Published:Updated:

எங்கே போனாலும் ‘வாக்’ பண்ணுவோம்!

எங்கே போனாலும் ‘வாக்’ பண்ணுவோம்!

தினமும் 30-45 நிமிடங்கள் வீதம், வாரத்துக்கு ஐந்து நாட்கள் நடைப்பயிற்சி செய்வோம்.  

நடைப்பயிற்சி செய்வது...

• உயர் ரத்த அழுத்தத்தைக் தடுக்கிறது... கட்டுப்படுத்துகிறது.

•  டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

•  ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

•  மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

•  சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது.

•  மன அழுத்தம் குறைகிறது.

•  கொழுப்பை எரிக்கிறது.

• கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவை அதிகரிக்கச் செய்கிறது.

• நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகிறது.

• எலும்புகளை வலுப்படுத்துகிறது.

•  ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு ஊட்டச்சத்தை இழந்து அடர்த்தி குறையும் பிரச்னையைத் தடுக்கிறது.

•  பாதத்தில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டி அனைத்து உறுப்புக்களும் சிறப்பாக இயங்கச் செய்கிறது.

- பா.ஓவியா, கு.அபிநயா