Published:Updated:

கட்டத்துரையின் கட்டுடல் ரகசியம்!

ரியாஸ்கானின் சக்ஸஸ் ஃபார்முலா

கட்டத்துரையின் கட்டுடல் ரகசியம்!

ரியாஸ்கானின் சக்ஸஸ் ஃபார்முலா

Published:Updated:
##~##

கைப்பிள்ளையை நினைவிருந்தால், கட்டத்துரையையும் நினைவிருக்கும்.  'வின்னர்’ படத்தில், காமெடி கலந்த வில்லன் ரோலில் கலக்கியிருக்கும் கட்டத்துரை ரியாஸ்கான் தான் நம் ஃபிட்னெஸ் ஹீரோ.  சென்னை, வளசரவாக்கம் 'இன் ஷேப்’ ஜிம்மில் இருந்தார் ரியாஸ்கான். 

''உங்க ஃபிட்னெஸ் ரோல்மாடல் யார்?''

'' சில்வர்ஸ்டர் ஸ்டாலோன். என் ஸ்கூல் டைமில் அவரோட 'ஃபர்ஸ்ட் ப்ளட்’ ஹாலிவுட் படம் பார்த்தேன். யப்பா... அவரோட உடம்பைப் பார்த்து அசந்துட்டேன். உடனே அவர் நடிச்ச படங்களைத் தேடிப்பிடிச்சுப் பார்க்க ஆரம்பிச்சேன். ஆனால், முந்தைய படங்களில் ரொம்பவே ஒல்லியா இருந்த மனுஷன், எப்படி இப்படித் தன் உடம்பை மாத்தினார்னு வியப்பா இருந்தது. அன்னைக்கே அவர்தான் என் ஃபிட்னெஸ் ரோல்மாடல்னு முடிவு பண்ணிட்டேன்.  அவரோட படங்களைப் பார்த்து, பார்த்து நானும் ஜிம் போய், என் உடம்பை ஃபிட்டாக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசிலிருந்தே ஸ்போர்ட்ஸில் இருந்ததால், பாடி பில்டிங் ஈஸியா ஆச்சு. இருந்தாலும் அவசரப்படாமல் என்னோட டிரெய்னர்ஸ் சுரேஷ், ரஞ்சித்குமார் இவங்க ஆலோசனைப்படி முறையாக் கத்துக்கிட்டேன். அவங்கதான் எனக்கு இப்போ வரைக்கும் டிரெய்னர்ஸ்.''

கட்டத்துரையின் கட்டுடல் ரகசியம்!

''ஜிம்மில் என்னென்ன வொர்க் அவுட்ஸ் பண்ணுவீங்க?''

''நான் எந்த மாதிரியான கேரக்டரில் நடிச்சிட்டு இருக்கேனோ, அதுக்கு ஏத்த மாதிரிதான் வொர்க் அவுட்ஸ் பண்ணுவேன். கொஞ்சம் உடம்பு இளைச்ச மாதிரி இருக்கணும்னா, சாப்பாட்டில் அரிசி, உப்பு, சர்க்கரை, எண்ணெய் இதெல்லாம் குறைச்சுட்டு, முழுக்க முழுக்க கார்டியோ வகைப் பயிற்சிகளை செய்வேன். ஹெவியான எக்சர்சைஸ் செய்ய மாட்டேன். கொஞ்சம் வெயிட் போட்டு, உடம்பு பெருசா வேணும்னா, புரதச் சத்து இருக்கும் உணவுகளை அதிகமா சாப்பிட்டுட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை கொஞ்சம் அதிகம் செய்வேன். நம் உடம்பில் எத்தனையோ தசைகள் இருக்கு. ஒரு தசைக்கு ஒரு நாளை ஒதுக்கி, அந்த தசைக்குத் தேவையான பயிற்சிகளை மட்டும் செஞ்சு வலுப்படுத்துவேன். மறுநாள் மற்றொரு தசை. இதுதான் என்னோட வழக்கமான ஸ்டைல்.''

''உங்க டயட் என்ன?''

''தினமும் காலை ஆறு மணிக்கு ஒரு கப் கிரீன் டீ அல்லது ப்ளாக் டீ குடிப்பேன். 8 மணிக்கு, நான்கு அல்லது ஐந்து முட்டை வெள்ளைக்கருவும் ஒரு ஆப்பிளும் சாப்பிட்டுட்டு, ஜிம்முக்கு வந்து வொர்க்அவுட்ஸ் செய்வேன். அப்புறம், ஒரு புரோட்டின் ஷேக் ஒரு கப்பும், முளைகட்டின எல்லா  பயறு வகைகளும் கலந்த கஞ்சி இரண்டு டம்ளரும் குடிப்பேன். இதுதான் என் காலை டிஃபன். 11 மணிக்கு, ஏதாவது ஒரு கப்  ஜூஸ். மதியம் ஒரு மணிக்கு உடைச்ச சம்பா சாதத்துடன் கொஞ்சமா சிக்கன், மீன், மட்டன் இதில் ஏதாவது ஒன்று, ஒரு கப் ஆலிவ் எண்ணெயில் சமைச்ச காய்கறிகள் எடுத்துப்பேன். சாயந்திரம் 4 மணிக்கு ஒரு பிரவுன் பிரெட் சாண்ட்விச் சாப்பிடுவேன். அதுக்கு அப்புறம் ஜிம்முக்கு வந்து 20 நிமிஷம், கார்டியோ, ஸ்டிரெட்ச்சிங் பயிற்சிகள் செய்வேன். ராத்திரி கிரில்டு சிக்கனில் பாதி அல்லது ஒரு கப் சம்பா கஞ்சி குடிப்பேன். இதுதான் நான் வழக்கமாக் கடைப்பிடிக்கும் டயட். என் பட கேரக்டருக்கு ஏற்ப, என் உடம்பை ஏத்தி, இறக்கணும்னா... அதுக்கு, சில மாறுதல்கள் செஞ்சுப்பேன். அவ்வளவுதான்.''

கட்டத்துரையின் கட்டுடல் ரகசியம்!

''தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஹீரோக்களே ஃபிட்னெஸ் மீது அக்கறை காட்டாத காலத்திலேயே, நீங்க உங்க உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தீங்களே அது எப்படி?''

''சாதாரண மனுஷனைவிட, ஒரு நடிகனுக்கு பாடி ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். ஒரு படத்தில் உடம்பை ஏத்தவும்,  இன்னொரு படத்தில் கொஞ்சம் இளைச்சும் நடிக்கணும்னா, உடம்பு ஃபிட்டா இருந்தால்தான் சாத்தியம். இண்டஸ்டரியில் எப்பவும், 'ரியாஸ் அவரோட பாடியை நல்லா மெயிண்டைன் பண்ணுவாருப்பா’னு சொல்லுவாங்க. ஃபிட்னெஸ் விஷயத்தில் ஏதாவது சந்தேகம்னா, எனக்கு போன் பண்ணி கேட்பாங்க. ஷூட்டிங்கில் என்கூட நடிச்ச விஜய், அஜீத் உட்பட பல நடிகர்களுக்கு நான் ஃபிட்னெஸ் அட்வைஸ் சொல்லியிருக்கேன். ஹிந்தியில் 'கஜினி’ படம் பண்றப்ப அமீர்கான், வொர்க் அவுட்ஸ் பண்ணும்போதெல்லாம் என்னை அவர்கூடவே வைச்சிருந்தார். கமல் சார் 'ஆளவந்தான்’ படத்துல, ஃபைட் சீன்களின்போது, கமல் சாரும் நானும் ஆலோசனை செஞ்சு பண்ணினோம். அந்தப் படத்தில் கமல் சாருக்கு நான் டூப் போட்டேன். சுவர் இருந்தால்தான் சித்திரம்! ''

- உ.அருண்குமார்

 ரியாஸ்... அட்வைஸ்...

 சிக்ஸ் பேக் வைக்கிறது மட்டும்தான் ஃபிட்னெஸ்னு இல்லை. பாடி ஃபிட்னெஸில் சிக்ஸ் பேக் என்பது ஒரு ஸ்டைல். உடலில் இருக்கும் மொத்தத் தசைகளுக்கும் தேவையான அளவு பயிற்சி கொடுங்கள்.

 கன்னாபின்னாவென உடம்பை ஏத்தி, திடீர் பாடி பில்டரா மாற நினைக்கிறதும் தப்பு.

 உங்க உடம்பு ரொம்ப ஒல்லியாகவும் இல்லாமல், ரொம்ப குண்டாகவும் இல்லாமல் ஃபிட்டா இருக்க முயற்சி பண்ணுங்கள்.

 ஜிம்மில் டிரெய்னரின் ஆலோசணை இல்லாமல் எந்த வொர்க்அவுட்ஸும் செய்யாதீர்கள்.  

 வொர்க்அவுட்ஸ் செய்யும்போது, காயம் படாத அளவுக்குப் பாதுகாப்பாக செய்யுங்க.

 வொர்க்அவுட்ஸ் விஷயத்தில் மத்தவங்களோட போட்டி வேண்டாம்.  .

 ஒருத்தர் ஒரு கஷ்டமான பயிற்சியைத் தொடர்ந்து அரை மணி நேரம் செய்றார்னா, அது அவருடைய  அனுபவத்தால் இருக்கும். அதைப் போல், நீங்களும் உடனே செய்ய முயற்சிக்காமல்,  படிப்படியாகக் கத்துக் கொண்டு, பிறகு அவரை மாதிரி செய்யுங்கள்.  

 ஜிம்மில் பாதி நேரம் சும்மாவே இருந்துட்டு, கணக்குக்கு 'நான் மூணு மணி நேரம் ஜிம்மில் இருந்தேன்பா’னு சொல்வது ஜோக்!