Published:Updated:

'இசையே மனசுக்கு இதம்!'

ஃபிட்னெஸ் பகிர்கிறார் விஜய் ஆண்டனி

பிரீமியம் ஸ்டோரி
##~##

கீபோர்டு முன் அமர்ந்தாலும், கேமரா முன் எழுந்தாலும் கலக்கும் இசையமைப்பாளர், நடிகர்... விஜய் ஆண்டனி.       

'உடலை உரம் மாதிரி வைக்க என்ன மாதிரி பயிற்சிகள் செய்றீங்க?'

'நடிப்பில் இறங்கினதும், வாரத்துக்கு இரண்டு முறை நார்மல் வொர்க்அவுட்ஸ் மட்டும் செய்வேன். ஜிம் வொர்க்அவுட்ஸ் அதிகம் பண்ணுவது இல்லை. புஷ் அப்ஸ், சிட் அப்ஸ், தண்டால் எடுப்பேன். என் உடலைப் பொறுத்த வரை கலோரிகள் அதிகமாக் குறையும். அதுக்கு ஏற்ற மாதிரியான உணவுகள் எடுத்துப்பேன். அடிக்கடி பழச்சாறு குடிப்பேன்.'

'அதிகமா உடற்பயிற்சி செய்யாமலே உடம்பை ஃபிட்டா வெச்சிருக்கீங்களே... எப்படி?'

'உணவுப் பழக்கமும் ஒரு காரணம். காலை பிரேக் ஃபாஸ்ட்டை எந்தக் காரணம்கொண்டும் தவிர்க்க மாட்டேன். ஓட்ஸ் இட்லி, தோசைனு எளிய உணவுதான் சாப்பிடுவேன். மதியம் குறைவான சாதம், ரசம், சாம்பார், காய்கறிகள், மோர், முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் எடுத்துப்பேன். சாப்பாட்டை நல்லா பொறுமையா சாப்பிடுவேன். இதனால, வயிற்றுக்கு நிறைவா சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். நிறையத் தண்ணீர் குடிப்பேன். அதுக்கப்புறம், ஓய்வே இல்லாமல் சுறுசுறுப்பா வேலை பார்க்க ஆரம்பிச்சுடுவேன். இரவு, பெரும்பாலும் சப்பாத்திதான்.'  

'இசையே மனசுக்கு இதம்!'

'ஓய்வு நேரத்தில் என்ன பண்ணுவீங்க?'

''ஓய்வா... அப்படின்னா என்னன்னே தெரியாது. எப்பவும் வேலை, வேலை, வேலைதான். காலேஜ் படிக்கறப்ப, சினிமா பார்ப்பது, நண்பர்களோட வெளியே ஊர் சுத்துறது, மியூசிக் கேட்கிறதுன்னு ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். இனிமேதான், நிறைய இடங்களுக்குச் சுற்றுலா போகணும். சினிமா பார்க்கிறதுக்கு நேரம் ஒதுக்கணும்னு தோணுது. ரொம்பவே ஹெல்த்தியான கேள்வி. தேங்க்ஸ்!''

''இசை நடிப்புன்னு உங்க நேரத்தை எப்படிப் பயன்படுத்துறீங்க?''

''காலையில் சீக்கிரமே எழுந்துடுவேன். அதிகம் இசை பற்றி சிந்திப்பேன். நடிப்புக்கு இப்பதான் நேரம் ஒதுக்கியிருக்கேன். நடிப்பு, இசை இரண்டையும் குழப்பிக்க மாட்டேன். தனித்தனியா நேரம் ஒதுக்கி வொர்க் பண்ணுவேன். சரியான நேரத்துக்கு சாப்பிடுவேன். மனசுக்குத் திருப்தி தர்ற வரைக்கும் வேலை செய்வேன். நாம செய்யும் வேலையை சந்தோஷமா செஞ்சா, எதுக்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. தெளிவாத் திட்டமிட்டு வேலையைச் செஞ்சா, எத்தனை வேலைகளை வேணும்னாலும் ஒரே ஆள் தனியா செய்யலாம்.''

''சினிமாவில் வெற்றி தோல்வியை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?''

'' 'நான்’ படத்தில் வொர்க் பண்ண அத்தனை பேருமே ரொம்ப டென்ஷனா இருந்தாங்க. நான் எந்தப் பதட்டமும் ஆகாமல் கூலா அடுத்த படத்துக்கான மியூசிக் வேலையில ஈடுபட ஆரம்பிச்சிட்டேன்.

'இசையே மனசுக்கு இதம்!'

இசையே மனசை இதமாக்கும். மனப்பூர்வமா நாம செய்யும் வேலைக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு. வெற்றி- தோல்வியை தராசு மாதிரி எடை போடணும். சுயமா சிந்திச்சு தப்புன்னு மனசுக்குப்பட்டா... வருத்தப்படணும். நல்லா செஞ்ச திருப்தி இருந்தால், நம்மை நாமே பாராட்டிக்க வேண்டியதுதான்.''

-புகழ் திலீபன்

படங்கள்:பொன். காசிராஜன்

 விஜய் ஆண்டனியின் ஹெல்த் டிப்ஸ்!

'இசையே மனசுக்கு இதம்!'

 விடியற்காலையில் எழுந்திருக்கப் பழகிக்குங்க. அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்கும்.

'இசையே மனசுக்கு இதம்!'

 வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்குச் செல்லுங்கள். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.  

'இசையே மனசுக்கு இதம்!'

 காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீங்க. அதோட விளைவு, வயதான பிறகுதான் தெரியும்.

'இசையே மனசுக்கு இதம்!'

 அதிக அளவு காய்கறி, பழங்களை சாப்பிடுவது உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தைக் கொடுக்கும். எப்போதும் இளமையோடு வைத்திருக்கும்.  

'இசையே மனசுக்கு இதம்!'

 மாதம் ஒருமுறை சாப்பிட்டு வந்த அசைவ உணவு ஞாயிறு தோறும் என ஆரம்பித்து, தற்போது தினம் தினம் அசைவ உணவை சாப்பிடுகின்றனர்.  இதனால் ஆயுள்தான் குறையும். அசைவம் சாப்பிடுறதைக் குறைச்சுக்குங்க.

'இசையே மனசுக்கு இதம்!'

 எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைக்கும் உணவை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியத்துக்கான வழி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு