Published:Updated:

``எடை ஏற்ற இறக்கம் இயல்பானது... ஃபிட்டாக இருப்பதே முக்கியம்" - தீபிகா பல்லிக்கல்!

எடை ஏற்ற இறக்கம் என்பது மிகவும் இயல்பானது. உடல் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல், ஃபிட்டாக இருக்கிறோமோ என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்..

தீபிகா - தினேஷ்
தீபிகா - தினேஷ்

கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் விளையாட்டில் தீபிகா பல்லிகல் என விளையாட்டுத் துறையைச் சேர்ந்த இந்தக் காதல் ஜோடி, சமீபத்தில் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கையைக் கொண்டாடியது.

Dipika Pallikal
Dipika Pallikal

ஒரே துறையைச் சேர்ந்த கணவன் - மனைவி இடையேயான 'கப்புல் கோல்ஸ்' கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதற்கு இவர்களும் விதிவிலக்கல்ல. ஃபிட்னெஸில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள், உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் உடற்பயிற்சி செய்ய மறக்க மாட்டோம் என அடித்துச் சொல்கின்றனர்.

`டி20 உலகக் கோப்பையில் தோனி ரோலில் செயல்பட விருப்பம்!' - வாய்ப்பை எதிர்நோக்கும் தினேஷ் கார்த்திக்

"விளையாட்டு வீராங்கனை என்பதால், தினமும் சில மணி நேரம் பயிற்சி செய்வேன். ஃபிட்டாக இருப்பது ரொம்ப முக்கியம். குறிப்பாக, பெண்கள் ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் செலுத்தி, தங்களது உடல்மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் மாற்றங்கள், எடை ஏற்ற இறக்கம் என்பது மிகவும் இயல்பானது. உடல் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல், ஃபிட்டாக இருக்கிறோமோ என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

Dinesh - Dipika
Dinesh - Dipika

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த விஷயம் ஒன்று இருக்கிறது, இளம் பெண்களுக்கு முகப்பரு ஏற்படுவதால் தன்னம்பிக்கையை இழப்பதை அதிகம் பார்க்கிறேன். தோற்றத்தை வைத்து உங்களை மதிப்பிடாதீர்கள். வருத்தம், பயம் போன்றவை நீங்கள் முன்னேறிச் செல்வதற்குத் தடையாய் அமையும். உடல் மாற்றத்தினால் ஏற்படும் முகப்பருவால் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் ஸ்குவாஷ் கோர்ட்டில் விளையாட ஆரம்பிக்கும்போது, என்னோடு நம்பிக்கையை மட்டுமே எடுத்துச் செல்ல விரும்புவேன்" என்றார் தீபிகா.

2019 விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்த அணி, கர்நாடக அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ள தமிழக அணி, இரண்டாவது முறையாக தினேஷ் கார்த்திக் தலைமையில் கோப்பையை வெல்லும் என வாழ்த்துகளும் சொல்லியுள்ளார் தீபிகா.