Published:Updated:

மருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

மருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

மருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

மருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

Published:Updated:
##~##

1.   உங்கள் உடல்நலப் பிரச்னை தொடர்பாக இரண்டாவது கருத்தைப் பெற விரும்புகிறீர்கள். ஆனால், உங்கள் மருத்துவர் அதெல்லாம் தேவை இல்லை எனக் கருதுகிறார் என்றால், என்ன செய்வீர்கள்?

அ. டாக்டர் நம்மிடம் எதையோ மறைக்கிறார் என்று நினைத்து உடனடியாக டாக்டரை மாற்றிவிடுவேன்.

ஆ. அவர் சொல்வது சரி என்று நினைத்து விட்டுவிடுவேன்

இ. நானாக வேறு ஒரு மருத்துவரை அணுகி இரண்டாவது கருத்தைப் பெறுவேன்.

3. தொடர்ந்து ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு உங்கள் நண்பர் அல்லது உறவினர்கள் மூலிகை மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். பயன்படுத்துவீர்களா?

மருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

அ. உடனடியாக அதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவேன்.

ஆ. பயன்படுத்தலாமா வேண்டாமா என யோசித்து முடிவு எடுப்பேன்.

இ. மருத்துவரை அணுகி அந்த மாற்று மருத்துவம் எனக்குச் சரியாக இருக்குமா எனக் கேட்டு அவர் பரிந்துரைப்படி செயல்படுவேன்.

4. உங்களுக்கு ஏதேனும் தொற்றுநோய் ஏற்பட்டு, தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மாத்திரை மருந்துகளைப் பரிந்துரைத்திருக்கிறார் டாக்டர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், என்ன பண்ணுவீர்கள்?

அ. அந்த மாத்திரைகளை உடனடியாக நிறுத்திவிடுவேன்.

ஆ. மாற்று மருத்துவத்தை நாடுவேன்.

இ. டாக்டரை அணுகி இந்த மருந்து வேலை செய்யவில்லை. வேறு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பேன்.

5. இடுப்புச் சதையைக் குறைக்க லிப்போசக்ஷன் செய்யலாம் என்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும், என்ன செய்வீர்கள்?

அ. அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை உடனடியாகத் தொடர்புகொள்வேன்.

ஆ. அந்த சிகிச்சையின் சாதக, பாதகங்களை ஆராய்வேன்.

இ. குடும்ப மருத்துவரிடம் பேசி இடுப்பு சதையைக் குறைப்பதற்கான சரியான சிகிச்சை எது எனக் கேட்பேன்.

6. மருத்துவர் உங்களுக்குச் சில பரிசோதனைகளைப் பரிந்துரைக்கும்போது அதுபற்றிய முழு விவரத்தையும் பெறுவீர்களா?

அ. அவசியம் என எனக்குத் தெரிந்தால் மட்டுமே டெஸ்ட் எடுப்பேன்.

ஆ. அவர் என்ன டெஸ்ட் பரிந்துரைத்தாரோ அதை அப்படியே செய்துவிடுவேன்.

இ. டெஸ்ட் ஏன் எடுக்க வேண்டும் என்ற விவரங்களைத் தெரிந்து, சரியான ஆய்வகத்தை நாடுவேன்.

7. எதிர்பாராத மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க உதவும், குடும்பம் முழுமைக்குமான காப்பீடு எடுத்துள்ளீர்களா?

அ. இல்லை, அதுபற்றித் தெரியாது.

ஆ. அலுவலகத்தில் எனக்கு மட்டும் மருத்துவக் காப்பீடு கொடுத்துள்ளனர். அதுவே போதுமானது.

இ. குடும்பத்துக்கு முழுமையான காப்பீடு எடுத்துள்ளேன்.

(மதிப்பெண்கள் அ-0, ஆ-1, இ-2)

10 முதல் 12 மதிப்பெண்கள் வரை

நீங்கள் எச்சரிக்கையான நபர். நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு சில விஷயங்களில் உங்களைச் சரிப்படுத்திக்கொண்டால், முழுமையான பாதுகாப்பு உங்கள் வசம்.

6 முதல் 9 மதிப்பெண்கள் வரை

ஓரளவுக்கு ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது. எந்த ஒரு சிகிச்சையைப் பரிந்துரைக்கும்போதும், அதுபற்றி வேறு ஒரு டாக்டரின் ஆலோசனை பெறுவது நல்லது. எந்த ஒரு மாற்று மருத்துவத்தை முயற்சிக்கும் முன் அது உங்களுக்கு ஏற்றதா என உங்கள் குடும்ப மருத்துவரிடமோ அல்லது அந்தந்த மாற்று மருத்துவ வல்லுனர்களிடமோ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நல்லது. எந்த ஒரு பரிசோதனையைப் பரிந்துரைத்தாலும் ஏன் எதற்கு எனக் கேளுங்கள். மேலும், டெஸ்ட் எடுக்கச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். குடும்பம் முழுமைக்கும் மருத்துவக் காப்பீடு எடுங்கள். இது அவசர காலத்தில் தேவையற்ற பதட்டத்தைத் தணிக்க உதவும்.

5 மதிப்பெண்களுக்கு கீழ்

நீங்களும், உங்கள் குடும்பமும் எப்போதும் ஓர் ஆபத்தான சூழ்நிலையிலேயே இருக்கிறீர்கள். முழுமையாக மாற்றிக்கொண்டால் மட்டுமே உங்களைப் பாதுகாக்க முடியும்.

- பா.பிரவீன்குமார்