Published:Updated:

நாக்கை கட்டுப்படுத்தினால்

உடம்பை கட்டுக்குள் வைக்கலாம்!

நாக்கை கட்டுப்படுத்தினால்

உடம்பை கட்டுக்குள் வைக்கலாம்!

Published:Updated:
##~##

'பாய்ஸ்’ படத்தில், அறிமுகமாகி, ''காதலில் விழுந்தேன்’ படத்தில் இளசுகளின் எனர்ஜெடிக் டானிக்காக இன்றும் இனிக்கும் 'நாக்கமுக்க’ பாடலுக்கு ஆடி, பட்டை கிளப்பியவர் நடிகர் நகுல்.    

'' 'பாய்ஸ்’ படத்தில் புஷ்டியா இருந்தீங்களே? எப்படி இந்த மாற்றம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் ஃபிட்னெஸைப் பொருத்தவரைக்கும், 'பாய்ஸுக்கு முன்’, 'பாய்ஸுக்குப் பின்’ அப்படின்னு ரெண்டாப் பிரிக்கலாம். அவ்வளவு நேர் எதிராக இருக்கும். நான் ஒரு சாப்பாட்டு ராமன். நேரம் காலம் இல்லாம... எப்பப் பாத்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். நல்லாத் தூங்கிட்டு இருக்கிறப்போ கூட, திடீர்னு எழுந்து ஏதாவது சாப்பிடுவேன். என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. நடுராத்திரியில் அம்மாவை எழுப்பி, 'அன்னைக்கு ஒரு நாள் செஞ்சீங்களே... அந்த சிக்கன் ரெசிபியை செஞ்சு தாங்க’ன்னு தொல்லை பண்ணி இருக்கேன். முதல் பட வாய்ப்பு வந்ததும், கொஞ்சம் உடம்பைக் குறைக்கணும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு எந்த முயற்சியும் எடுக்கலை. 'காதலில் விழுந்தேன்’ பட ஷூட்டிங் போறதுக்கு முன்னால், ஃபிட்னெஸ் டிரெயினர் துணை இல்லாமல் நானே உடற்பயிற்சி செஞ்சேன். நிறைய ஓடிக்கிட்டே இருப்பேன். சரியா சாப்பிட மாட்டேன். அதனால, திடீர்னு 10 கிலோ எடை குறைச்சேன். அது தப்புன்னு இப்பத் தெரியுது. அதனால், உடல் ஆரோக்கியம் கெட்டுடும். குண்டா இருக்கிறவங்க கொஞ்சம் கொஞ்சமாத்தான் உடல் எடையைக் குறைக்கணும். சர்க்கரை, உப்பு, அரிசி இந்த மூன்று வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்தாலே போதும்... உடல் நல்லா இருக்கும். இப்ப இருக்கிற நகுல்தான் பெர்ஃபெக்ட் ஃபிட். அளவான சாப்பாடு, ரெகுலர் வொர்க்அவுட்ஸ்னு பழகிக்கிட்டேன்.''

நாக்கை கட்டுப்படுத்தினால்

''உங்களோட ரெகுலர் வொர்க்அவுட்ஸ் என்னென்ன?''

''அதிக நேரம் ரன்னிங், புஷ் அப்ஸ், சிட் அப்ஸ், மீடியம் மசில்ஸ் இம்ப்ரூவ் வொர்க்அவுட்ஸ் செய்வேன். இப்ப கொஞ்ச நாளா, கார்டியோ பால் எக்ஸர்சைஸ் பண்ணிட்டு இருக்கேன். என் அக்கா தேவயானி, யோகா பண்ணச் சொல்றாங்க. அதுக்கும் தயாராகிட்டிருக்கேன்.''

''டயட் விஷயத்துல நீங்க எப்படி?''

''காலையில் காய்கறி, முளைகட்டிய பயறு சாலட்தான் உணவு.  மதியம் குறைவான அரிசி சாதம். அதுவும் சிகப்பு அரிசி. நிறையக் காய்கறிகள். பொதுவா, அவங்கவங்க உடலுக்கு என்ன மாதிரியான ஊட்டச் சத்து தேவையோ, அந்த உணவை சரியான அளவு எடுத்துக்கணும். இதை சரியாக் கடைப்பிடிச்சாலே உடல் பருமனைத் தவிர்க்கலாம்.  இது என் அனுபவ உண்மை.''  

'' 'வல்லினம்’ படத்தில் பேஸ்கட்பால் வீரரா நடிக்கிறீங்க... விளையாட்டில் ஆர்வம் உண்டா? ரிலாக்சேஷன் என்ன?''

நாக்கை கட்டுப்படுத்தினால்

''ஸ்கூல் படிக்கிறப்ப நிறைய கேம்ஸ்ல கலந்துப்பேன். அப்பவே குண்டு உடம்பை வெச்சுக்கிட்டு, ரன்னிங்ல பிரைஸ் வாங்கி இருக்கேன். கிரிக்கெட் விளையாடுறது, பாட்டு கேட்கறது ரொம்பப் பிடிக்கும்.

'வல்லினம்’ படம் முழுக்க விளையாடிக்கிட்டே இருப்பேன். நிஜத்திலும் அதுமாதிரி விளையாடணும். உடம்புக்குப் புத்துணர்ச்சியா இருக்கும். சின்ன வயசுலேர்ந்து ஏதாவது ஒரு விளையாட்டு பழகிட்டா, அதுவே அவங்களோட எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதா அமைஞ்சிடும்.''    

''உடம்பைக் குறைக்க நினைக்கிறவங்களுக்கு நீங்க தரும் ஆலோசனை?''

''நம் உடம்பைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுவெச்சுக்கணும். உடம்பைக் குறைக்கிறதுக்கான ஏதாவது உருப்படியான காரணத்தை முதல்ல மனசுல விதைக்கணும். உதாரணத்துக்கு, சிலர் போலீஸ் வேலைக்குப் போக நினைப்பாங்க. லவ் பண்ற பெண்ணை இம்ப்ரெஸ் பண்ண விரும்புவாங்க.  சினிமாவில் நடிக்க ஆசைப்படுவாங்க.  இப்படி ஏதாவது ஒரு காரணத்தோட, மனசைத் தயார்படுத்திக்கணும். சரியான உடற்பயிற்சியாளரோட ஆலோசனைப்படி, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடணும். அதோடு, சாப்பாட்டு விஷயத்துல நாக்கையும், மனசையும் கட்டுப்படுத்தத் தெரிஞ்சுக்கணும். அப்போதான் உடம்பு கட்டுக்கோப்பா இருக்கும்!''

- புகழ் திலீபன்

நாக்கை கட்டுப்படுத்தினால்

நகுல் தரும் ஹெல்த் டிப்ஸ்!

• பசி எடுத்தால் மட்டும் சாப்பிடுங்க. நொறுக்குத் தீனியைத் தவிர்த்திடுங்க. எந்த  உணவுக்கும் அடிமையா காதீங்க!

• சினிமாவுக்காகத்தான் 'சிக்ஸ் பேக்’ வைக்கிறோம். அந்தப் படம் முடிஞ்சதும் நார்மல் உடல் நிலைக்கு வந்துடுவோம். ஸ்டைலுக்காகக்கூட, அந்த முயற்சியில் ஈடுபடாதீங்க.  

• நிறைய ஜூஸ் குடிக்கிறது ரொம்ப நல்லது.

• நீச்சல் கத்துக்கிட்டாலே, நோய் கிட்ட நெருங்காது.  நீச்சல் கத்துக்குங்க. உடம்பும் மனசும் சும்மா ஜில்லுனு இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism