Published:Updated:

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

பிரீமியம் ஸ்டோரி
ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

தன் வெங்கலக் குரலால், தமிழ்த் திரை உலக ரசிகர்களைக் கவர்ந்தவர், கலைமாமணி வி.எஸ். ராகவன். 1,000 படங்களுக்கும் மேலாக நடிப்பில் முத்திரை பதித்தவர். 81 வயசு. ஆனாலும் அதே அதே சுறுசுறுப்பு, கம்பீரம்... அதே கலகலப்பு.    

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 பிடித்த உணவு புளியோதரை. 'புளி’ ரத்தத்தைச் சுண்டவைக்கும் என்பதால், தவிர்க்கச் சொல்லிவிட்டார்களாம்.

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 தினமும் ஒருவேளை மட்டும் சாதம், சாம்பார், பச்சடி, காய்கறி, கூட்டு, பொரியல் என்று ருசியான முழு சாப்பாடு. மதியம் கஞ்சி, நீர் ஆகாரமும் பழங்கள், காய்கறி சாலட்டும் சாப்பிடுவார். இரவில் மிக எளிமையான உணவாக, சப்பாத்தி. இந்த 'டயட்’ சார்ட்டில் மனிதர் மிகவும் ஸ்ட்ரிக்ட்!

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 பழங்கள் என்றால் மிகவும் இஷ்டம். ஆனால், சர்க்கரை நோய் எட்டிப்பார்த்திருப்பதால், மா, பலா, வாழை எனும் முக்கனிகளுக்குத் தடா.  

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 மன வலிமைதான் இவரின் அடையாளம். 'அதுவே என் ஆரோக்கியமும் கூட’ என்கிறார் தன் ஃபேவரைட் முறுவலுடன்.

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

   ஷூட்டிங், வீட்டு வேலை, டி.வி. பார்ப்பது, ஆரோக்கியம் பற்றிய புத்தகங்களைப் படிப்பது என்று எப்போதும் பிஸி.  

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 தினமும் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராய்வதில் ஆர்வமிக்கவர். படித்த செய்திகளை திரைப்பட சகாக்களுடன் பகிர்ந்து கொள்வதில், ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகம்.  

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 பாட்டி வைத்தியத்தின் மீது அதீத நம்பிக்கை. 'சுக்கு, மிளகு, சீரகம் இருந்தால் போதும், எந்தச் சிக்கலும் இருக்காமல் அந்த நாளைக் கழிக்கலாம்’ என்பார். தேவைப்பட்டால், அதைக் கடைப்பிடிப்பதும் உண்டு.

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் தினமும் நிச்சயம். 'என் ஆரோக்கியத்தின் அடித்தளம் அவை!’ என்கிறார் பெருமையாக.

ஸ்கேன் - வி.எஸ்.ராகவன்

 தினமும் காலை எழுந்ததும் ஒரு மணி நேரம் வாக்கிங். கால் 'ஸ்லிப்’ ஆனதில் இருந்து நடைக்குக் கொஞ்சம் ஓய்வு. 'விரைவில் மீண்டும் நடப்பேன்’ என்கிறார் உறுதியாக. அந்த கம்பீரக் குரலில் நம்பிக்கை தெறிக்கிறது!

- உமா ஷக்தி

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு