Published:Updated:

``தொப்பை தொழுதாவூர் வரைக்கும் போச்சு... அதான் இப்டி!" வெயிட்லாஸ் சீக்ரட் சொல்லும் புகழ்

`குக் வித் கோமாளி' புகழ்

லாக்டௌனுக்குப் பிறகு டிவி நிகழ்ச்சிகளில் புகழை பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பப்ளியாக டெடி பியர் பொம்மைபோல இருந்தவர், எடையைக் குறைத்து செம ஃபிட்டாக மாறியிருக்கிறார். கடந்த சில மாதங்களில் 30 கிலோ எடையைக் குறைத்திருக்கிறாராம்.

``தொப்பை தொழுதாவூர் வரைக்கும் போச்சு... அதான் இப்டி!" வெயிட்லாஸ் சீக்ரட் சொல்லும் புகழ்

லாக்டௌனுக்குப் பிறகு டிவி நிகழ்ச்சிகளில் புகழை பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பப்ளியாக டெடி பியர் பொம்மைபோல இருந்தவர், எடையைக் குறைத்து செம ஃபிட்டாக மாறியிருக்கிறார். கடந்த சில மாதங்களில் 30 கிலோ எடையைக் குறைத்திருக்கிறாராம்.

Published:Updated:
`குக் வித் கோமாளி' புகழ்

லாக்டௌன் நேரத்தில் உடல் எடையைக் குறைத்து செம ஃபிட்டாக மாறியிருக்கிறார் விஜய் டிவி `குக் வித் கோமாளி' புகழ். வித்தியாசமான ஹேர் ஸ்டைல், பெண் வேடம், ரம்யா பாண்டியனுடன் ரொமான்ஸ், செஃப் வெங்கடேஷ் பட், மற்றும் தாமுவிடம் கலாய் என அவரால் நிகழ்ச்சியில் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. விஜய் டிவியில் நீண்ட காலமாகத் தலைகாட்டி வந்தாலும் `குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குப் பிறகு, பலரின் ஃபேவரைட்டாக மாறிவிட்டார் புகழ்.

Pugazh
Pugazh

லாக்டௌனுக்குப் பிறகு டிவி நிகழ்ச்சிகளில் அவரைப் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பப்ளியாக டெடி பியர் பொம்மைபோல இருந்தவர், எடையைக் குறைத்து செம ஃபிட்டாக மாறியிருக்கிறார். கடந்த சில மாதங்களில் 30 கிலோ எடையைக் குறைத்திருக்கிறாராம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`வெயிட் லாஸ் அனுபவத்தை கேட்கலாமே' என புகழை தொடர்புகொண்டோம். ``எல்லாத்துக்கும் காரணம் மா.கா.பா அண்ணன்தான். அவருதான் 5 கிலோ கோதுமை மாவு பாக்கெட் குடுத்தாரு. அதை வெச்சி டெய்லி மூணு வேளையும் சப்பாத்தியா சாப்பிட்டேன். தொட்டுக்க பூண்டு ஊறுகாய். அதுபோக பக்கத்துல வீட்ல, எதிர்த்த வீட்ல கொடுக்குற தொக்கு எல்லாம் தொட்டுக்கிட்டு சாப்பிட்டேன். இதுல முக்கியமான விஷயம் என்னன்னா இது எதையும் நாக்குலபடாம சாப்பிடணும். ஒரு மாசம் சப்பாத்தி சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு சரியில்லாம போய் அப்படியே வெயிட்டும் குறைஞ்சிருச்சு.

இதுபோக எங்க வீட்ல ரெண்டு டம்பிள்ஸ் கிடந்துச்சு. அதை தினமும் முதல் மாடியில இருந்து எடுத்துக்கிட்டு வந்து கிரௌண்ட் ஃப்ளோர்ல வைப்பேன். அப்புறம் அதை எடுத்துட்டுப் போய் முதல் மாடில வைப்பேன். அப்படியே வெயிட் குறைஞ்சிருச்சு" கலாய்க்கத் தொடங்கினார்.

``உடம்பை எப்படிக் குறைச்சீங்கன்னு சீரியஸா சொல்லுங்க. உடம்பைக் குறைக்க நினைக்கிறவங்க உங்களை ஃபாலோ பண்ணுவாங்கல்ல" என்றதும், ``அப்படியா! சீரியஸாவா?" என்று யோசித்தவர், ``நிறைய ஈவென்ட்ஸ் வரும்னு நினைச்சு கையில இருந்த காசுல வீட்ல ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சின்னு வாங்கிப் போட்டுட்டேன். பார்த்தா கையில காசு இல்ல. அதனாலதான் வாராவாரம் மா.கா.பா அண்ணன் வீட்டுக்குப் போயிடுவேன். சாப்பாட்டுக்கு காசில்லாமலதான் வெயிட் குறைஞ்சிருச்சு" என்றவர், ``இதுவும் ஃபன் கன்டென்ட்டாதான் வருதோ?" - மீண்டும் யோசிக்கத் தொடங்கினார்.

சாப்பாட்டு அளவைக் குறைச்சதால பசி எடுத்துகிட்டேயிருக்கும். அப்படி இருந்தாலும் எதுவும் சாப்பிட மாட்டேன்.
`குக் வித் கோமாளி' புகழ்

``ஏற்கெனவே பப்ளியா அழகாத்தானே இருந்தீங்க... எதுக்கு இந்த திடீர் முடிவு" என்றோம். ``அழகாத்தான் இருந்தேன். ஆனா, என் தொப்பை தொழுதாவூர் வரைக்கும் போச்சு. அதான் இப்டி கொஞ்சம் குறைக்கலாம்னு யோசிச்சேன்" என்கிறார். எப்படிக் கேள்வி கேட்டாலும் சீரியஸாக அவரிடம் பதிலைப் பெறவே முடியவில்லை. இறுதியாக, ``10 நிமிஷம் கழிச்சுப் பேசுங்க. சீரியஸா பதில் சொல்றேன்!" என்றார்.

மீண்டும் அழைத்தபோது இந்த முறை சீரியஸாகப் பேசினார், ``குக் வித் கோமாளி ஷோ முடிந்ததுமே எடையைக் குறைக்கணும்னு நினைச்சேன். பிப்ரவரி மாசம் முதலே அதற்கான வேலைகளில் இறங்கிட்டேன். ஜிம் டிரெய்னர் சிவாகிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். லாக்டௌன் நேரத்தில் ஜிம் எல்லாம் மூடியிருந்தாங்க. வீட்டுக்குப் பக்கத்துல ஜிம் இருந்ததால யாரும் இல்லாம நான் மட்டும் போய் எக்சர்சைஸ் பண்ணுவேன்.

Pugazha now and then
Pugazha now and then

டிரெய்னர் ஆலோசனையின்படி உணவுமுறையைக் கடைப்பிடித்தேன். காலைல இரண்டு இட்லி சாப்பிடுவேன். மதியம் ஒரு கைப்பிடி அளவு சாதம்தான். அரிசியை ரொம்பக் குறைச்சுட்டேன். ராத்திரிக்கு இரண்டு சப்பாத்தி. அதுபோக பச்சைப்பயறு மாதிரி இயற்கையான புரதத்தையும் எடுத்தேன். சாப்பாட்டு அளவைக் குறைச்சதால பசி எடுத்துக்கிட்டேயிருக்கும். அப்படி இருந்தாலும் எதுவும் சாப்பிட மாட்டேன்.

நடுவுல யாராவது பிரியாணி குடுக்குறாங்கன்னு போயிட்டா அவ்ளோதான் எல்லாம் போயிடும். 90 கிலோ வெயிட்ல இருந்து 60 கிலோவுக்கு வந்திருக்கேன். செப்டம்பர் 1-லிருந்து மறுபடியும் ஜிம்முக்குப் போய் உடலை டைட் பண்ணப் போறேன். ஏ.சியிலயே இருந்ததால கலரா வேற ஆயிட்டேன். அம்மாதான் வெயிட்டைக் குறைக்கச் சொன்னாங்க. ஆனா இப்போ அவங்கதான் உடம்பு போயிடுச்சுன்னு திட்டவும் செய்றாங்க. இந்த லாக்டௌன்ல எல்லாரும் சாப்பிட்டு குண்டாயிருக்காங்க. நான் மட்டும்தான் ஒல்லியா ஆயிருக்கேன்ல..." ஒருவழியாக ரகசியத்தைச் சொல்லி முடித்தார்.

pugazh
pugazh

சில ரேபிட் ஃபயர் கேள்விகளுக்குப் புகழின் பதில்கள்

``1. எடை குறைஞ்சதால ஹீரோ வாய்ப்பு வருதா?"

``இல்லைங்க. நம்ம எப்பவுமே காமடியன்தான்."

``2. ரம்யா பாண்டியனை இம்ப்ரெஸ் பண்றதுக்காகத்தான் எடையைக் குறைச்சீங்களாமே?"

``அவங்க ஹீரோயின்... நாம காமெடியன். இதுவே உங்கக் கேள்விக்குப் பதில் சொல்லிடும்."

``3. பிக்பாஸ் சீஸன் 4-ல நீங்களும் ஒரு கன்டெஸ்ட்டன்ட்னு செய்திகள் வருதே?"

``எல்லாரும் கால் பண்ணிக் கேக்குறாங்க. ஆனா, எனக்குத்தான் அஃபிஷியலா எந்தத் தகவலும் வரல."

``4. பிக்பாஸ்ல ஃபன் எலிமென்ட்டுக்காக எப்பவும் ஒரு காமெடி கேரக்டர் இருக்குமே?"

``நிகழ்ச்சி முடிஞ்சு வெளில வரும்போது அவங்க காமெடிலயே இருக்க மாட்டாங்களே."

``5. ஒருவேளை பிக்பாஸ்ல கலந்துக்கச் சொல்லி கூப்பிட்டா என்ன பண்ணுவீங்க?"

``விஜய் டிவி என் தாய் வீடு. அவங்க கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்ல முடியுமா? அதனால யோசிச்சுச் சொல்வேன்."