'ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையை குறைக்கலாம்’ - இப்படிக் கவர்ச்சியான விளம்பரங்கள், டி.வி-யை ஆன் செய்ததும், வந்து காதுகளை நிறைக்கும்! எல்லாமே, வீட்டுக்குள் வைத்து பயன்படுத்தும் உடற்பயிற்சிக் கருவிகளைப் பற்றிய விளம்பரங்கள்தான். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளப் பலருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், எல்லோராலும் ஜிம்முக்கு போய் பயிற்சி எடுக்க முடியாது... பணிச்சூழல், நேரமின்மை எனப் பல காரணங்கள்...!

வீட்டுக்குள் கருவிகளை வாங்கி வைக்கலாம் என்றால், இடப் பற்றாக்குறை. எந்தக் கருவிகளை

வாங்குவது என்ற குழப்பம் வேறு... ஆனால், ஜிம்மில் செய்யும் அனைத்து பயிற்சிகளையும் ஒரே கருவியில் செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை, ஜிம்முக்கு போகத் தேவையில்லை என்பது போன்ற பல காரணங்களால் ஹோம் ஜிம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் இருக்கிறது. திருச்சியை சேர்ந்த, அனுபவம் மிக்க ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஜேசு சவரிமுத்து, ஹோம் ஜிம் கருவிகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை வழங்குகிறார்.

'வீட்டிலேயே ஜிம் வரவேற்கத் தக்க விஷயம். ஆனால் முதலில் ஒரு நல்ல ஜிம்முக்குச் சென்று ஒவ்வொரு கருவியையும் பற்றித் தெரிந்து, பயிற்சி பெற்று அதன் பிறகு வாங்குவது நல்லது. 4, 6, 8, 12, 16 ஸ்டேஷன்கள் கொண்ட ஜிம்கள் உள்ளன. ஆனால் பொதுவாக 6, 12 ஸ்டேஷன்கள் உள்ள ஹோம் ஜிம் கருவிகள் நாம் உபயோகப்படுத்தப் போதுமானவை.

விலை மலிவாக இருக்கிறது என வாங்காமல், சர்வீஸ் எவ்வாறு செய்கிறார்கள், பிராண்டட் கம்பெனியா, எத்தனை வருடங்களுக்கு உத்தரவாதம் தருகிறார்கள் என்பதை எல் லாம் கவனத்தில் கொண்டு வாங்கவேண்டும்.

மல்டி ஜிம் 6 ஸ்டேஷன்:

(விலை

60,000 முதல்)

இதில் ஆறு வகையான பயிற்சிக் கருவிகள் இணைந்திருக்கும். வயிற்றுப் பகுதிகளில் உள்ள தசைகளைக் குறைக்க, தொடை, தோள் பட்டைகளின் தசை நார்களை வலுப்படுத்த, முதுகெலும்பைச் சீராக வைத்துக்கொள்ள எனத் தனித்தனிக் கருவிகள் இதில் இருக்கும். முறையாகத் தினமும் நேரம் ஒதுக்கிச் செய்துவர தோள்பட்டை, வயிறு, கால் களில் உள்ள தசைகள் இறுகி உடலை வலுவாக்கும்.

மல்டி ஜிம் 12 ஸ்டேஷன்:

(விலை

1,75,000 முதல்)

12 விதமான உடற்பயிற்சிகளை இதில் செய்யலாம். அடிவயிறு, தோள்பட்டை, நெஞ்சு பகுதி, பைசப்ஸ், கீழ்த் தொடை மற்றும் மேல் தொடை, இடுப்புப் பகுதி ஆகியவற்றில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து, அழகான தோற்றம் பெற உதவும் இந்தக் கருவி. இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் உடலில் எந்தப் பகுதியை வலுப்படுத்த வேண்டும்என நினைக்கிறோமோ அந்தப் பகுதிக்கான கருவியை மட்டும் பயன்படுத்தித் தசைகளை வலுப்படுத்தலாம். பிறகு அடுத்த கருவிக்குச் செல்ல வேண்டும். 4 அல்லது 6 கருவிகளை முதலில் பயன்படுத்தலாம். நன்றாக வொர்க் அவுட் செய்த ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகே அடுத்தடுத்த கருவிகளில் உடற்பயிற்சி செய்யலாம். ஒரே நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்தே அவரவர்க்குத் தகுந்த வகையில் ஒவ்வொரு கருவியாக மாற்றி மாற்றி உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். குடும்பத்துடன் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உற்சாகம் பிறக்கும். ஈடுபாட்டுடன் செய்யத் தோன்றும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

1 எந்த ஒரு கருவியையும் முன் அனுபவம் இல்லாமல் பயன்படுத்த கூடாது.

2உடல் நிலையைப் பரிசோதனை செய்துகொண்டு, உடற்பயிற்சி ஆலோசகர் உதவியுடன் நன்றாகக் கற்றுக்கொண்டபிறகு, ஹோம் ஜிம்மைப் பயன்படுத்தவும்.

3 கடினமான பயிற்சிகளைச் செய்யும்போது உடலில் உள்ள நீரின் அளவு வேகமாகக் குறையும். எனவே, நாக்கு உலரும்போது மிகச் சிறிதளவே தண்ணீரைத் தொடர்ந்து அருந்தவேண்டும்.

4 சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

5 உடற்பயிற்சி செய்யும் நேரங்களில், புரதச்சத்து பானங்களைத் தேவையான அளவு அருந்தலாம்.

-பு.விவேக் ஆனந்த்,

படம்: தே.தீட்சித்