Published:Updated:

வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயிற்சிதான்!

வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயிற்சிதான்!

வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயிற்சிதான்!

வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயிற்சிதான்!

Published:Updated:
வியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயிற்சிதான்!

'நான் ஈ’ படத்தில் 'ஈ’யை சுழற்றி விரட்டியடித்து, மிரட்டலான நடிப்பில் வில்லனாக முத்திரை பதித்தவர் சுதீப். 

'சேது’ படத்துக்குப் பிறகு விக்ரமை 'சீயான்’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுபோல், அதன் கன்னட ரீமேக்கில் நடித்த சுதீப்பை, 'கிச்சா சுதீப்’ என்றே ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறடி உயரமும் 80 கிலோ எடையும் உள்ள செம ஃபிட்டான சுதீப்புக்கு, 'நான் ஈ’ படத்துக்கு பிறகு ரசிகர்களின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிற, தெலுங்குப் படங்களில் தொடர் கால்ஷீட், தமிழில் ரீமேக், பாலிவுட்டிலும் படு பிஸி.  நொடிப்பொழுதும் நடிப்புப் பற்றிய சிந்தனையுடன் சுழலும் சுதீப்பின் சூப்பர் ஃபிட்னெஸ் ரகசியம் இங்கே...

'உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, தினமும் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்வீர்கள்?'

'சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி தினமும் நிறைய வொர்க் அவுட்ஸ் செஞ்சிட்டு இருந்தேன். நடிக்கறப்ப நிறைய விபத்துகள் ஏற்பட்டன. அதனால், இப்ப எக்ஸர்சைஸ் செய்யறதில்லை. ஆனால், ஃபிசிக்கல் ஆக்ட்டிவிட்டி நிறைய பண்றேன். வியர்க்க வியர்க்க விளையாடுவதும் ஒரு பயிற்சிதான். நேரம் கிடைக்கறப்ப, ஷட்டில் விளையாடுவேன். கிளப்புக்கு போறப்ப கிரிக்கெட் விளையாடுவேன்.  தினமும் சைக்கிளிங் போவேன்.  இதெல்லாமே என் உடம்பையும் மனசையும் புத்துணர்ச்சியா வைச்சிருக்கு.'

'உணவு விஷயத்துல நீங்க எப்படி?''

'சமச்சீரான உணவு சாப்பிடுவேன். ஒருநாளைக்கு நாலு தடவைனு சாப்பாட்டை பிரிச்சு சாப்பிடுவேன். அரிசி, ரெட் மீட் சுத்தமா சேர்த்துக்கமாட்டேன். நான்-வெஜ்கூட ரொம்ப குறைவா சாப்பிடுவேன். கேழ்வரகுல சமைச்ச உணவு அதிகம் சேர்த்துப்பேன்.  கன்னடத்துல கேழ்வரகு பாலை, 'முக்தே’ன்னு சொல்லுவாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. ராகி ரொட்டியை தினமும் சாப்பிடுவேன். ராகிக்கு ஏன் முக்கியத்துவம் தரேன்னா, அது ஹெவியான உணவு கிடையாது. எப்பவும் சுறுசுறுப்பா செயல்பட உதவும். தூக்கம் வராது; சோர்வும் எட்டிப் பார்க்காது. வெரைட்டியான காய்கறிகளை தினமும் சேர்த்துப்பேன்.

##~##

அந்தந்த சீஸன்ல கிடைக்கிற பழங்களை வாங்கி, கொஞ்சம்கூட தண்ணீர், சர்க்கரை சேர்க்காம ஜூஸாக்கி குடிப்பேன்.

என்னால, டீ இல்லாம இருக்க முடியாது.  'காபி, டீ அடிக்கடி குடிக்கறது நல்லதில்லை. க்ரீன் டீக்கு மாறுங்க’னு வீட்ல அடிக்கடி சொல்லிட்டு இருக்காங்க. இனிமேல்தான் முயற்சி செய்யணும்.'

''மூன்று மொழிப் படங்கள்ல நடிக்கிறீங்க... உங்க எனர்ஜி சீக்ரெட் என்ன?''

'நம்ம வேலையை நாம செய்யறதுக்கு எனர்ஜியைவிட மனசுதான் வேணும். வேலையைப் பார்த்து மலைச்சு நின்னுட்டோம்னா அது கேரியரோட என்ட்னு அர்த்தம். அடுத்தடுத்து வேலைகள்ல மூழ்கி, இயங்கிக்கிட்டே இருக்கணும்.

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் அது எனக்கு நானே தேர்ந்தெடுத்துக்கிட்டது. நான் ஒரு 'வொர்க்ஹாலிக்’. எனக்கு வாழ்க்கையில எதுவுமே ஈஸியா கிடைச்சது இல்லை.  கடின உழைப்பும் தேடலும்தான் என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்தது.   அதனால இதுல எனக்கு சோர்வோ, அலுப்போ வர வாய்ப்பே இல்லை.

என்னோட உடம்புல சிக்ஸ் பேக் இல்லை. ஆனா, மனசுல 12 பேக்ஸ் இருக்கு. நீங்க நேசிக்கற விஷயம் உங்க கையில இருந்தா, அதுக்காக உங்களை முழுசா அர்ப்பணிச்சுடணும். எனக்கு சினிமாதான் எல்லாமே... என்னோட எனர்ஜி, மைண்ட்ல இருக்கு; சாப்பாட்ல இல்லை.'

'உங்க பொழுதுபோக்கு என்ன?'

''படங்கள் பார்ப்பேன். பைக்ல போறது ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் இல்லாத நேரங்கள்ல, என் நடிப்பு தோழர்கள் பத்து பதினஞ்சு பேர் ஒண்ணாசேர்ந்து சின்ன டீமா ஃபார்ம் பண்ணி காடு, மலைனு பைக்ல கிளம்பிடுவோம். கூடவே எங்களுக்கு சமைச்சுப் போட ஒரு நபரையும் கூப்பிட்டுப்போம். பரபரப்பான நகர வாழ்க்கையை மறந்துட்டு நல்ல ஓய்வா ரிசார்ட்ஸ்ல ரெண்டு மூணு நாள் தங்கி, ஜாலியா சுத்துவோம். நமக்கே நமக்கான நேரங்கள்லதான் நம்மை பத்தின கவனம் அதிகமா இருக்கும். அடுத்து என்ன செய்யப் போறோம்னு யோசிக்க நேரம் கிடைக்கும். மொத்ததுல ஒரு முறை 'ட்ரிப்’ போய்ட்டு வந்தா, அடுத்த சில மாதங்கள் செம தெம்பா இருக்கும்.'

'நீங்க எப்படிப்பட்ட பெர்சனாலிட்டி?'

'நேர்மறையான விஷயங்கள்ல எப்பவும் நம்பிக்கை உள்ளவன். எவ்வளவு தூரம் பாசிட்டிவ்வா யோசிக்கிறோமோ, அந்த அளவுக்கு பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு ஏற்படும். என்னைப் பொறுத்தவரைக்கும் முடியாதது என்று எதுவும் இல்லை. லட்சியக் கனவுகளை அடையணும்னா தீவிரத் தன்மை தேவை. எவ்வளவு தூரம் உங்களுக்கு அது வேணுமோ அவ்வளவு தீவிரமா அதை நோக்கி நீங்க பயணப்படுவீங்க. நிச்சயம் ஒருநாள் அது நிறைவேறும். வெற்றிங்கறது நம் கையில்தான் இருக்கு!'

- உமா ஷக்தி