Published:Updated:

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

டந்தால் போதும்... வியாதிகள் ஓடும். ஆனால், நடக்கிறீர்களா? நெரிசல் மிகுந்த சாலையில் நடக்க முடியவில்லை என, வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயன்படுத்தும் டிரெட்மில் கருவி இப்போது பரவலாகிவிட்டது. பல வகைகள், பல மாடல்கள் மார்க்கெட்டில் குவிந்துள்ளன. சில மாடல்களின் விவரங்கள் இங்கே...

 ஏ.சி.பி  205

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விலை:

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

49,900

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

மார்க்கெட்டில் உள்ள டிரெட்மில்களில் சிறந்தது. பல்வேறு தனித்தன்மைகளைக்கொண்டது. நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது சலிப்போ, சோர்வோ ஏற்பட்டுவிடாமல் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடக்கும் வசதி இதில் உண்டு. டிரெட்மில்லின் உள்ளேயே ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கருடன் நம்முடைய ஐபாட் அல்லது  செல்போனை இணைத்துக்கொள்ளலாம். இதன் திறன் நான்கு ஹெச்.பி. அதிகபட்சமாக 120 கிலோ எடையைத் தாங்கும். பவர் எலிவேஷன் (10 டிகிரி) உள்ளதால் சாய்வுகளைத் வசதிக்கேற்ப வைத்துக்கொள்ளலாம். இதை மடித்து, நகர்த்தி வேறு இடத்திலும் ஈஸியாக வைக்க முடியும். ஐந்து புரோகிராம்களைக்கொண்டது. சஸ்பென்ஷன் அதிகமாக இருப்பதால், நடப்பதற்கு  சீரானது. இதன் நீளம் 54 இன்ச், அகலம் 20 இன்ச்.

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

டி.ஆர்.1200ஐ லைஃப் ஸ்பான்

விலை:

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

1,00,000

இந்த மாடலின் மோட்டார் திறன் 2.5 ஹெச்.பி. இதன் வேகத்திறன் 0.8 - 16.1 கிலோ மீட்டர் வரை ஓடுமளவுக்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. பயிற்சி மேற்கொள்ளும்போது, சலிப்போ «சார்வோ ஏற்படாமல் இருக்க, பாட்டுக் கேட்டுக்கொண்டே நடக்கும் வசதி உண்டு. இதில் 17 புரோகிராம்கள்  உள்ளன. இதன் கண்ட்ரோல் பட்டன்ஸ் கைப்பிடியில் உள்ளதால், இயந்திரக் கட்டுப்பாடு மிகவும் எளிதாக இருக்கும். இந்த இயந்திரம் உடற்பயிற்சி செய்யும் விவரங்களை, தானாக ஒரு யு.எஸ்.பி.யில் பதிவுசெய்துவிடும். இதன் மூலம் நாம் செய்த பயிற்சி பற்றிய குறிப்பு முனைகளை ஆய்வுசெய்துகொள்ள வசதியாக இருக்கும்.

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

பி.ஹெச் ஃபிட்னெஸ் மாடல் ஜி6425

விலை:

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

1,00,000/-

இந்த இயந்திரத்தில் 2.5 ஹெச் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. இது மணிக்கு 18  கி.மீ. வரை செல்லும் வேகத் திறன்கொண்டது. இதில் 12  புரோகிராம்கள் உள்ளன. வேகம், சாய்வு, ஹார்ட் ரேட் ஆகியவை டிஜிட்டலில் காட்டப்பட்டுள்ளது. இந்த மாடல் 15 லெவல் எலெக்ட்ரிக் இன்க்லைன் கொண்டது. இதன் நீளம் 182 செ.மீ, எடை 149 செ.மீ. மேலும் இதன் மென்மையான துல்லிய அமைப்பு (soft drop system) பயிற்சி செய்வதற்கு வசதியாக இருக்கும்.  

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

பி.ஹெச்  ஜி6442

விலை:

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

45,000/-

பெரிய இயங்கும் பெல்ட் அமைப்பைக்கொண்டது. இதன் அகலம் 440 மிமீ. மணிக்கு 14 கி.மீ. வரை செல்லும் வேகத் திறன்கொண்டது. மென்மையான துல்லிய அமைப்புகொண்டதால் (soft Drop system) முதுகுவலி வராமல் தடுக்கும். மேலும் இது மூன்று பெரிய LCD கொண்டுள்ளதால், பார்க்க வசதியாக உள்ளது. கண் பார்வையற்றவர்களையும் மனதில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 17.4 கி.மீ. வேகத் திறன் கொண்டது. பயன்படுத்தாத நேரத்தில், இதை மடக்கி எடுத்துவைத்துவிடலாம்.

ட்ரூ எம் 50

விலை:

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

1,75,000

ரெடி... ஸ்டெடி... ஸ்டெப்!

’Best buy runner up 2013’ என்ற விருதைத் தட்டிய இயந்திரம் இது. இது சாஃப்ட் டெக் குஷன் அமைப்புடையது. இதில் மூன்று ஹெச்.பி. டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 0.5 முதல் 12 மீட்டர் வரை செல்லும் வேகத் திறன் கொண்டது. இதில் இருக்கும் 'க்விக் ஸ்பீட் கீஸ்’ மூலம் வேகத்தை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். இது 136 கிலோ எடை தாங்கக்கூடியது. இது 58 இன்ச் நீளமும் 20 இன்ச் அகலமும் கொண்டது. விலை அதிகம்தான். ஆனால், மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும்.

ந.கீர்த்தனா,

ஜெ.பி.ரினி,

அபிநயா.கு, பா.ஓவியா

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

##~##