Published:Updated:

டான்ஸ் ஆடுங்கள்.. இளமையோடு இருங்கள்!

டான்ஸ் ஆடுங்கள்.. இளமையோடு இருங்கள்!

##~##

'சிக்கு புக்கு... ரயிலு’ என இளம் உள்ளங்களைக் கவர்ந்தவர் பிரபுதேவா. 'ராஜா.... ராஜாதி ராஜன் இந்த ராஜா..’ என கோலிவுட்டில் தன் ஆடலைத் தொடங்கி, இன்று பாலிவுட் டைரக்டராக வலம் வருபவர். உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும் பிரபுதேவாவின் ஃபிட்னெஸ் ரகசியம் என்னவாம்? 

உங்கள் சுறுசுறுப்பின் ரகசியம் என்ன?

'காலையில் சீக்கிரம் எழுந்திருச்சிடுவேன். ஸ்கிம்டு மில்க், கார்ன் ஃப்ளேக்ஸ் ரெண்டும்தான் என் காலை உணவு. மதியம் ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் காய்கறிகள். ராத்திரி 7 மணிக்குள் மிதமான டிஃபன். அப்பப்போ ஜூஸ், பழங்கள். அதுக்கு மேலே எதுவும் கிடையாது. இதைக் கடைப்பிடிக்கறது கொஞ்சம்

டான்ஸ் ஆடுங்கள்.. இளமையோடு இருங்கள்!

கஷ்டம்தான். ஆனா, உடம்பு நாம சொல்றதைத்தான் கேட்கணும். நைட் சீக்கிரம் சாப்பிட்டா, அடுத்த நாள் காலையில் சீக்கிரம் முழிப்பு வந்திரும். நல்லாப் பசிக்கும்.

பொதுவா நான் அரிசி உணவைத் தவிர்த்துட்டேன். வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் அரிசிச் சாப்பாடு. தினசரி சாப்பாட்டில் புரதச் சத்து அதிகம் இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். ஹெல்த் விஷயத்தில் ரொம்பவே கவனமா இருக்கணும். ஒரு கட்டத்தில் 77 கிலோ இருந்த நான், இப்ப 71 கிலோவை மெயின்டெய்ன் பண்றேன்.  உடம்பு ஃபிட்டா இருந்தாதான்,  சுறுசுறுப்பா வேலை செய்ய முடியும்.'

ஃபிட்னெஸுக்கு வேறு என்ன பயிற்சி செய்வீங்க?

'என் மிகப் பெரிய ஃபிட்னெஸே டான்ஸ்தான். உடம்பில் அதிகப்படியான கலோரிகளை எரிச்சிடும். தவிர, ஈஸியா செய்யக்கூடிய பயிற்சிகளை வீட்டிலேயே செய்வேன். ரெகுலரா யோகா, நீச்சல் பண்ணுவேன். ஜிம் வொர்க்அவுட்ஸ் எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. மெஷின்களைவிட என்னை நான் அதிகம் நம்புவேன். உணவுமுறைகள், சில நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே போதும். உடம்பு லைட்டா இருக்கும். 'ஹெல்த்தி லிவ்விங்’ - நம்ம பாரம்பரியத்திலேயே இருக்கு!'

உங்களால் தவிர்க்க முடியாத உணவு?

டான்ஸ் ஆடுங்கள்.. இளமையோடு இருங்கள்!

'எனக்கு ஸ்வீட், ஐஸ்க்ரீம் ரொம்பப் பிடிக்கும். இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருந்தேன். அதனால் உடம்பு வெயிட் அதிகமானதை என்னால் உணர முடிஞ்சது. அதனால், குறைச்சிட்டேன். இட்லி, தோசை, அரிசி சாப்பாடுனு நம்ம தென்னிந்திய உணவுவகைகள் எல்லாமே பிடிக்கும். அப்பளம்னா போதும், அடிக்கடி நொறுக்கிட்டிருப்பேன். ஆனா, இது எல்லாத்தையும் கட் பண்ணிட்டு, உடம்புக்கு எது நல்லதோ, அதைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுறேன். நாக்கில் சுவை நரம்புகள் எல்லா ருசியும் கேட்கும். இயற்கையாக் கிடைக்கிற சுவைகளை அதுக்குப் பழக்கிவிட்டோம்னா, வெரிகுட்!'

அப்பப் பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கீங்களே, எப்படி?

'இந்த உலகத்துல எப்பவும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கிற, ஒரு மனுஷனைக்கூடப் பார்க்க முடியாது. எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத மாதிரி ஒரு உணர்வு இருந்திட்டேதான் இருக்கும். தேவைகளுக்கும், ஆசைகளுக்கும் முடிவே கிடையாது. எவ்வளவு பெரிய டென்ஷன்லயும், மனசை ரிலாக்ஸ்டா வெச்சிக்கத் தெரிஞ்சுக்கணும். மனசைப் பக்குவப்படுத்திட்டா, எப்பவும் இளமையாவே இருக்கலாம்.'

- உமா ஷக்தி

டான்ஸ் ஆடுங்கள்.. இளமையோடு இருங்கள்!

மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். மனசு சரியில்லைன்னா, அது உடம்பையும் பாதிக்கும். எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு நிச்சயம் இருக்கும். எந்தப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளப் பழகிக்குங்க.

நீங்க எந்த வேலை செய்தாலும், அதை முழு மனசோட நூறு சதவிகிதம் சரியாச் செய்யுங்க.

  சாப்பாடு விஷயத்துல கவனமா இருங்க. நிறையத் தண்ணீர் குடிங்க. ஒரு நாளைக்கு நாலைஞ்சு காபியோ, டீயோ குடிக்கிறவரா இருந்தீங்கன்னா, உடனடியா அதைக் குறைச்சிடுங்க. கொஞ்சம் கொஞ்சமாக அதை நிப்பாட்ட முயற்சி செய்யுங்க.

தினமும் இரண்டு வகைக் காய்கறிகள், மூன்று வகைப் பழங்கள் எடுத்துக்குங்க.  ஒருநாள் விட்டு ஒரு நாளாவது கீரை சமைச்சுச் சாப்பிடுங்க. நீங்க அசைவ விரும்பியா இருந்தா, வேகவைத்த மீன் தினமும் சாப்பிடுங்க. இது உங்களை இளமையாக வைத்திருக்கும். நட்ஸ் நிறைய சாப்பிடுங்க.

காலைல வாக்கிங் போக டைம் இல்லைன்னா, வீட்டிலேயே சின்ன சின்ன பயிற்சிகள் செய்யுங்க. இல்லைன்னா மொட்டை மாடிக்குப் போய் ஜாகிங் பண்ணுங்க.

  சூரிய நமஸ்காரம் தினம் செஞ்சாலே போதும். முழு உடலுக்கான பயிற்சி கிடைச்சிடும்.  

  முன் தூங்கி முன் எழும் பழக்கம்தான் நல்லது. இதைக் கடைப்பிடிச்சாலே நல்ல மாற்றம் தெரியும்.

  காலையில் எழுந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கப் பழகிட்டா, அந்த நாள் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

தெளிவும் தன்னம்பிக்கையும் ரொம்பவே முக்கியம்.