Published:Updated:

வெறும் விளையாட்டு அல்ல!

வெறும் விளையாட்டு அல்ல!

வெறும் விளையாட்டு அல்ல!

வெறும் விளையாட்டு அல்ல!

Published:Updated:

விளையாட்டு என்பது வெறுமனே விளையாட்டான காரியம் மட்டுமில்லை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியத்தைத் தக்கவைப்பதற்கும் அதுவே

வெறும் விளையாட்டு அல்ல!

உதவுகிறது. விளையாட்டைப் பற்றிப் பல விஷயங்களை நாம் தெரிந்துவைத்திருந்தாலும் அதை ஒரு நிபுணரின் வார்த்தைகளில் கேட்பது இன்னும் பயனுள்ளதுதானே! இதோ, விளையாட்டு குறித்து விரிவாகப் பேசுகிறார்,  இந்திய ரயில்வே அணியின் தடகளப் பயிற்சியாளர் அண்ணாவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'விளையாட்டில் மன உறுதி, கூட்டு முயற்சி, தனி மனித ஒழுக்கம் இவை மூன்றும் மிகவும் முக்கியம். விளையாட்டு, நட்பு வட்டத்தை உருவாக்கும், அனைவருடன் சகஜமாகப் பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தரும். குழுவாக விளையாடும்போது, தலைமைப் பண்பு உருவாக உதவும்.

ஜிம் எக்ஸர்சைஸ், வாக்கிங், ஜாகிங் எனப் பல பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்கக் கஷ்டப்படுபவர்கள்கூட, ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடினாலே போதும், ஃபிட்னெஸ் கைகூடும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி பலன்கள் உண்டு' என்றவர் அவற்றைப் பட்டியலிட்டார்.

கால்பந்து

களத்தில் 90 நிமிடங்கள் கொஞ்சமும் சளைக்காமல் கவனத்துடன் விளையாடினால்தான், எந்த ஓர் அணியாலும் வெற்றி பெற முடியும்.

வெறும் விளையாட்டு அல்ல!

கால்பந்து விளையாட்டில் நடப்பது, ஓடுவது என உடல் தொடர்ந்து சீராக இயங்குவதால், தசைகள் வலுவடையும். எலும்புகள் உறுதியாகும். மேலும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். 'லோயர் பாடி’ என்று சொல்லப்படும் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அனைத்தும் இரும்பு போல உறுதியடையும். பந்து வரும் வழியைக் கணிப்பது, எதிர் அணியிடம் இருந்து பந்தைக் கைப்பற்றி கோல் போட முயற்சிப்பது எனக் குழுவாக செயல்படுவதால் கூட்டு முயற்சி, பகிர்தல் போன்ற  பண்புகள் கைகூடும். இதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தப் பிரச்னை, மூட்டு வலி போன்ற பாதிப்பு உள்ளவர்களைத் தவிர்த்து, சிறு வயது முதல் முதியவர் வரை அனைவரும் விளையாடுவதற்கு அற்புதமான விளையாட்டு இது.

கூடைப்பந்து

வெறும் 28 மீட்டர் கொண்ட ஆடுகளத்தில் நடை, ஓட்டம், உயரமாகக் குதித்தல், எறிதல் என ஏகப்பட்ட பயிற்சிகளைத் தரும் மிகச் சிறந்த விளையாட்டு. மாணவர்கள் சிறு வயதில் இருந்து விளையாடினால் உயரமாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வயது வித்தியாசம் இன்றி, அனைவரும் எப்போதும், எந்த நேரத்திலும் விளையாடலாம்.

வெறும் விளையாட்டு அல்ல!

ஒரு மணி நேரம் கூடைப்பந்து விளையாடுபவர்கள், சராசரியாக 630 முதல் 750 கலோரிகள் வரை எரிக்க முடியும். உடல் எடையைக் குறைக்கவும், ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறவும், உடலில் உள்ள அனைத்துத் தசைநார்கள் வலுப் பெறவும் இது உதவுகிறது. உடலின் சமநிலை காக்கவும், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்படவும் உதவுகிறது.

நீச்சல்

வெறும் விளையாட்டு அல்ல!

மற்ற விளையாட்டுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது நீச்சல். வெறும் விளையாட்டாக மட்டுமின்றி தேவையான நேரத்தில் பாதுகாக்கும் அரணாகவும் நீச்சல் உதவுகிறது. கை மற்றும் கால் தசைகளுக்கு நல்ல பயிற்சியைத் தருகிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. தசைகள் வலுப்பெறவும் இதயம், நுரையீரல் ஆரோக்கியமாகச் செயல்படவும் உதவுகிறது. உடல் முழுவதுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதால், உடலின் வளைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கும். ஆஸ்துமா, இதய நோயாளிகள் தவிர்த்து, அனைவரும் நீச்சல் பழகலாம்.

டென்னிஸ்

வெறும் விளையாட்டு அல்ல!

வேகம், வலிமை, நெகிழ்வுத்தன்மை கொண்ட உடல், பொறுமை, ஒருங்கிணைப்பு ஆகிய ஐந்து முக்கியமான அம்சங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் ஒருவரால், டென்னிஸில் வெற்றிகரமாக சாதிக்க இயலும். மேலும், உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயிற்சி தேவைப்படுவதால், இது ஒரு மிகச் சிறந்த விளையாட்டு. இதயப் பிரச்னை உள்ளவர்கள்கூட ஒரே வயதுடைய நபருடன், மிதமான வேகத்தில், குறிப்பிட்ட நேரம் வரை விளையாடலாம். டென்னிஸ் விளையாடுவது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும், உடல் எடையைச் சீராகப் பராமரிப்பதற்கும், ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும், நினைவாற்றலை அதிகரிப்பதற்கும் டென்னிஸ் உதவுகிறது. ஒரு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதன் மூலம், தோராயமாக 600 கலோரிகள் எரிக்க முடியும்.

தடகளம்

ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கங்கள் தடகளப் போட்டிக்குத்தான். ஓட்டம், நடை, நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என தனித் தனிப் பயிற்சிகளில் சிறந்து விளங்க உதவுவது தடகளம்.  சிறுவயதிலேயே ஏதேனும் ஒரு தடகளப் பயிற்சியில் தொடர்ந்து விளையாடினால், ஆயுள் முழுக்க அது நமது உடலைக் காக்கும்.

தடகளப் பயிற்சி உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தனிநபர் ஒழுக்கம், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்படும். உடலின் அதிகபட்ச சக்தியைத் திரட்டி பயிற்சியில் ஈடுபடுவதால், உடல் வலுப்பெறும்.

வெறும் விளையாட்டு அல்ல!

சதுரங்கம்

மூளைக்கு அதிக வேலையைத் தரும் விளையாட்டு. சதுரங்கத்தில் 'கிராண்ட் மாஸ்டர்’ என்பவர் எதிராளியின் அடுத்த 64 நகர்த்தல்களை முன்கூட்டியே அறியும் திறமை படைத்தவராக இருப்பார். எளிய முறையில் விளையாடக்கூடிய கடினமான விளையாட்டு. சதுரங்கம் விளயாடும்போது மட்டுமே மூளையின் இடது, வலது பகுதிகள் இணைந்து வேலைசெய்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஞாபகமறதியைத் தடுத்து, நினைவாற்றலை அதிகரிக்கக்கூடியது. அல்சைமர் நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், புதிர் கணக்குகளை விடுவிக்கவும், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கும் மிகுத்த உதவியாகவும் இருக்கிறது'' என்று பட்டியல் இடுகிறார் அண்ணாவி.

விளையாடுபவர்களுக்கான உணவு! (மூத்த உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி)

வெறும் விளையாட்டு அல்ல!

'எந்த ஒரு விளையாட்டைத் தொடங்கும்போதும், நான்கு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். மாலையில் விளையாடுபவர்கள் மதியம் சத்தான உணவுகளை நிறைய உண்ணலாம். கிரிக்கெட், கால்பந்து போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் மாலை நேரத்தில் ஒரு கப் பழங்கள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். விளையாடி முடித்தவுடன் கட்டாயம் திட உணவுகளைத் தவிர்த்து, தண்ணீர், பழச்சாறை அதிகம் அருந்த வேண்டும்.

தடகளம், நீச்சல் போன்ற தனிநபர் சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவோர் விளையாடும் நேரத்துக்கு 6 மணி நேரம் முன்னதாகவே நன்றாக சாப்பிட்டுவிட வேண்டும். பிறகு, காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் சிறிதளவு எடுத்துகொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு, ஜூஸ், தண்ணீர் அருந்த வேண்டும். விளையாட்டுப் பயிற்சியின் இடை இடையே தேவையான தருணத்தில் உப்பு - சர்க்கரை கலந்த எலுமிச்சைச் சாறு, தண்ணீர் போன்ற பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.''

- பு.விவேக் ஆனந்த்,  படங்கள்: தே.தீட்ஷித், தி. குமரகுருபரன்,

ரா.வருண் பிரசாத், இரா.யோகேஷ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism