Published:Updated:

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

Published:Updated:

தமிழ் ஆளுமைகளில் அற்புதமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். கனடாவில் வாழும் ஈழத் தமிழர். 76 வயது என்றால், நம்ப முடியாது.  உறவுகள், உணர்வுகள் மீட்டும் படைப்பாளி         அ.முத்துலிங்கம் பற்றிய ஸ்கேன் இங்கே...

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

  தினமும் காலையில் முக்கால்  மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி. வசிக்கும் கனடா பகுதி குளிர் தேசம் என்பதால், மூன்று நான்கு மாதங்கள் தெருவில் நடக்க முடியாது. அந்தச் சமயங்களில் வீட்டின் உள்ளே டிரெட்மில் பயிற்சி எடுப்பார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்
ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

  ''நம் உடம்புக்கு ஏற்ற உணவுமுறையைத் தேர்வு செய்யவேண்டும். என் உடம்புக்கு ஏற்ற, பிடித்த உணவு அரிசிச் சோறுதான். அதைத் தவிர இடியாப்பம், புட்டு, தோசை பிடிக்கும். ஆனால், இவற்றை வீட்டில் செய்வது இல்லை. அதை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிறது. எங்கேயாவது விருந்துக்கு வெளியே போனால், நான் விரும்பும் உணவை சாப்பிடுவேன்.''

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

 காலை உணவு ஓட்ஸ் கஞ்சியும், முட்டையின் வெள்ளைக் கருவும்தான். காலை 11 மணிக்கு, பாதி ஆப்பிள். அல்லது பாதி வாழைப்பழம் (மீதிப் பாதி மனைவிக்கு). மதியம் வேக வைக்காத கீரை சாலட். அத்துடன் அவித்த கோழிக்கால் ஒன்று. மாலை, பிஸ்கட்டும் தேநீரும். மறுபடியும் இரவு ஒரு சப்பாத்தியும் தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் மரக்கறி.  இரவு படுக்கும் முன், ஒரு பிஸ்கட், ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு. இதுதான் அவரது உணவுப் பட்டியல்.

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

  தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பார். ''இளமையாக இருக்கும்போது, உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். இது வயதாகும்போது, 60 சதவிகிதமாகக் குறையும். அதை ஈடுகட்ட, தாகம் எடுக்காத போதும், தண்ணீர் குடிக்க வேண்டும்'' என்பார்.

ஸ்கேன் - அ.முத்துலிங்கம்

  ''மனதில், தீய குணங்கள், பொறாமையை விட்டொழித்தாலே மனம் அமைதியாக இருக்கும். இதற்கெனத் தனியாக தியானம் தேவையே இல்லை'' என்பது இவர் மந்திரம்.  

- உமா ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism