Published:Updated:

கழுத்து... கவனம் செலுத்து!

கழுத்து... கவனம் செலுத்து!

ந்த பிஸி லைஃப்ஸ்டைலில் யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. யாராவது கூப்பிட்டால் கூட, ரோபோவைப் போல், கண்களை மட்டுமே திருப்பிப் பதில் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு, கழுத்து வலி.

கழுத்து வலி வராமல் தடுக்கும் வழிகளையும், வந்தாலும் சரிசெய்து கொள்வதற்கான பயிற்சி முறைகளையும் வழங்குகிறார் ஈரோட்டைச்  சேர்ந்த 'ஃபிட்னெஸ் ஒன்’ உடற்பயிற்சியாளர் பிரவீன் குமார்.

அலுவலகத்தில் பணிபுரியும்போது நேராக அமர வேண்டும். குறிப்பாக அலுவலகத்தில்

கழுத்து... கவனம் செலுத்து!

கம்ப்யூட்டர் முன் அமரும்போதும் படிக்கும்போதும் ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல், அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.

நீண்ட தூரம் தொடர்ந்து டிரைவிங் செய்யாமல், அவ்வப்போது ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும். வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதைத் தவிர்க்கவும். கடுமையான வலி ஏற்படும் சமயம், படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.

படுக்கும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணைகள் வைப்பதைத் தவிர்க்கவும். தலையணை இல்லாமல் தூங்குவதும் நல்லது. படுக்கை, மேடுபள்ளம் இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். அதிகக் குளிர்காற்று உடலில் படும்படியாகப் படுக்கக் கூடாது. வயிறு தரையில் படும்படி, குப்புறப் படுக்காதீர்கள். இந்த நிலை, கழுத்தை முறுக்கிவிடும். கனமான பொருளை அதிக நேரம் தூக்குவதைத் தவிர்க்கவும்.

கழுத்தில் வலி இருந்தால், அந்தப் பகுதிக்கு வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தரவும். மனதளவில் இறுக்கமின்றி 'ரிலாக்ஸ்டாக’ இருக்கவும். வாயுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்களுக்குத் தொடர்ந்து கழுத்து வலி இருந்தால், பயிற்சியாளரின் ஆலோசனைப்படி சில பயிற்சிகளை மாற்றிச் செய்ய  வேண்டும்.

கழுத்துக்குக் கச்சிதமான பயிற்சி!

நம் கழுத்துத் தசைகள் உறுதியற்றதாக இருந்தாலும், நெகிழ்வுத்தன்மை குறைந்திருந்தாலும் பிரச்னைதான். கழுத்துக்குப் பயிற்சி தரும்போது, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தின் சமநிலையின்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும். கழுத்தைப் பாதுகாக்கும் தசைகளை உறுதிப்படுத்தும். எனினும் கழுத்துப் பயிற்சியை மிதமிஞ்சிச் செய்யக் கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

கழுத்து வலி வராமல் இருப்பதற்காக முக்கியமான மூன்று விதப் பயிற்சிகள் உள்ளன. இவை கழுத்து தசைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றைச் சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகின்றன. நாம் தவறான கோணங்களில் கழுத்தைத் திருப்புவதால், ஏற்படும் பாதிப்புகளை இந்தப் பயிற்சிகளின் மூலம் குணப்படுத்த முடியும். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப, பயிற்சியாளர் பரிந்துரைக்கும் எடையில் டம்பிள்ஸைப் பயன்படுத்திச் செய்யவேண்டும்.

கழுத்து... கவனம் செலுத்து!
கழுத்து... கவனம் செலுத்து!
அடுத்த கட்டுரைக்கு