Published:Updated:

கச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்!

கச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்!

கச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்!
##~##

பார்த்ததும் மனதில் பதியும் பளிங்கு முகம்.  சிணுங்கலான சிரிப்பு.  சிலிக்கான் விழிகள். அதிகப் பெண் ரசிகைகளைக் கொண்ட அழகுப் பெண்கள் பட்டியலில் சென்ற ஆண்டு, முதல் இடம் பிடித்த தமன்னாவின் பியூட்டி சீக்ரெட்ஸ் அனைத்துமே... ச்ச்ச்சோ ஸ்வீட்! 

''எல்லாருக்குமே அழகு, நிறம், உயரம் இதெல்லாமே... கடவுள் தந்த வரம் ப்ளஸ் அப்பா அம்மா கொடுத்த கிஃப்ட். அதை எந்த அளவுக்கு நாம தக்க வைச்சுக்கிறோம்... எப்படிப் பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அழகுக்கான தராசு ஏறும்... இறங்கும்!''

உங்களுக்கு பிடிச்ச உணவு?

பட்டர் சிக்கன், வெஜ் சாலட் ரொம்ப பிடிக்கும். ஹைதராபாத் பிரியாணி, மீன் குழம்பு விரும்பி சாப்பிடுவேன். தமிழ்நாட்டு  இட்லி, சாம்பாருக்கு ஈடு இணையே இல்லை.  சாதம், சப்பாத்தி, வட இந்திய உணவு வகை அத்தனையுமே விரும்பிச் சாப் பிடுவேன். ஆனா, நாம் நம் நாக்கைக் கட்டுப்படுத்தினாலே நோய் கட்டுக்குள் இருக்கும்னு சொல்வாங்க.  அதனால், எதுவா இருந்தாலும் அளவோடுதான். வயிறு ஃபுல்லா சாப்பிடவே மாட்டேன்.  ரசிச்சு ருசிச்சுக் கொஞ்சமா சாப்பிடுவேன். அந்தந்த சீஸன்ல கிடைக்கிற ஃப்ரூட்ஸ், வெஜிடபிள்ஸ்தான் எப்பவும் சாப்பிடுவேன். உணவில் ஆலிவ் எண்ணெய் அதிகம் சேர்த்துப்பேன்.

கச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்!

பொழுதுபோக்கு என்ன?

டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். நல்ல இசையைக் கேட்பதும், அதற்கு நடனம் ஆடுவதும் நம்மைப் புத்துணர்ச்சியோடு வைச்சிருக்கும். ஷூட்டிங் இல்லாதப்ப, புக்ஸ் படிப்பேன். கிரிக்கெட் மேட்ச் பார்ப்பேன். ஃபேமிலி, ப்ரெண்ட்ஸ்கூட நிறைய நேரம் செலவு பண்ணுவேன். வாழறதுக்குத்தானே வாழ்க்கை.

கச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்!

என்ன கலர்ஸ் ரொம்பப் பிடிக்கும்?

கச்சிதமான அழகு, கடவுள் தந்த வரம்!

எல்லாமே ப்ரைட் கலர்ஸ்! மனசுக்கு நெருக்கமான கலர், வெள்ளைதான். அதில் ஒரு பியூட்டி, கம்பீரம் இருக்கு. வொயிட் அண்ட் வொயிட் கலர்ல சிம்பிள் மிரர் வொர்க் பண்ணின சுடிதார்களை காலேஜ் படிக்கிறப்ப, விரும்பிப் போட்டுக்குவேன். அதுக் கடுத்து, ஆரஞ்ச் கலர். லவ்லி... ரொம்பவே யூத்தா காமிக்க ணும்னு ஆசைப்பட்டா, ஆரஞ்ச் மிக்ஸ்டு கலர்ஸ் யூஸ் பண்ணுங்க. எப்பவும் பதினாறு வயசு போல காட்டும்.

உங்கள் பியூட்டி ரகசியம்?  

என்ன அழகுப்படுத்திக்க ரொம்ப மெனக்கெட மாட்டேன். நடிக்கிறப்ப, போடும் மேக்-அப் தவிர, எப்பவும் சிம்பிளான மேக்-அப்தான் போட்டுக்குவேன். கொஞ்சம் நேரம் வெயில் பட்டாக்கூட ஸ்கின் பாதிச்சுடும். அதனால், தயிரில் கடலை மாவு கலந்து வாரத்தில் இரண்டு தடவை பூசுவேன். கறுமை எல்லாம் மறைஞ்சு 'பளிச்’னு ஆயிடும். இயற்கையான ப்ளீச்சிங் இதுதான். எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருந்தால், முகத்துல வயசு தெரியாது. அது பெரிய ப்ளஸ்... இளமையா, அழகா, ஆரோக்கியமாத் தெரியணுமா... சிரிப்புதான் பெஸ்ட் சாய்ஸ்.

- உமா ஷக்தி