Published:Updated:

''நடைப்பயிற்சிதான் நல்ல ஆரோக்கியம்!''

சம்பத் சொல்லும் ஹெல்த் டிப்ஸ்

''நடைப்பயிற்சிதான் நல்ல ஆரோக்கியம்!''

சம்பத் சொல்லும் ஹெல்த் டிப்ஸ்

Published:Updated:
##~##

ஓங்குதாங்கான உயரமும் உடம்பும், உற்சாகமான சிரிப்பும், உரத்த குரலும்... சம்பத்தின் அடையாளம். ''பக்குவமான மனம், கட்டுக்கோப்பான உடல் இரண்டும் இருந்தால், ஆரோக்கியம் அள்ளி அரவணைக்கும்'' என்கிறார் சம்பத். 

''நமக்கு உடம்பும் மனசும் ஒண்ணு. ரெண்டுல ஒண்ணு பிரச்னை பண்ணுச்சுன்னாதான்... ஜிம் பக்கம் போவேன். மத்தபடி தினமும் வீட்டிலேயே கார்டியோ பயிற்சி ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து செய்வேன். புஷ் அப்ஸ், ஷோல்டர்ஸ், சிட் அப்ஸ்னு சில பயிற்சிகள் செய்வேன். என் தினசரி உடற்பயிற்சியில் 30 நிமிஷம் நடைப்பயிற்சி இருக்கும். எல்லாப் பயிற்சிகளைக் காட்டிலும், நடைப்பயிற்சிதான் நல்ல ஆரோக்கியம் தரும். இயற்கையோட இணைந்து நடக்கும்போது இன்னும் மனசு ரிலாக்ஸா இருக்கும். பொள்ளாச்சி, கேரளா, காரைக்குடினு ஊர்களுக்குப் போனால், இயற்கையை ரசிச்சிக்கிட்டே பல கிலோ மீட்டர் தூரம் நடப்பேன். நான் தங்கி இருப்பது 9 மாடி அபார்ட்மென்ட். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான்கு தடவை 9 மாடிப்படிகளும் ஏறி இறங்குவேன். ஊட்டி, மூணாறு மாதிரி மலைப் பிரதேசம் போனால், மலையில் நடக்க ஆரம்பிச்சிடுவேன். இயற்கையோடு சார்ந்து உடற்பயிற்சி செய்யும்போது உற்சாகம் கூடும்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நடைப்பயிற்சிதான் நல்ல ஆரோக்கியம்!''

''உணவு விஷயத்துல நீங்கள் எப்படி?''

''சுத்தமா எண்ணெய் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன். கொஞ்சமா நான்வெஜ் எடுத்துப்பேன். அதுவும், எப்போதாவதுதான். மத்தபடி என் தட்டில் நிறையக் காய்கறிகள்தான் இருக்கும். காய்கறிகளில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கு. காலையில் 8 மணிக்குள் டிஃபன் சாப்பிட்டுடுவேன். பழங்களை அப்படியே சாப்பிடுவேன். ஜூஸா செஞ்சு குடிச்சா, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக் கிடைக்காது. மதியம் புரதச் சத்து அதிகமா இருக்கும் தானிய உணவுகளை எடுத்துப்பேன்.

''நடைப்பயிற்சிதான் நல்ல ஆரோக்கியம்!''

பெரும்பாலும் இரவு நேரங்களில் சப்பாத்திதான். நொறுக்குத் தீனி, ஃபாஸ்ட்ஃபுட், சாட் உணவுகளுக்கு முழுசா தடா.''

''வெளியூர்களுக்கு ஷூட்டிங் போகும்போது உங்க உடல் ஆரோக்கியத்தை எப்படிப் பராமரிக்கிறீங்க?''

''ஷூட்டிங் டைம்ல ரொம்பக் கவனமா இருப்பேன். நல்ல ருசியான உணவுகளை ரசிச்சு சமைச்சுவைச்சிருப்பாங்க. ஆனா அதில் காரம், எண்ணெய், உப்பு எல்லாம் கொஞ்சம் தூக்கலா இருக்கும். அதனால் காலையில் இட்லி மட்டும் சாப்பிடுவேன். நீராவியில் சமைக்கிற அத்தனையுமே அருமையான உணவுதான். எந்த ஆபத்தும் இருக்காது. சருமம் நல்லாப் பளபளப்பா இருக்க, பழங்கள் அதிகம் சாப்பிடுவேன். நடைப்பயிற்சி செய்வேன். வெங்கட்பிரபு படங்களில் நடிக்கிறப்போ கிரிக்கெட் விளையாடுவேன். நான் காலேஜ் டைமில் பாஸ்கெட்பால் பிளேயர். மாநில அளவு விளையாட்டு போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். ஷூட்டிங் இல்லாதப்ப, விளையாட்டுதான் எனக்கான எனர்ஜி.''

''உடல் ஆரோக்கியம் பற்றி மற்றவர்களுக்கு நீங்கள் சொல்லும் அட்வைஸ்?''

''உடற்பயிற்சி செய்த அரை மணி நேரத்துக்குள், சத்தான உணவுகளை எடுத்துக்கோங்க. அதுதான் உடலுக்கு வலு சேர்க்கும். புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்க.  குறிப்பா இப்ப குழந்தைங்க டிவி, கம்ப்யூட்டர்னுதான் அதிக நேரம் செலவிடுறாங்க. இதனால் குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்னை அதிகமாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நிறைய ஓடி, ஆடி விளையாட அனுமதிக்கணும். அந்த குழந்தைங்க வளர்ந்து வாலிப வயதை எட்டும்போது, நோய் நொடி இல்லாமல், நல்ல ஆரோக்கியமா வாழ அதுதான் ஆரம்பம்.''

கட்டுரை மற்றும்

படங்கள்: செ.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism