Published:Updated:

ஸ்கேன் - கே.பாலசந்தர்

ஸ்கேன் - கே.பாலசந்தர்

##~##

விருதுகளுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் சிகரம் கே.பால சந்தருக்குத் தற்போது வயது 82. சுறுசுறுப்பிலும் அவர் சிகரம்தான். எப்போதும் சினிமாவைப் பற்றிய சிந்தனைகள்தான் இவருக்கு மூச்சும்... பேச்சும்.  அன்றாடம் இவர் கடைபிடிக்கும் ஹெல்த் விஷயங்கள் அனைத்துமே எளிமை. 

ஸ்கேன் - கே.பாலசந்தர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 திரைப்படங்களில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம்கொடுப்பவர். முன்பு இருந்த கோபம் இன்று துளியும் இல்லை.

ஸ்கேன் - கே.பாலசந்தர்

 பசுமை விரும்பி. நேரமும், உடலும் ஒத்துழைக்கையில் வீட்டுத் தோட்டத்தைச் செம்மைப்படுத்துவார். சுத்தமாக இருப்பதைப் பெரிதும் விரும்புபவர்.

ஸ்கேன் - கே.பாலசந்தர்

 தினமும் காலை 6 மணிக்கு எழுந்துவிடுவார். நேரம் மேலாண்மையில் அதிக அக்கறை உள்ளவர். எந்த வேலை செய்தாலும், அதைச் சரியான நேரத்தில் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதை இன்றளவும் கடைப்பிடிப்பவர்.

ஸ்கேன் - கே.பாலசந்தர்
ஸ்கேன் - கே.பாலசந்தர்

 சரியான நேரத்துக்குச் சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். தன் வயிற்றுக்கு எது சரியான உணவு என்பதைத் தேர்ந்தெடுத்து அளவோடுதான் சாப்பிடுவார். அதிகப்படியாக காபி வேண்டும்போல் மனம் ஏங்கினாலும், குடிக்க மாட்டார். சுயக் கட்டுப்பாடுகொண்டவர். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சாப்பிட முடியாமல் போனால், அந்த நேரத்தில் பட்டினி கிடப்பதை விட, எளிமையாக என்ன உணவு கிடைத்தாலும் சாப்பிடுவார்.

ஸ்கேன் - கே.பாலசந்தர்

 கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு வந்த மாரடைப்பை நினைத்து கொஞ்சமும் பதற்றமோ, கவலையோ கொள்ளாமல், இன்றுவரை உடல் ஆரோக்கியத்தின் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.  'வியாதி வரக்கூடாது, வந்துவிட்டால் வருந்தக்கூடாது.   வேலை, வாழ்க்கையில் கவனம் செலுத்தி, உடல் நலனில் கூடுதல் அக்கறை காட்டினால் போதும். வியாதி நம்மைக் கண்டு மிரளும்’ என்பார்.

ஸ்கேன் - கே.பாலசந்தர்

 சினிமாவைத் தவிர, இசைக் கச்சேரிகளை ரசிப்பார். மாலை வேளையில் படம் பார்ப்பது,  புத்தகங்கள் வாசிப்பது இவருடைய அன்றாடப் பொழுதுபோக்குகள்!

- உமா ஷக்தி