Published:Updated:

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

தமிழ்த் திரை உலக மார்க்கண்டேயனின் இரண்டாம் வாரிசு. கல்லூரி மாணவர்களின் கனவு நாயகன். சுட்டிகளின் ஸ்வீட் ஹீரோ. உருளும் விழிகள், லட்டு கன்னம், ஃபிட்டான உடல்... இதுவே, நடிகர் கார்த்தியின் பெரிய பிளஸ். 

'எப்பவும் ஒரே மாதிரி உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கீங்களே... எப்படி?'  

'தினமும் இரண்டு வேளை வாக்கிங். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவேன். உடம்பை ரொம்ப வருத்திச் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்ய மாட்டேன். எப்பவும் உடம்புல எனர்ஜி, ஸ்டமினா லெவல் அதிகமா இருக்கும்படி பார்த்துப்பேன். அதனால்தான், என்னால் எப்பவும் சுறுசுறுப்பா இருக்க முடியுது. விளையாட்டுகள் ரொம்பப் பிடிக்கும். பேட்மிண்டன், ஷட்டில்காக், கிரிக்கெட் விரும்பி விளையாடுவேன். இதுவே ஃபிட்டா இருக்கப் போதுமானது.'

'அப்பாவிடம் யோகா கத்துக்கிட்டீங்க... பலன் எப்படி?'

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

''ஒவ்வொருத்தரும் யோகாவை, கட்டாயம் கத்துக்கணும். அப்பா, எல்லா ஆசனங்களையும் அற்புதமா செய்வார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி சாஃப்ட்வேர் துறையில்தான் வேலை பார்த்தேன். அப்ப, இரண்டு வருஷமா முதுகுவலி இருந்தது. நடக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டேன். நிறைய டாக்டர்ஸைப் பார்த்தேன். பிசியோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கிட்டேன்.  எதுவுமே சரியாகலை. அப்ப அப்பா, 'சர்வாங்க ஆசனம், சிரசாசனம், மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்’னு சொன்னாங்க. அந்தப் பயிற்சிகளைத் தினமும் செய்தேன், இப்ப சுத்தமா எந்த வலியும் இல்ல. தொடர்ந்து யோகா செஞ்சா, நல்ல பலன் இருக்கும். சர்வாங்க ஆசனம் தொடர்ந்து செய்யும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்ஞ்சு, சோர்வுங்கிறதே இருக்காது.''  

'உங்க டயட் பற்றிச் சொல்லுங்களேன்?''

'இப்ப 'பிரியாணி’ பட ஷூட்டிங்ல மூணு வேளையும் பிரியாணியை வெளுத்துக் கட்டிட்டேன். அதனால கொஞ்சம் அதிகமா ஜிம் வொர்க் அவுட்ஸ் பண்ணவேண்டி இருந்தது. தினமும் காலையில், மில்க் ஷேக், முட்டையின் வெள்ளைப்பகுதி, ஓட்ஸ் சாப்பிடுவேன். மதியம், கொஞ்சமா சிவப்பு அரிசி சாதம், வேகவைச்ச காய்கறிகள், கொஞ்சமா காரம் சேர்த்த மீன் உணவு சாப்பிடுவேன். சாயங்காலம் கிரீன் டீ, சாலட், ஃபுரூட் ஜூஸ். ராத்திரியில் இட்லி, சப்பாத்தின்னு ஏதாவது டிபனை 7 மணிக்குள் சாப்பிட்டு முடிச்சிடுவேன். தூங்கப் போறப்ப, ஒரு டம்ளர் பால். இதுதான் என் டயட்.'

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

'சுட்டீஸ் ஃபிட்டா இருக்க என்ன செய்யணும்?'

''நா சின்னப் பையனா இருந்தப்ப, தெருவில் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாலகூட, ஞாயிற்றுக்கிழமையில் பசங்க தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பாங்க. ஆனா, இப்ப தெருவுக்குத் தெரு கார்கள் தான் நிக்குது,  நண்பர்களோட விளையாட்டுங்கிறது இல்லாம, வீடியோ கேம், டி.வி.னு வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போயிடுறாங்க. அதனாலதான், சின்ன வயசுலேயே வியாதி வருது. ஸ்கூல்ல விளையாடுறதும் ரொம்பக் குறைஞ்சிடுச்சு. அதை அதிகப்படுத்தணும். பெற்றோர்கள், குழந்தைகளைத் தெருவுல விளையாட விடணும். அடிபடுமோங்கிற பயமே இருக்கக் கூடாது. விழுந்து எழுந்தாதான் வலி பழகும்.  வியர்க்க வியர்க்க விளையாடும்போது, கெட்ட நீர் எல்லாம் வெளியேறும். நல்லாப் பசிக்கும். அந்தச் சமயம் நல்ல ஹெல்த்தியான உணவா செஞ்சு தாங்க. ஜங்க் ஃபுட் சாப்பிடப் பழக்காதீங்க. யோகா, மியூசிக் கத்துக் கொடுத்து, மன அமைதிக்கான சூழலை உருவாக்கித் தாங்க. என் அப்பா எனக்கும் அண்ணனுக்கும்சின்ன வயசுலேயே மனம், உடல் ரீதியான நல்ல விஷயங்களைச் சொல்லித் தந்ததால்தான், இன்னைக்கு நாங்க எந்த டென்ஷனும் இல்லாம இருக்கோம்.''

'உங்க அண்ணன் 'சிக்ஸ் பேக்’ வெச்சிருந்தாங்க. நீங்க ஏதும் ட்ரை பண்றீங்களா?'

''சிக்ஸ் பேக்’ வேண்டவே வேண்டாம். யாருக்காவது சிக்ஸ் பேக் வைக்கணும்னு ஆசை இருந்தாலும், முதல்ல அழிச்சிடுங்க. அண்ணன் பட்ட கஷ்டத்தை நேர்ல பார்த்து இருக்கேன்.  மூட்டை தூக்குறவங்க, விவசாயிகள், கடினமான வேலை பார்க்கிறவங்களுக்கு, இயற்கையாவே சிக்ஸ் பேக் இருக்கும். திடீர்னு நாலு மாசத்துக்குள்ள சிக்ஸ் பேக் கொண்டுவரணும்னு நெனைச்சா, உடம்புதான் வீணாப் போகும். சீக்கிரமே வயசான தோற்றம் வந்துடும். உடம்பில் இருக்கும் மினரல்ஸ் எல்லாம் போயிடும். மூணு, நாலு வருஷம் தொடர்ந்து வொர்க் அவுட்ஸ் பண்ணா, இயல்பாவே உடம்புல ஒருவித 'சிக்ஸ் பேக்’ வந்துடும். குறைவான நாட்கள்ல, சிக்ஸ் பேக் கொண்டுவரணும்னு நினைக்கிறதே ஆபத்தானது. ஃபிட்டா இருந்தாப் போதும் மாமா!''

- புகழ் திலீபன்  

 டிப்ஸ்:

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

குறிப்பிட்ட உணவுப் பழக்கத்துக்கு அடிமை ஆகாதீங்க. இயற்கை உணவுகளைச் சாப்பிடுங்க.

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

 நேரம் கிடைக்கிறப்ப விளையாடுங்க. வயசானாலும் விளையாடலாம். கூச்சப்படாம விளையாடுங்க. உடல் வலுவாகும், ஆரோக்கியமா இருக்கும்.

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

 சீக்கிரம் தூங்கி, சீக்கிரமா எழுந்துடுங்க, உடம்பை சுறுசுறுப்பா வெச்சிருக்கும்.

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

ஏதாவது ஓர் இசைக்கருவி அல்லது இசைக்கு அடிமையாகுங்க. மனசு எப்பவும் சந்தோஷமா இருக்கும்.  

சோர்வைப் போக்கும் சர்வாங்க ஆசனம்!

 வருஷம் ஒரு முறை மாஸ்டர் செக்கப் செஞ்சுக்குங்க. ஆரோக்கியத்துக்கு அதுதான் அஸ்திவாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு