##~## |
இளைஞர் களுக்கு சவால்விடும் உடல் வலிமையும், அதீத சுறுசுறுப்புடனும் ஆச்சர்யப்பட வைப்பவர்
55 வயதான நாசர். 'நடிப்புக்கு... நாசர்’ என்று திரை உலகமே சொல்லும் மனிதர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சிறுவனாக இருக்கும்போது, அப்பா தினமும் கட்டாயப்படுத்தித் தரும் நான்கைந்து வேப்பங்கொழுந்து, சோப்புக்குப் பதிலாக, சந்தனம், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு கலந்து அம்மா அரைத்துத்தரும் வாசனைப் பொடி இவையே, தன் உடலை வனப்பாக வைத்திருக்கிறது என்கிறார்.

அசைவ உணவு மிகக் குறைவாக சாப்பிடுவார். கீரை என்றால் பிரியம். ஒருநாள் பருப்புடன் சேர்ந்த கீரை, அடுத்த நாள் தண்ணீராக வெறும் கீரைக் கூட்டு என, தினமும் கீரையை விரும்பிச் சாப்பிடுவார்.

டீ, காபி குடிக்க மாட்டார். காலையில் தினமும் கேழ்வரகுக் கஞ்சிதான் குடிப்பார்.


கை வைத்தியம், நாட்டு வைத்தியத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவர். சிறு உபாதை ஏற்பட்டாலும், சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் பயன்படுத்தி சரிசெய்துகொள்வார். மாத்திரை மருந்து என்றாலே இவருக்கு அலர்ஜி.

வீட்டுக்குள் உலாவுவதுதான் இவருக்கான நடைப் பயிற்சி. காலில் சக்கரம்தான் கட்டியிருக்கிறாரா எனும் அளவுக்கு வேகமாக நடை போடுவார். ஷூட்டிங் செல்லும் இடங்களில், 10 நிமிட நடையில் செல்லக்கூடிய இடங்களுக்கு காரைத் தவிர்த்து நடந்து சென்றுவிடுவார்.

மதங்களைவிட, மனிதம் மதிப்பவர். கடுமையான உழைப்பாளி. வேலை விஷயத்தில் எந்த காம்ப்ரமைஸும் கிடையாது.

இன்பதுன்பங்களை, வெற்றி தோல்விகளை சமமாகப் பார்க்கும் அளவுக்கு மனப்பக்குவமும் தெளிவும் உடையவர்.

புத்தகம் படிக்கும் ஆர்வம் உடையவர். தற்போதைய பொழுதுபோக்கு ஆர்கிடெக்சர். புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடலுக்கு சொந்தக்காரர்.

லண்டனில் ஷூட்டிங் முடிந்து தேம்ஸ் நதிக்கரையிலிருந்து அவர் எடுத்து வந்தது கூழாங்கற்கள் மட்டுமே என்பது ஆச்சர்யமான விஷயம்.
- உமா ஷக்தி