கண்களில் குறும்பு, கலகல பேச்சு... இரண்டும்தான் நடிகர் வினய். 'உன்னாலே உன்னாலே’ என அறிமுகமாகி, அனைவரையும் கவர்ந்த சாக்லேட் ஹீரோ.

''நல்லா இருக்கீங்களா பாஸ்?''

''ரொம்பவே நல்லா இருக்கேன். நான் நல்லா இருக்கிறதுக்குக் காரணம், நேரத்துக்குச் சாப்பிடுறதுதான். எல்லா வகையான உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும், அந்த ஊரோட, ஸ்பெஷல் உணவுகள்தான் என் சாய்ஸ். நிறையத் தண்ணீர் குடிப்பேன்.''

''ஸ்கூல், காலேஜில் வினய் எப்படி?''

''விளையாட்டுப் பையனா... நல்லாப் படிக்கிற பையனா? அப்பவும் இப்பவும் எப்பவுமே ஒரே மாதிரிதான். நான் படிச்ச ஸ்கூல்ல விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவாங்க. ஸ்கூல் படிக்கிறப்ப, என்.சி.சியில் சேர்ந்தேன். தினமும் பரேடு, ரன்னிங்னு விடாமப் பயிற்சி இருக்கும். அதனால், உடம்பை ரொம்பக் கட்டுக்கோப்பா வைச்சிருக்க முடிஞ்சது. கிரிக்கெட் வீரர் டிராவிட், என் ஸ்கூல்மேட். பள்ளி நாட்களில் நான் ஹாக்கி பிளேயர். இப்ப வாலிபால் விளையாடுவேன். விளையாடி முடிச்சப்புறம், ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். நிறையப் பேர் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் விளையாடக் கூச்சப்படுவாங்க. என்னைக் கேட்டா, எத்தனை வயசானாலும் கூச்சப்படாம, ஓடி ஆடி விளையாடுங்க. வியர்க்க விறுவிறுக்க விளையாடினால் வலுக்கூடும். எந்த வியாதியும் எட்டிப் பார்க்காது. எல்லோருமே உடற்பயிற்சி செய்யணும்!''

''ஜிம்ல, என்ன மாதிரியான வொர்க் அவுட்ஸ் பண்ணுவீங்க?''

''இப்ப ஜிம் வொர்க்அவுட்ஸ் பண்ணிட்டு இருக்கேன். எட்டு கிலோ எடை குறைக்கிறதுக்காக, அதற்கான உடற்பயிற்சிகள்தான் பண்றேன். நடைப்பயிற்சி தினமும் உண்டு. புஷ் அப்ஸ், சிட் அப்ஸ், ட்ரெட்மில் பண்றேன். ஒரே நாளில் எல்லா உடற்பயிற்சிகளையும் செய்ய முடியாது. எதையும் படிப்படியாகத்தான் செய்யணும். அதுதான் உடலுக்கு ஆரோக்கியம்.''

''உங்க டயட்?''

''காலையில் பழங்கள், ஓட்ஸ், இட்லி, தோசை, சாலட்... இப்படி ஏதாவது ஒண்ணு! மதியம் குறைவான அளவு சாதம், சப்பாத்தி. ராத்திரி இட்லி இல்லேன்னா, தானிய உணவுகள். டீ அடிக்கடி குடிப்பேன். எண்ணெய்ப் பலகாரம், நொறுக்குத் தீனியைச் சுத்தமாத் தொட மாட்டேன்.''

''உங்களை எப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கிறீங்க?''

''சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால் ஒரு நான்கு வருஷம் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருந்தேன். ஓவர் வொர்க்லோடு. அப்ப நிறைய டென்ஷன், கோபம், உணர்ச்சிவசப்படறதுனு உடம்பையும் மனசையும் ரொம்பவே வருத்திக்கிட்டேன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்றவங்களோட உணவு முறையும், வாழ்க்கை முறையும் ரொம்பத் தப்பா இருக்கு. ஒருவித மன அழுத்தத்தில்தான் வாழ்ந்துட்டு இருக்காங்கனு தோணுது. நல்லவேளை... நான் அதிலிருந்து மீண்டு வந்துட்டேன். இப்போ, ஓய்வு கிடைக்கிறப்ப, படம் பார்க்கிறது, பாட்டுக் கேட்கிறது, விளையாடுறது, குடும்பம், நண்பர்களோட நேரத்தைச் செலவிடுறதுனு வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா இருக்கு.''

புகழ் திலீபன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

''வினய் சொல்லும் விளையாட்டு டிப்ஸ்!''

''குழந்தைகள் விளையாடினால் தடுக்காதீர்கள். அதுதான் அவர்களின் ஆரோக்கியத்தின் அடையாளம்.

அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அது எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

டிஃபன் பாக்ஸில் எப்போதும் ஆரோக்கிய உணவு மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

முதுமையிலும், வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாட்டில் ஈடுபடுங்கள். நோய் கிட்டவே நெருங்காது.''