Published:Updated:

தினமும் தேன் குடிங்க.. சருமம் ஜொலிக்கும்

நடிகை ஓவியா சொல்லும் அழகு ரகசியம்!

தினமும் தேன் குடிங்க.. சருமம் ஜொலிக்கும்

நடிகை ஓவியா சொல்லும் அழகு ரகசியம்!

Published:Updated:
##~##

பெயருக்கேற்ப ஓவியம் போல இருக்கிறார் நடிகை ஓவியா. செதுக்கிய மூக்கு, சிப்பி உதடு, மலையாளச் சாயலே இல்லாமல் அழகுத் தமிழில் கொஞ்சிப் பேசுகிறார். 

''உங்க ஸ்லிம் ரகசியம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இயற்கையாவே எனக்கு அமைஞ்ச உடல்வாகு இது. உடம்பை ஏத்தறதுதான் கஷ்டம். எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகவே மாட்டேன்.''

''முக வசீகரத்துக்குக் காரணம்?''

''கேமராவுக்கு முன்னால் மட்டும்தான் மேக்கப். மத்த நேரங்களில் மேக்கப்புக்கு டாட்டா! ஷூட்டிங் போயிட்டு வெயில்ல வர்றப்ப முகம் ரொம்ப டல்லா இருக்கும். அப்ப, கொஞ்சம் தயிர்ல லெமன் ஜூஸ் கலந்து முகத்துல மசாஜ் பண்ணுவேன். பத்து நிமிஷம் கழிச்சு முகம் கழுவினால், சூப்பர் ஃப்ரெஷ்ஷா இருக்கும். தினமும் காலைல ஒரு டீஸ்பூன் தேன் குடிப்பேன். அரை ஸ்பூன் தேன்ல, ரெண்டு ஸ்பூன் பன்னீர் சேர்த்து நல்லா கலக்கி முகம், கழுத்து, கைகள்ல தேய்ச்சு, பத்து நிமிஷம் ஊறவெச்சிக் கழுவிப்பேன்.  சருமத்தோட நிறம் மாறி, 'பளிச்’னு ஆயிடும்.''

தினமும் தேன் குடிங்க.. சருமம் ஜொலிக்கும்

''சருமத்துக்கு வேறு என்ன கூடுதல் பராமரிப்பு?'

''எனக்கு வறண்ட சருமம். அதிகமா மாய்ஸரைசர் பயன்படுத்துவேன். 'சன் ப்ளாக்’ போடாம வெளியே போக மாட்டேன். நேரம் இருந்தால், வீட்டிலேயே இயற்கையான முறையில் 'ஃபேஷியல்’ செஞ்சுப்பேன்.''  

''தலைமுடியை எப்படிப் பராமரிக்கிறீங்க?''

''எனக்கு நிறையத் தலைமுடி இருந்தது. சமீபத்தில்தான் ஹேர்கட் பண்ணிக்கிட்டேன். தலையில் தேங்காய் எண்ணெய் தேய்ச்சு நல்லா மசாஜ் பண்ணுவேன். எப்பல்லாம் முடியுதோ, அப்பல்லாம் ஹேர் ஸ்பா எடுத்துப்பேன். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து மூடி முந்தின நாள் இரவு வெச்சிடணும். காலையில் வெறும் வயிற்றில் இந்தத் தண்ணீரைக் குடிக்கணும். தினமும் இந்த வெந்தய வாட்டர் குடிச்சிட்டு வந்தால், முடி உதிராது, பொடுகு பிரச்னையும் இருக்காது. முடியும் அடர்த்தியா வளரும். உடம்புக்கும் குளிர்ச்சி.''

''டயட்டிங்?''

''நோ சான்ஸ். 'மெரீனா’ படத்துல வர்ற மாதிரி நான் சாப்பாட்டுப் பிரியை. சாப்பாட்டை நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவேன். எங்க ஊர்ல எல்லாம் எப்பவுமே விருந்து சமையல்தான். அதனால், டயட்-னா என்னன்னே தெரியாது.''  

தினமும் தேன் குடிங்க.. சருமம் ஜொலிக்கும்

''உணவு வகைகள்ல பிடிச்சது?''

''கேரள உணவுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்.  அதிலயும், மீன் ரொம்பவே பிடிக்கும். சென்னைக்கு வந்ததுலேர்ந்து பொங்கல் வடையை விரும்பிச் சாப்பிடறேன். தோசை, மலாய் ஃபுட்ஸ்-ம் பிடிக்கும்.''

''வாக்கிங்,  உடற்பயிற்சி ஏதேனும்?''

''ஆசை இருக்கு. ஆனா, நேரம்தான் இல்லை. வொர்க்- அவுட் பண்றதுக்கு முன்னாடி 'ஸ்பாட் ஜாக்கிங்’ பண்ணுவேன். ஒரு மணி நேரம் ஜிம் வொர்க்அவுட்ஸ் பண்ணுவேன். அந்த நாளுக்கான முழு சக்தியும் கிடைச்சிடும்.''  

''கோபம் வருமா?''

''கொஞ்சம் வரும். ஆனா, எதுக்கும் சட்டுன்னு உணர்ச்சிவசப்பட மாட்டேன். 'உம்மு’ன்னு இருக்கிறதும் பிடிக்காது. ஜாலி டைப். எப்பவும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும். என் அழகின் ரகசியம் அதுவாக்கூட இருக்கலாம்!''

''ரிலாக்ஸ் மந்திரம்?''

''மூடுக்கு ஏத்த மாதிரிதான். பாட்டு விரும்பிக் கேட்பேன். சந்தோஷமா இருந்தா, குத்துப் பாட்டு. கொஞ்சம் அப்செட்டா இருந்தா, மெலடி.  மலையாளம், தமிழ், இங்கிலீஷ்னு எல்லா மியூசிக்கும் பிடிக்கும். ரொமான்ஸ், காமெடி நாவல்கள் படிப்பேன்.  இப்ப நேரம் கிடைக்கலை. வாரப் பத்திரிகைகள் கட்டாயம் படிப்பேன்.''

தினமும் தேன் குடிங்க.. சருமம் ஜொலிக்கும்

''ஸ்ட்ரெஸ் ஏற்பட்டா, என்ன செய்வீங்க?''

''அதைப் பத்தியே ரொம்ப யோசிக்காம பேசாமத் தூங்கிடுவேன். தொடர்ந்து சினிமா பார்ப்பேன். ஜிம் போய் வொர்க்அவுட் பண்ணுவேன். பீச்சுக்குக் கிளம்பிப் போவேன். அந்த நேரத்துல என்ன செய்யணும்னு தோணுதோ, அதைச் செய்வேன்.  எந்தக் காரணத்தைக்கொண்டும், ஸ்ட்ரெஸ் அதிகரிக்க விட மாட்டேன். அதுவே வந்த வேகத்துல பயந்து ஓடிப் போயிடும்.''

''உங்க அகராதியில் அழகுன்னா என்ன?''

''தன்னம்பிக்கையும் தைரியமும் ஒரு பெண்ணுக்கு ரொம்ப முக்கியம். எந்த வேலையில் இருந்தாலும் அதில் நிறைய சவால் இருக்கும். பிரச்னைகள் வரத்தான் செய்யும். சோர்ந்துபோயிடாம, எதையும் எதிர்கொள்ள எப்பவும் தயாரா இருக்கணும்.  அப்பதான் அடுத்த வேலையைச் செய்ய முடியும். ஈகோ, தலைக்கனம் இதெல்லாம் தேவை இல்லை. எளிமையா இருக்கணும். என்னோட வருங்கால வாழ்க்கைத்துணையிடம் நான் எதிர்பார்க்கும் முக்கியமான குவாலிட்டி, சிம்ப்ளிசிட்டிதான். ஈடு இணை இல்லாத அழகுன்னா, அதுதான்!''

ஓ... ஹோ... அதுதான் நீங்க இத்தனை அழகா?!

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism