Published:Updated:

'ஸ்லிம்' சுசித்ராவின் சிம்பிள் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

'இயற்கையில் இருக்கு எல்லாமே!'

##~##

'என் ஆசை மைதிலியே..!’ ஃபாஸ்ட் பீட் சாங்கா?, 'ஒரு சின்னத் தாமரை..!’ போன்ற மெலடி பாடலா? திரைப்படப் பின்னணிப் பாடகி சுசித்ராதான் செம ஃபிட். நொடிக்கு நொடி குரலை மாற்றி, ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஓபன் 'கானம்’ ஸ்டைல் சுசித்ரா... இந்த இதழின் ஃபிட்னெஸ் ஸ்டார். 

கடந்த 10 வருடங்களாக திரை உலகில் 'குரல்’ பதித்த சுசித்ரா, கல்லூரி மாணவி போலவே இன்றும் இளமை யுடன் இருக்கிறார். பிட்னெஸ் ரகசியங்கள் பற்றி அவரே சொல்கிறார்...

''ஸ்லிம்மா அப்படியே இருக்கீங்களே!?''

''ஓ... தேங்க்ஸ்! என் அம்மா, எப்பவுமே ஒரே மாதிரி உடம்பை ஃபிட்டா வெச்சி ருப்பாங்க. அம்மாவோட உடல்வாகு எனக்கும் இருந்திருக்கலாம். நான் சுத்த சைவம். உடலுக்குக் கெடுதல் தருகிற உணவுகளை என் வாழ்க்கையில் நான் சாப்பிட்டதே இல்லை. சத்தான டிஷ்களைத் தேடித் தேடி சாப்பிடுவேன். முடிந்தவரை வீட்டிலேயே, அதுவும் சமைச்ச உடனே சுடச் சுடச் சாப்பிடுவேன். அதில் இருக்கும் டேஸ்ட் இருக்கே.. ஹய்யோ! நேரம் கிடைச்சா... சத்தான சைவ ரெசிபிகளை என் கையாலேயே ஆசை ஆசையாய் செஞ்சு சாப்பிடுவேன். தேவையில்லாமல் பயணம் போறதெல்லாம் பிடிக்காது. டின்களில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடவே மாட்டேன். நான் அதிகம் வெயிட் போடாமல் இருக்கிறதுக்குக் காரணமே இந்த மாதிரியான லைஃப் ஸ்டைல்தான்.''

'ஸ்லிம்' சுசித்ராவின் சிம்பிள் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்

''குரல் பாதுகாப்புக்கு என்ன செய்றீங்க?''

''பிராணாயாமம் செய்வேன். இதில் ஏகப்பட்ட மூச்சுப் பயிற்சிகள் இருக்கு. இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது நம் நுரையீரல், குரல்வளை, சைனஸ் பகுதிகள்னு எல்லாத்துக் குமே ரெகுலர் கண்டிஷனிங் கிடைக்கும். எனக்கு ஐஸ் கிரீம், கூல் டிரிங்க்ஸ் மாதிரியான குளிர்ச்சிப் பொருட்கள் எதுவுமே பிடிக்காது. இந்தப் பழக்கங்கள்கூட என் குரலுக்குப் பாதுகாப்புதான்!''

''ரெகுலரா பண்ற ஜிம் வொர்க் அவுட்ஸ் என்னென்ன?''

''யோகா ரொம்ப வருஷமாத் தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கேன். இப்போ என் டிரெய்னர் ஜோஸ்த்னா ஜான் ஆலோசனைப்படி, யீuஸீநீtவீஷீஸீணீறீ யீவீtஸீமீss என்கிற ஒரு புது முறையை செஞ்சுட்டு வர்றேன். ஜிம்முக்குப் போய், மணிக்கணக்காக கடுமையான வொர்க் அவுட்ஸ் பண்ணாமல், மொத்த உடல் தசைகளுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்கும்படியான பயிற்சி இது.  இதன்படி, ஈஸியா செய்யக்கூடிய, 'ஸ்குவாட்ஸ்’, 'சிட்-அப்ஸ்’, 'புஷ்-அப்ஸ்’, 'ரன்னிங்’ மாதிரியான உடலை மட்டுமே பயன்படுத்தி செய்யும் பயிற்சிகளைத் தினமும் செஞ்சுட்டு இருக்கேன்.''

''உங்களுடைய ஃபிட்னெஸ் ரோல்மாடல் யார்?''

''ம்ம்ம்... இதைச் சொல்றது ரொம்பக் கஷ்டமாச்சே! ஏன்னா, இப்போல்லாம் நிறையப் பேர் சிக்ஸ்-பேக் வெச்சுக்கிட்டு, பெரிய பெரிய பைசெப்ஸ்களோடு பார்க்க மிரட்டலா இருக்காங்க. சிலர் இதுக்காக ஸ்டீராய்டு ஊசிகளையும், வெயிட் போடும் மாத்திரைகளையும் எடுத்துக்கிறாங்க. இதனால், தேவையற்ற பக்க விளைவுகள்தான் அதிகம்.  இந்த மாதிரியான செயற்கையான முறையில், தேவையில்லாமல் உடம்பை கன்னா பின்னாவென டெவலப் பண்ணிக்கிறவங்களைவிட,  இயற்கையாகவே வொர்க் அவுட்ஸ் செஞ்சு, கரெக்ட்டான ஃபிட்டோட இருக்கிற எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். அவங்க எல்லோருமே என் ரோல் மாடல்கள்தான்''

''உங்க ரெகுலர் டயட்?''

''நம்ம ஊர் சாம்பார் - ரசம் - சாதம் இதுதான் ரொம்பப் பிடிக்கும். இந்த பிரெட், பாஸ்தா, பீட்சா, பர்கர் இதெல் லாம் ம்ஹூம்..! பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு, தயிர், நெய், தேங்காய்... இதெல்லாம் என்னோட தினசரி சாப்பாட்டில் கண்டிப்பா இடம் பிடிச்சுடும். எதை சமைச்சாலும், இயற் கையான நெய், வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில்தான் சமைப் போம். ரீஃபைண்ட் எண்ணெயில்தான் சூடும் கொழுப்பும் அதிகம் இருக் கும். இயற்கை தரும் உணவுப் பொருட் களில் இந்தப் பிரச்னைகள் இருப்ப தில்லை. இதுதான் நம் உடம்புக்கு நல்லது!''

''அழகு பாதுகாப்புக்கு?

தேங்காய் எண்ணெயும் கற்றாழையும் இருக்கே.. இந்த ரெண்டும் சர்வ ரோக நிவாரணி! இதை அடிக்கடிப் பயன்படுத்தித் தலைக்குக் குளிப்பேன். இளநீர் அதிகம் குடிப்பேன். இதில் குவிஞ்சிருக்கிற மினரல்ஸ், சருமத்தைப் பளபளப்பாக்கும்.  தலைமுடியைப் பாதுகாக்கும்.  உடலுக்கும் ஆரோக்கியம்..''

''எப்போதும் இளமையாக இருக்க நீங்க தரும் அட்வைஸ்?''

''சைவத்தின் பலன்களைத் தெரிஞ்சுகிட்டு சைவத்துக்கு மாற முயற்சி பண்ணுங்க. சைவம்தான் உடலுக்கும் ஆன்மாவுக்கும் நல்லது. இதை என் அனுபவத்தில் சொல்றேன். கோபத்தை குறைச்சுக்குங்க. மன அழுத்ததுக்கு ஆளாகாதீங்க. மனசை எப்பவும் ரிலாக்ஸா வெச்சுக்குங்க. ஆரம்பத்துல நானும் எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். இப்பல்லாம், டென்ஷன், கோபம் வந்தால், உடனே அந்த இடத்தைவிட்டு விலகி வந்திடுறேன்.  வாக்கிங் போவது, நல்ல இசை கேட்பதுனு மைண்டை டைவர்ட் பண்ணிட்டா, நோ டென்ஷன்! இதையே, ப்ளீஸ்... நீங்களும் ஃபாலோ பண்ணலாமே!''

- உ.அருண்குமார்

படம்: ப்ரீத் வால்சர்