Published:Updated:

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

Published:Updated:
##~##

''ராம், இன்னைக்கு சரியில்ல... உன்னோட மூவ்ல ஒரு ஸ்பெஷல் எக்ஸ்பிரஷன் இருக்கும் அது இன்னைக்கு மிஸ்ஸிங்டா!''

''சந்தோஷ் நீ உயிரை பணயம்வச்சு ஸ்டன்ட் அடிச்சே பாத்தியா... கலக்கிட்ட போ! அதுக்கே உனக்கு அஞ்சு மார்க் எக்ஸ்ட்ரா குடுக்கணும்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், இன்று ஆடலும் பாடலும்தான் நம்மவர் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது. தொலைக்காட்சியில் பெரும்பாலான சேனல்களில் நடனப் போட்டிகளும், பாடல் நிகழ்ச்சிகளும் பட்டையை கிளப்புகின்றன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என டி.ஆர்.பி ரேட்டிங்கை செமத்தியாக உயர்த்திக்கொள்கின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டுதான் பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பதுபோன்ற எந்தக் கட்டாயமும் இந்த மாதிரியான போட்டிகளில் பங்கேற்பவர்களுக்குக் கிடையாது. உடல் தகுதிக்கும் மீறி, எதையாவது செய்து பார்வையாளர்களை உணர்ச்சிபூர்வமாக்கும் நபருக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதில், நடனத்தை மட்டுமேவைத்து பெரும்பான்மைப் பார்வையாளர்களைக் கவர இயலாது. ஆகையால் 'ஸ்டன்ட்’ என்ற ஆயுதத்தைக் கையில்

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

எடுக்கிறார்கள். போட்டிகளில் வெல்பவருக்கு கிடைக்கும் புகழ், பரிசுத்தொகை இவற்றை எல்லாம் பார்க்கும் விடலைப் பையன்கள் தங்கள் உடல்தகுதிக்கு மீறி நடனப் பயிற்சியின்போது ஸ்டன்ட் செய்கிறேன் பேர்வழி என்று கை, கால், இடுப்பு, முதுகு என எதையாவது உடைத்துக்கொள்வதுதான் மிச்சம். ஆர்வத்துடன் ஆட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடனத்துடன் ஸ்டன்ட் செய்யும் இளைஞர்களுக்கு இந்த கட்டுரை ஓர் ஆராய்ச்சி மணியாக இருக்கும்.

சென்னையில் இன்டர்நேஷனல் நடனங்களைக் கற்றுத் தரும் பிஃப்த் எலிமென்ட் டான்ஸ் கம்பெனியின் இயக்குனரும், 'காதலில் சொதப்புவது எப்படி?’  படத்தின் கொரியோகிராஃபருமான மகேஷ் பாபு இதுபற்றி பேசினார்.

''டான்ஸ் என்பது மனிதர்களை நோய் நொடி இல்லாமல் வைத்திருக்கக்கூடிய ஓர் அற்புதக் கலை. அதிகப்படியான கலோரிகளை எரித்து அழகான உடலமைப்புப் பெறவும் மன அழுத்தம், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் டான்ஸ்தான் சிறந்த மருந்து. தங்களது துணையோடு இணைந்து  ஆடும்போது அன்பு பெருகும்.

“dance to inspire not to inpress” என ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. ஜிவ், பாலே, ரெட்ரோ, வெஸ்டர்ன், பாரம்பரிய நடனம், ஃபோக், சல்சா, சா சா, ஹிப்-ஹாப் என டான்ஸில் பல வகைகள் உண்டு.  இந்த டான்ஸ் வகைகளுக்கு அதற்கானப் பிரத்யேகப் பயிற்சிகள் இருக்கின்றன. இதில் எந்த வகையை ஒருவர் தேர்வு செய்யப்போகிறார் என்பதை முடிவுசெய்து, பிறகு ஒவ்வொரு வகைக்கும் அதற்கேற்ற முன்பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். வார்ம் அப், கூல் டவுன் ஆகிய செக்ஷன்களில் கட்டாயம் பயிற்சி எடுக்க வேண்டும். பிரேக் டான்ஸ் என்ற டான்ஸ் வகையில் மட்டும்தான் அதிகப்படியான ஸ்டன்ட் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கான பயிற்சிகளைச் செய்யாமல் நேரடியாக முயற்சிசெய்யக் கூடாது.  

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

புரொஃபஷனல் டான்ஸர்களுக்கு எல்லா வித டான்ஸ் வகைகளும் தெரியும்.  அதனால் அவர்கள் பாதுகாப்பாக ஆடுவார்கள். ஆனால் இன்டர்நெட் வீடியோக்களைப் பார்த்துவிட்டு, இப்போது பல கல்லூரி மாணவர்கள் டான்ஸ் ஆட முற்பட்டு அடிபடுகிறார்கள்.

ஒரு முறையான பயிற்சியாளரிடம் டான்ஸ் கற்றுக்கொள்ளாமல் தனியாக ஆட முயற்சிக்கக் கூடாது. ஏனெனில், ஒருவரின் உடல் எடை, உடல்வாகைப் பார்த்த பிறகுதான் அந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் முடிவுசெய்ய முடியும். ஃப்ளெக்ஸிபிலிட்டி எனப்படும் உடல் நெளிவுத்தன்மைதான் டான்ஸில் மிக முக்கியமான அங்கம். பொதுவாக புதிதாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு இந்த நெளிவுத்தன்மை குறைவாக இருக்கும். இதனால் முட்டியில் அடிபடலாம்.  முட்டியில் அடிபடாமல் இருக்க, strengthening  எனப்படும் உடலின் திசுக்களை வலுவாக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

நடனம் - ஸ்டன்ட் இரண்டும் சேர்ந்து செய்யும்போது ஏற்படும் உடலில் ஏற்படும் விளைவுகள்குறித்து ஆர்த்தோ டாக்டர் மதிவாணனிடம் கேட்டோம்.

'சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால், ஆரம்பத்தில் சில அடிகள் விழும்.  அதையெல்லாம் தாங்கித்தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வோம். நன்றாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகுதான், சைக்கிளில் சாகசம் செய்ய முயற்சிப்போம். ஆனால் சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் எடுத்தவுடனே சைக்கிளில் சாகசம் செய்ய முயற்சித்தால், கடுமையான அடி ஏற்படும்.  அதேதான் நடனமாடும்போது தேவையின்றி ஸ்டன்ட் செய்தால், மூட்டு பிசகல், கணுக்காலில் கடுமையான அடி, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு, இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்படி ஸ்டன்ட் அடித்ததால் அடிபட்டு பலரது வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது.  நடனப் பயிற்றுனரின் துணை இல்லாமல் ஸ்டன்ட் செய்வது ஆபத்தில்தான் முடியும்'' என்றார்.

'இரண்டும் கலந்த கலவை நான்’ என்று ஆடல் கலை, கவலையில் முடியலாம். ஜாக்கிரதை!

- பி.விவேக் ஆனந்த்,

படங்கள்:  தே.தீட்ஷித்

 ஆடுவோமே...

 பொதுவாக டான்ஸ் எல்லா வயதினரும் கற்றுக் கொள்ளலாம்.

ஆடலாம் பாய்ஸ் பாதுகாப்பா டான்ஸ்! - உஷார் ரிப்போர்ட்

 உயரம் குறைந்தவர்கள், கூடுதல் உயரம் உள்ளவர்கள் என்பதெல்லம் எந்த விதத்திலும் பிளஸ் பாயிண்ட் கிடையாது.

 டான்ஸ் ஆட ஆர்வம் இருந்தால் போதும்.

 டான்ஸை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆர்வகோளாரில் அரைகுறையாய் ஈடுபடுவது விபரீதத்தையே உண்டாக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism