Published:Updated:

அப்பப்போ சிக்ஸ் பேக், அடிக்கடி சைக்ளிங் - ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ் சொல்லும் நடிகர் நகுல்

நடிகர் நகுல் ஃபிட்னஸ்
நடிகர் நகுல் ஃபிட்னஸ்

``சீக்கிரமே சைக்ளிங் ஸ்டார்ட் பண்ணுங்க... செம ஃபிட்டாயிடுவீங்க" - ஃபிட்னஸ் பிரியர்களுக்கு நகுல் அட்வைஸ்!

பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் நடிகர் நகுல். பாய்ஸில் தொடங்கிய நகுலின் பயணம், `காதலில் விழுந்தேன்' படத்துக்குப் பிறகு தனித்து தெரியத்தொடங்கியது. நடிகராக மட்டுமன்றி, பாடல் - விளையாட்டு - இசை என எல்லாவற்றிலும் திறமை கொண்டிருக்கும் நகுல் பற்றி, பலரும் அறியாத விஷயம், அவருடைய ஃபிட்னஸ்.

நடிகர் நகுல்
நடிகர் நகுல்

அப்பப்போ சிக்ஸ் பேக், அடிக்கடி சைக்ளிங் என ஆக்டிவாக ஓடிக்கொண்டிருக்கும் நகுலைக் கொஞ்சம் நிறுத்தி, அவரின் ஏ டூ இஸட் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸை ஷேர் செய்யச் சொன்னோம். படபடவென பேசத் தயாரானார் நகுல்!

``நிறைய பேர், ஃபிட்டா இருக்கணும்னா தினமும் ஹெவி வொர்க்-அவுட் பண்ணணும்னு நினைக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னா, நம்மளோட 80 சதவிகித உடல் ஆரோக்கியத்துக்கு, நம்ம சாப்பிடற சாப்பாடுதான் அடிப்படை. அந்தவகையில், என்னோட ஃபிட்னஸ்ஸுக்கு என்னோட உணவுமுறைதான் முக்கியமான காரணம்.

நடிகர் நகுல் ஃபிட்னஸ்
நடிகர் நகுல் ஃபிட்னஸ்

உணவுக்கு அடுத்தபடியா இன்னொரு முக்கியக் காரணமா நான் நினைக்கிறது, ஃபிசிக்கலி ஆக்டிவ்வா இருக்கும் பிஹேவியர்! தூங்குற நேரம் - சாப்பிடற நேரம் தவிர மற்ற எல்லா நேரத்திலும் ஏதாச்சும் ஒருவகையில எனக்கு உடலுழைப்பு இருந்துகிட்டே இருக்கும். வேலை எதுவுமே இல்லைன்னாகூட, சும்மா நடந்துகிட்டேவாவது இருப்பேன்.

ஃபிட்னஸ், அன்றாட வேலையில ஒண்ணுதானே தவிர, தனியொரு வேலையில்ல அது!
நகுல்

அதுக்காக, நான் எக்ஸர்சைஸே பண்ண மாட்டேன்னு சொல்ல முடியாது. என்ன சாப்பாடு சாப்பிடறேனோ அதைப் பொறுத்து உடற்பயிற்சிகளை அமைச்சுக்குவேன். மற்றபடி, குறிப்பிட்டு எந்தப் பயிற்சியையும் ரொம்ப நாளைக்கு ஃபாலோ பண்றதில்ல!"

உங்க டயட் பிளான் என்ன?"

``இன்னைக்கு டிரெண்ட்ல, நிறைய உணவுமுறைகள் வழக்கத்துல இருக்கு. ஆனா, அவை எல்லாமே குறுகிய காலத்துக்கான நன்மைகளைக் கொடுப்பவை. நீண்ட நாள் நன்மைக்கு, பேலன்ஸ்டு டயட் மட்டும்தான் தீர்வு. டயட்டை பொறுத்தவரைக்கும் என்ன சாப்பிடறோம், எவ்வளவு சாப்பிடறோம்னு ரெண்டு விஷயத்துல மட்டும் ரொம்ப ரொம்ப கவனமா இருப்பேன்.

பாகற்காய் - மஞ்சள்தூள் ரெண்டும் என்னோட சூப்பர் ஃபுட்ஸ்
நகுல்

எந்தச் சூழ்நிலையிலையும் வெளி உணவுகள், குறிப்பா ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சாப்பிடவே மாட்டேன். வீட்டுச் சாப்பாடு மட்டும்தான் என்னோட சாய்ஸ். காரணம், வீட்டு சாப்பாடுன்னாதான் ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள, நோய் எதிர்ப்பு சக்தி நிறைஞ்சு இருக்கிற காய்கறிகள், பழங்களா பார்த்து தேர்ந்தெடுத்து, சாப்பிட முடியும்! எனக்கே ஓரளவுக்கு சமையல் தெரியும்ன்றதால, காய்கறித் தேர்வுலருந்து உப்பு - காரம் பார்க்குற வரைக்கும் எனக்கு எப்படி வேணும்னு நானே பார்த்து பார்த்துச் செய்வேன். யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்!

உணவைப் பொறுத்தவரைக்கும், `Eat to Live' என்பது என்னோட மந்திரம். `Live to Eat' - என்பது, என் டிக்‌ஷனரிலயே கிடையாது! அளவோட இருக்கிறவரைக்கும் எல்லா உணவுகளுமே நல்லவைதான்னு நம்புற ஆள் நான்.
நடிகர் நகுல் ஃபிட்னஸ்
நடிகர் நகுல் ஃபிட்னஸ்

உங்க சூப்பர் ஃபுட் எது?"

``பாகற்காய் - மஞ்சள்தூள் ரெண்டும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி. உணவுல பாகற்காய் அதிகம் சேர்க்கும்போது, சுறுசுறுப்பாவும் ஹேப்பியாவும் இயங்க முடியும். பலரும் பாகற்காய் சமைக்கும்போது, அதுல இருக்கும் கசப்பை நீக்குறதுக்கு முயல்வாங்க. ஆனா எந்த அளவுக்கு அதுல கசப்பு இருக்கோ, அந்த அளவுக்கு பாகற்காய் நல்லது.

சோஷியல் மீடியாவெல்லாம் நம்மளை கட்டிப்போடற மாய உலகம்.
நகுல்

மஞ்சள்தூள் அதிகம் சேர்க்கும்போது, உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தொற்றுப்பிரச்னைகள் தடுக்கப்படும். நான் மஞ்சளுக்கு அடிமைன்னே சொல்லலாம்! எந்த உணவா இருந்தாலும், அதில் மஞ்சள்தூள் சேர்த்து சாப்பிடுவேன். வேகவைக்கும் காய்கறிகள்லகூட மஞ்சள்தூள் சேர்த்திடுவேன்."

உங்க ஆரோக்கியத்தை எப்படி உறுதிப்படுத்திப்பீங்க?

* சர்க்கரைநோய்க்கு குடும்ப பின்னணி இருப்பதால, ஆறு மாசத்துக்கு ஒருமுறை ரத்தப்பரிசோதனை செஞ்சுக்குவேன். மற்றபடி, வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வேன். எந்தப் பிரச்னையும் நமக்கில்லைன்னு உறுதிப்படுத்திக்கிறதுல ஒரு நிம்மதி!

* சளி, காய்ச்சல், இருமல் போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கெல்லாம், மாத்திரை மருந்து எடுத்துக்க மாட்டேன். வீட்டு மருத்துவம்தான் முதல் சாய்ஸ். நாம சாப்பிடற சாப்பாடுதான், நமக்கான மருந்துன்னு நம்புற ஆள்நான். மாத்திரை மருந்து அதிகம் சாப்பிட மாட்டேன்றதால, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருக்கும் உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்.

* மொபைல், டி.வி பார்த்துகிட்டே இருக்கிறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள்! சோஷியல் மீடியாவெல்லாம் நம்மளை கட்டிப்போடற மாய உலகம்.

சிக்ஸ் பேக், தேவையில்லாத மெனக்கெடல்!
நகுல்
நடிகர் நகுல் ஃபிட்னஸ்
நடிகர் நகுல் ஃபிட்னஸ்

* ஓரிடத்துல 10 நிமிஷத்துக்கு மேல தொடர்ச்சியா உட்கார்ந்திருக்கிறது, நம்மளை சோம்பேறி ஆக்குறதுக்கான வழி. அந்தத் தப்பை செய்ய மாட்டேன். `அந்த ரிமோட்டை எடுத்துக்கொடு' `தண்ணி பாட்டில் எடுத்துக்கொடு'னு சொல்லி கூட இருக்கிறவங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். எனக்கு என்ன வேணுமோ, அதை நானே செஞ்சுக்குவேன்.

* உணவுல உப்பு - காரம் எப்படி அளவோ இருக்கோ, அதேபோல இனிப்பும் அளவா இருக்கணும்னு நினைக்குற ஆள்நான். அதனால ரொம்ப குறைவாவே சர்க்கரை சேர்த்துக்குவேன்!"

``சமீபத்துல நீங்க தெரிஞ்சுகிட்ட மருத்துவ உண்மைகள் சில..."

``* நிறைய பேர் சொல்ற விஷயம், ஆரோக்கியமான உடலுக்கு, தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கணும் என்பது. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் தாகத்துக்கு தண்ணீர் குடிச்சா போதும். அதேபோல, பசி எடுத்தவுடனே, சாப்பாடு சாப்பிடறது தப்பு. முதல்ல தண்ணீர் குடிக்கணும். நமக்கு ஏற்பட்டிருக்கது பசிதானா, இல்லை தாகமானு தெரிஞ்சுகிட்டு பிறகுதான் அந்த உணர்வுக்கு ரியாக்ட் பண்ணணும். இது, நான் சொன்னது இல்லீங்க. மருத்துவர்கள் சொன்ன விஷயம்! நீங்களும் இதை ஃபாலோ பண்ணலாம்.

நடிகர் நகுல் ஃபிட்னஸ் - சைக்ளிங்
நடிகர் நகுல் ஃபிட்னஸ் - சைக்ளிங்

* சிக்ஸ் பேக் வைக்கிறது, வேஸ்ட் ஆஃப் டைம், வேஸ்ட் ஆஃப் ஹெல்த். சினிமால நடிக்கிறோம், உடலுக்கான போட்டிகள்ல கலந்துக்குறோம், போட்டோஷூட் பண்றோம்னு தேவைப்படும் சூழல்கள்ல, குறுகிய காலத்துக்கு வேணும்னா சிக்ஸ் பேக் ட்ரை பண்ணலாம். நீண்ட நாள்களுக்கு சிக்ஸ் பேக் மெயின்டெயின் பண்றது, என்னைப் பொறுத்தவரை தப்பு. காரணம், அது ஒருவரை உடல்சார்ந்து பலவீனமாக்கும் விஷயம். ஸோ, தயவுசெஞ்சு நீண்டகால முயற்சியா அதை யாரும் முயற்சி பண்ண வேண்டாம் என்பது, என்னோட பெர்சனல் அட்வைஸ்!"

நடிகர் நகுல் ஃபிட்னஸ்
நடிகர் நகுல் ஃபிட்னஸ்

``ஃபிட்டா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?'

``சமீபகாலமா ரொம்ப தீவிரமா சைக்ளிங் பண்றேன். மனஅழுத்தம் குறைப்பதற்காகவும் பொழுதுபோக்குக்காவும் தொடங்குன ஒரு விஷயம்தான் இந்த சைக்ளிங். ஒருகட்டத்துக்கு மேல, அது ரொம்ப பிடிச்சுப்போச்சு`தினமும் எக்ஸர்சைஸ் பண்ண முடியலை, ஃபிட்டா இருக்கணும். என்ன பண்ணலாம்'னு தவிக்கிறவங்களுக்கு, என்னோட பெஸ்ட் அட்வைஸ், `சீக்கிரமே சைக்ளிங் ஸ்டார்ட் பண்ணுங்க பாஸ்'ன்றதுதான்! தினமும் 15 நிமிஷம் சைக்ளிங் பண்ணாகூட போதும்! ஃபிட்டா இருக்கலாம் நீங்க."

View this post on Instagram

This cycle is really special and means the world to me! My Amma had bought this cycle for me and carried it single handedly all the way from Switzerland almost two decades ago! There was a time when I wasn’t riding it that much and many people kept asking me if they could take it .. obviously the answer was HELL NO! I recently got the bike restored and she rides like a dream! Every time I ride this cycle it feels like my Amma is travelling with me. I feel so blessed to have had mother like her! I really miss her so much. . . . I Have named the cycle after my Best friend, My Mother, my Child - LUX 💓 . 📸 @srubee 🐙 . . #myamma #mybestfriend #cycle #nostalgia #mymomsblessings #imissyou

A post shared by Nakkhul Jaidev (@actornakkhul) on

எல்லாத்துக்கும் முன்னாடி, ஃபிட்னஸை, தனியொரு வேலையா நினைக்காம, லைஃப்ஸ்டைலா நினைச்சு அன்றாட வேலையில ஒண்ணா நினைச்சு ஃபாலோ பண்ணுங்க. அப்போதான், பலன் கிடைக்கும்!

அடுத்த கட்டுரைக்கு