18 வயதிலேயே உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் பி.வி.சிந்து. ஆனால், அதிர்ஷ்டத்தால் கிடைத்தது அல்ல இந்த வெற்றி. ஒரே வருடத்தில், ஒலிம்பிக்ஸ் வீரர், ஆசிய சாம்பியன், உலக சாம்பியன்... என மூன்று பெரும் வீரங்கனைகளை வென்று பெற்ற வியத்தகுப் பரிசு இது. சாய்னா நேவால், காஷ்யப், அஸ்வினி பொன்னப்பா, ஜூவாலா கட்டா வரிசையில் இந்தியாவுக்கு புகழாரம் தேடித் தந்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் சிந்து.

வரும் பந்தை உடனடியாக அடித்துத் திருப்புவதுபோல், கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில்களும் வேகமாக வந்துவிழுகின்றன. பிட்னெஸ் பற்றி சிந்துவிடம் கேட்டோம்.

''ஃபிட்-ஆ வைச்சுக்க, என்னலாம் பயிற்சி எடுக்கறீங்க?''

''தினமும் அதிகாலை நான்கு மணிக்கு, பயிற்சிக்குக் கிளம்பிடுவேன். 7.30-ல் இருந்து 9.30 மணி

வரைக்கும் பயிற்சி செய்வேன். அதுக்கப்பறம், காலை உணவு, கொஞ்ச நேரம் ரெஸ்ட். மறுபடியும் 11 மணிக்கு ஆரம்பிக்கற பயிற்சி ஒரு மணி வரைக்கும் நீடிக்கும். லஞ்ச் ப்ரேக் முடிச்சிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணி வரை இடைவிடாத பயிற்சி எடுத்திட்டு, வீடு திரும்ப இரவு ஏழு மணி ஆகிடும்.

சாப்பாடு விஷயத்தில், பிடிச்சது பிடிக்காததுன்னு எதுவும் இல்லை. ஆனா, சாப்பிடறது எல்லாமே ஹெல்த்தியா இருக்கணும். நிறைய புரதம் இருக்கறமாதிரி சாப்பிடுவேன். பால், ஆர்கானிக் பழங்கள், முட்டை... போன்றவை தினசரி உணவுல கட்டாயம் இருக்கும். வெளிநாடுகளுக்குப் போனாலும் அங்க கிடைக்கற சீசனல் ஃப்ரூட்ஸ் என்னன்னு தெரிஞ்சி சாப்பிடுவேன். அதுதான் உடம்பையும் மூளையையும் சுறுசுறுப்பா வெக்கிறது!''

''அகாடமியில் என்ன மாதிரியான பயிற்சிகள் தருவார்கள்?

'ஃபிட்னெஸ் பயிற்சிகள் எல்லாமே கடுமையா இருக்கும். ரன்னிங், ஸ்ட்ரென்த் ட்ரெயினிங், கோர் மசில்ஸ், இடுப்பு, கால் தசைகள், தோள்களுக்கான பயிற்சிகள், நீச்சல் பயிற்சி, மொத்த உடலுக்கான பயிற்சிகளும் கூடவே வெயிட் தூக்கும் பயிற்சியும் இருக்கும். கூடவே பேட்மின்டன் டெக்னிக்ஸ் பயிற்சிகளும் நடக்கும். கட்டாயம் யோகா செய்வேன். அது மனசை ஒருமுகப்படுத்த ரொம்ப உதவியா இருக்கும். ஒவ்வொரு ஸ்ட்ரோக்கை செய்யறப்ப, எதிராளியைக் கூர்மையா கவனிக்கணும். நம்மை எதிர்த்து விளையாடுறவர் அடுத்து என்ன மாதிரி விளையாடுவாங்கன்னு அவங்களோட மூவ்மென்ட்டைக் கணிக்கணும், அதுக்கு மைன்ட் கால்குலேஷன் ரொம்ப முக்கியம். யோகா, மனசுல டென்ஷனை வரவிடாம, ரிலாக்ஸா இருக்க வைக்குது. உடற்பயிற்சி மட்டும் ஒரு விளையாட்டு வீரருக்கு முக்கியம்னு சொல்வாங்க, ஆனா மன உறுதியும் உற்சாகமும் தெளிவும் ரொம்பவே தேவை. அதுக்கு அடிப்படை யோகா மட்டும்தான்.'

''மேட்ச்’ விளையாடறப்ப, எப்படி தயார் ஆகறீங்க சிந்து?''

''நல்லா விளையாடணும்... நிச்சயம் ஜெயிச்சிடுவேன்’ அப்படிங்கிற எண்ணம் மட்டும்தான் என் மனசுல ஓடிட்டே இருக்கும்! பாசிடிவ் எனர்ஜிதான் வெற்றிக்கான வழி. முழு கவனமும் விளையாடப் போற கணங்களை எதிர்நோக்கியே இருக்கும்.'

''வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கறீங்க?''

'எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். இன்னும் சிறப்பா விளையாடுனும்ங்கிற தீவிரத்தையும் பொறுப்பையும் ஒவ்வொரு வெற்றியும் விதைக்குது. தோல்வி அடைஞ்சிட்டா, துவண்டு போக மாட்டேன். 'என்ன தப்பு பண்ணேன்... ஏன் முடியாம போச்சு’ன்னு ஆழமா யோசிப்பேன். மறுபடியும் மனசுக்குள்ள தோல்விக்கான காரணத்தைத் தெரிஞ்சுகிட்டு, அடுத்த தடவை அதைத் தவிர்த்து வெற்றி வளையத்துக்குள் வந்துடுவேன். வெற்றி சந்தோஷத்தை தருதுன்னா தோல்வி நிறைய கத்துக்கொடுக்குது. இன்னும் ஆழமான பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்துது.'

- உமா ஷக்தி

சிந்து தரும் ஹெல்த் டிப்ஸ்:

விடியற்காலையில் எழுந்திருக்க பழகுங்க. அது நம்மை எப்பவும் ஃப்ரெஷ்ஷா வைச்சிருக்கும்.

உங்க திறமை எதுவாக இருந்தாலும் அதை நோக்கி சிங்கிள்மைன்டடா ட்ராவல் பண்ணுங்க.

தினமும் சாப்பிடற உணவுதான் நமக்கு எனர்ஜி. ஜூஸ், சாலட், பழங்கள் நிறைய சாப்பிடுங்க. அதுல ஆன்டி ஆக்சிடென்ட் நிறைய இருக்கு. இளநீர் குடிச்சா உடனடி சக்தி கிடைக்கும்.

மனசை எப்பவும் ஜாலியா, தெளிவா வெச்சுக்குங்க.