Published:Updated:

''ஜீ... பூம்... பா... 'ஸும்பா’!

எடையைக் குறைக்கும் நடன மந்திரம்!

''ஜீ... பூம்... பா... 'ஸும்பா’!
##~##

ஜிம்மில் கடினப் பயிற்சி... உணவில் டயட்... என எடையைக் குறைக்க, பலரும் உடலை வருத்திக்கொள்வது உண்டு. இதற்கு மாற்றாக, எளிதில் உடலை ஃபிட்டாக வைக்க ஒரு புத்துணர்வு தரும் நடனம் கலந்த பயிற்சிதான் 'ஸும்பா’.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடலைக் கட்டுக்கோப்பாகவும், மனதைப் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க சால்ஸா, டாங்கோ,  ஹிப் ஹாப், மெரெங்கு போன்ற நடனங்கள் இன்று ஜிம்களையும் ஆக்கிரமித்துவிட்டன. அதிலும் பிரபல நடன பயிற்சியான 'ஸும்பா’ என்ற பெயரைக் கேட்டாலே உள்ளுக்குள் ஒருவித உற்சாகம் பிறக்கும்.  இந்த ஸும்பா நடன பயிற்சியில், மேலும் உணர்ச்சிப்பெருக்குடன் வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு ஆடும், புதுமையான 'ஸும்பா இன்டர்நேஷனல் டான்ஸ் பயிற்சி’ இப்போ ஹாட்.  

ஸும்பா இன்டர்நேஷனல் மிக்ஸ் டான்ஸ் பயிற்சியின் பலன்களை கூறுகிறார் 123 உடற்பயிற்சிக்கூடத்தின் பயிற்சியாளர் ராம்குமார்.

'உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் என பல நோய்களுக்கான அறிகுறிகள் தென்படும்போதுதான், பலர் உடற்பயிற்சியை நாடிச் செல்கின்றனர். 'நோய் வரும்முன் காப்பது’தான் என்றும் சிறந்தது. நடனம், உடலுக்கும் மனதுக்கும் வலுச்சேர்க்கும்.

இதை உடற்பயிற்சியாக இல்லாமல் பொழுதுபோக்காக, உற்சாகத்துடன் செய்ய ஸும்பாவின் பிரத்யேகப் பாடல்களுக்கு மாற்றாக இன்டர்நேஷனல் பாடல்களுக்கேற்ப கற்றுத்தரப்படுகிறது. பயிற்சியின்போது நம் நாட்டுப் பாடலும் கலந்துவருவதால், மக்கள் இன்னும் ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகின்றனர்.  

மேற்கத்திய நடனங்கள் கலந்த ஸும்பா நடனப் பயிற்சியால், நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 முதல் 800 கலோரிகள் வரை குறைக்கலாம். அடுத்தடுத்து பல பாடல்கள் மாறி மாறி வரும்போது, விதவிதமான ஸ்டெப்களும் கற்றுக் கொள்ளமுடியும். தொடர்ந்து ஒரு மணி நேரம் இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது அதிக வியர்வை வெளியேறி, உடலுக்குள் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படும். ஸும்பா இன்டர்நேஷனல் நடன பயிற்சியில் ஒவ்வொரு பாடலும் முழு வேகத்துடன் இருப்பதால், கூடுதலாகக் கலோரிகள் குறைக்கப்படுகின்றன. இதில் வகுக்கப்பட்டுள்ள பயிற்சிகள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஃபிட்டாக வைக்க உதவுகின்றன. ஒருவரின் உடல்நிலை, வயதுக்கு ஏற்ப ஸும்பா இன்டர்நேஷனல் டான்ஸ் பயிற்சி பிரிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 4 முதல் 5 நாட்கள் வரை ஒரு மணி நேரம் பயிற்சி செய்தாலே போதும். முறையான பயிற்சியைத் தொடர்ந்து பின்பற்றினால் ஆறு மாதங்களுக்குள் எடை வெகுவாகக் குறைந்து உடலில் நளினமும் கூடும். இதயம் பலப்படும். உடல் உறுதியாகும். இதற்கு பிரத்யேக உணவுக் கட்டுப்பாடும் இல்லை.

மன அழுத்தம் குறைய விரும்புபவர்கள், இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்ளலாம்'' என்றார்.

பண்றதுக்கு மட்டுமா. பார்க்கவும் செம ஃப்ரெஷ்!

- ரெ.சு.வெங்கடேஷ்,

படங்கள்: தி.குமரகுருபரன்

 ஸும்பா பலவிதம்!

ஸும்பா நடனத்தை வகுத்தவர் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் ஆல்பர்ட்டோ பீட்டோ பெரேஸ். ஒருநாள் பயிற்சிக்குச் செல்லும்போது, ஏரோபிக்ஸ் பாடல் சிடி-யை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். அதற்குப் பதிலாக தன் காரில் இருந்த சால்ஸா, டாங்கோ, மெரெங்கு போன்ற நடனப் பாடல்களை ஒன்றாகக் கலந்து, புது முறையில் ஒரு நடன பயிற்சியை யதேச்சையாக அறிமுகப்படுத்தினார். பின்னர் சல்ஸா, மாம்போ, ஃபிளம்மிங்கோ, ஹிப் ஹாப், டேங்கோ போன்ற நடனங்களைச் சேர்த்து மெருகேற்றி ஸும்பாவாக மாற்றினார்.