைஸ்.  அதை மட்டும் விடாமப் போட்டுக்கிறேன். மத்தபடி எனக்கு மேக்அப் போட்டுக்கப் பிடிக்காது. ஷூட்டிங் இல்லாதப்ப, வெளியில் எங்கே போனாலும், மினிமம் மேக் அப்லதான் போவேன். பிளீச்சிங், பேஷியல் எதுவும் பண்ணிக்க மாட்டேன்.

பார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்!

சருமத்தை இயற்கையா சுவாசிக்க விடணும்.  மேக் அப், க்ரீம்களை எல்லாம் போடறதால், சருமத்துல அடைப்பு ஏற்பட்டு இயற்கையா இருக்கிற பளபளப்பு கெட்டுப் போயிடும். அதனால் பெரும்பாலும் தவிர்த்திடுவேன்.  அதுவே என் சருமம் பளபளப்பா,  பொலிவா இருக்கக் காரணம்.  இன்னும் சருமம் ஆரோக்கியமா  இருக்க, நிறையத் தண்ணி குடிப்பேன். முக்கியமா, இளநீர் தினமும் குடிப்பேன்.''

''உங்க ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''

''ரொம்பவே ஒல்லியா சதைப்பிடிப்பே இல்லாமல் இருப்பது எனக்குப் பிடிக்காது. நல்ல உடல்வாகுதான் அழகு.  என் உடம்பை, ஹெல்த்தியா வெச்சுக்க என்ன செய்யணுமோ, அதைத் தவறாம செய்வேன்.

பார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்!

அதற்காக, ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட்ஸ் எல்லாம் பண்றதில்லை. சில அடிப்படையான பயிற்சிகளைக் கத்துக்கிட்டு இருக்கிறதால, வீட்லயே தினமும் 15 நிமிஷம் செய்றேன். உடலைத் தேவையில்லாமப் போட்டு அலட்டிக்கக் கூடாது. அதே சமயம் சோம்பேறித்தனத்தையும் அனுமதிக்கக் கூடாது. இதுதான் என்னோட பாலிசி.''  

''பிடித்த உடையலங்காரம்?''

''நம் பெர்சனாலிட்டியை எந்த வகைங்கிறதை நம் டிரெஸ் செலக்ஷனே காட்டிடும். உடம்பை எக்ஸ்போஸ் பண்ற மாதிரியான உடைகள் எனக்குப் பிடிக்காது. முட்டிக்கு கீழ் வரைக்கும் வர்ற, லாங் ஸ்கர்ட்ஸ், லூஸ் டாப்ஸ் எப்பவும் என் ஃபேவரைட். சம்மர்ல லூஸ் ஃபிட்டிங்க்ல ஜிப்ஸி டைப் டிரெஸ், காட்டன்ல போடுவேன். பொதுவாவே, ஜீன்ஸ் மாதிரி உடம்பை இறுக்கிப் பிடிக்கிற டிரெஸ்னாலே, எனக்கு அலர்ஜி. போடற டிரெஸ் நமக்கு சௌகரியமா இருக்கணும்.  பொருந்தாத உடைகளை எப்பவும் டிரை பண்ண மாட்டேன்.

ப்ரவுன், க்ரே, ப்ளாக் கலர் டிரெஸ் ரொம்பப் பிடிக்கும். சினிமா இன்டஸ்ட்ரியில் என் சோல் சிஸ்டர்னு சொல்ற அளவுக்கு நெருங்கிய தோழி ஸ்வாதி சொல்லி, இப்ப பிங்க், மஞ்சள் கலர் போட ஆரம்பிச்சிட்டேன்.''

பார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்!

''பிடித்த உணவு?''

''என் அம்மா பாரம்பரிய கேரள சமையல் எக்ஸ்பர்ட்.  அவங்க கையால பிரவுன் ரைஸ், சாம்பார், அவியல்னு எது செஞ்சாலும் அது அமிர்தம். எனக்கு சைவ உணவுகள்தான் இஷ்டம்.''

''நீங்க எந்த மாதிரியான பர்சனாலிட்டி?''

''நான் எமோஷனல் டைப். ரொம்ப சென்சிட்டிவ். அன்பா இருந்தாலும் சரி,  கோபமா இருந்தாலும் சரி எதையும் மறைச்சுவைச்சுக்கத் தெரியாம, சட்டுனு வெளிப்படுத்திடுவேன். அது பல சமயங்கள்ல எனக்குப் பிரச்னையாவும் இருந்திருக்கு. ஆனா, என்னைப் புரிஞ்சுக்கிட்ட நல்ல  ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.  நான் கொஞ்சம் தனிமை விரும்பி. ஷூட்டிங்ல 200 பேர்கூடத் தொடர்ந்து வொர்க் பண்றப்போ, திடீர்னு ஹோம்சிக் ஆயிடுவேன். வீட்ல, எனக்குன்னு ஓர் உலகத்துல சஞ்சரிக்கிறது ரொம்பவே பிடிக்கும். அது என்னையே நான் உணர்ந்துக்கிற இடம்.''

- உமா ஷக்தி,

படங்கள்: ஜெ.தான்யராஜூ