Published:Updated:

`உடற்பயிற்சி கட்டாயம்; இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ்!' - தமன்னாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்

பாலிவுட் முதல் கோலிவுட் வரை கில்லியாகச் சுற்றிச் சுழலும் தமன்னாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

தமன்னா
தமன்னா

நடிகை தமன்னா திரைத்துறைக்கு வந்து, பதினைந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. பதினாறு வயதில் எப்படி அறிமுகமானாரோ, அப்படியேதான் இன்றைக்கும் இருக்கிறார் இந்த பார்பி டால். கமர்ஷியல் படங்கள் தொடங்கி ஆர்ட் மூவிவரை, பாலிவுட் முதல் கோலிவுட் வரை கில்லியாகச் சுற்றிச் சுழல்பவரின் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் தெரியுமா?

தமன்னா ஃபிட்னெஸ்
தமன்னா ஃபிட்னெஸ்

இதோ தமன்னாவின் டயட்...

டயட் அட்டவணை:

* அதிகாலை - வெந்நீரில் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் தேன் (ஒரு கப்) + சில பாதாம்

* காலை - இட்லி அல்லது தோசை. உடன் சட்னி, சாம்பார் அவசியம் / ஓட்ஸ் (கார்போஹைட்ரேட்ஸ் அதிகமுள்ள உணவுகள் என்ற அடிப்படையில்)

* மதியம் - சாதம் (ஒரு கப்) + தால் ஒரு கப் + காய்கறிகள்

* இரவு - முட்டை / சிக்கன் / மீன் + காய்கறிகள் (புரதம் அதிகமான உணவு என்ற அடிப்படையில்)

டயட் பிளான்
டயட் பிளான்
Vikatan

டயட் ரூல்ஸ்!

* சுறுசுறுப்பான உடல் இயக்கத்துக்கு, ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் ஏதாவதோர் உணவு சாப்பிட்டுவிட வேண்டும்.

* தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்துவிட வேண்டும். இவற்றோடு சேர்த்து, இளநீர், ஃப்ரெஷ் ஜூஸும் லிஸ்ட்டில் இருக்க வேண்டும்!

தமன்னா
தமன்னா

* தினமும் உடற்பயிற்சி கட்டாயம். அவுட்டோர் ஷூட்டிங், ஜிம் போக முடியாத நாள்களில், நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் மேற்கொள்ள வேண்டும்

* எல்லாத் தசைகளுக்குமான பயிற்சியாக இருக்குமென்பதால் ஃபங்க்‌ஷனல் டிரெய்னிங்தான் ஃபேவரைட் உடற்பயிற்சி.

* அதிக கலோரி உள்ள உணவுகள் உட்கொள்ளும் நாள்களில் கார்டியோ பயிற்சிகள் கட்டாயம்.

சர்க்கரைச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு ஸ்ட்ரிக்ட்லி நோ!
தமன்னா ஃபிட்னெஸ் சீக்ரெட்

* மனநலனை மேம்படுத்த, தினமும் நிச்சயம் யோகா செய்ய வேண்டும்.

* `சீட் மீல் டே'வில் (குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை, எந்தவித உணவு வரைமுறையுமின்றி இருப்பது) பிஸ்தா, சாக்லேட், அரிசி உணவுகள் ஓகே!