Published:Updated:

`டயட்டில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை!' -காரணம் பகிரும் நடிகை மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

சிறப்பாக எந்தப் பயிற்சிகளும் இல்லை என்றாலும் வழக்கமான எளிய உடற்பயிற்சிகளே உடலை ஸ்லிம் ஆக வைத்துக்கொள்ள போதுமானவையாக உள்ளன.

தன் துறுதுறு கண்களாலும் துள்ளலான நடிப்பாலும் ரசிகர்களின் மனதைக் கட்டிப் போட்டவர் மேகா ஆகாஷ். படப்பிடிப்புக்காக தன் தாயுடன் பயணம் மேற்கொண்டிருந்தவரை அலைபேசியில் அழைத்தோம்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

எந்த உடை அணிந்தாலும் கச்சிதமாகப் பொருந்தும் அளவுக்கு உடல்வாகினை உடையவர் மேகா ஆகாஷ். எனவே, `உங்களின் ஃபிட்னெஸ் ரகசியம் பற்றி உங்கள் ரசிகர்களுக்குச் சொல்வீர்களா?' என்று கேட்டவுடன், சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.

``சின்ன வயசுல நான் ரொம்ப குண்டா இருந்தேன். அந்த எடையைக் குறைக்க இரண்டு வருஷம் எடுத்துக்கிட்டேன். சில உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே வழக்கமாகி, தினமும் ஜிம்முக்குச் செல்லும் பழக்கமும் ஏற்பட்டது.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

இப்போது படப்பிடிப்பு தவிர நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். சென்னையில் இருக்கும்போது ஜிம்முக்குச் செல்வேன். சிறப்பாக எந்தப் பயிற்சிகளும் இல்லை என்றாலும் வழக்கமான எளிய உடற்பயிற்சிகளே உடலை ஸ்லிம் ஆக வைத்துக் கொள்ள போதுமானவையாக உள்ளன. கூடவே கொஞ்சம் யோகாவும் செய்வேன்" என்றார்.

Vikatan

மேலும் அவரின் உணவுப்பழக்கம் பற்றிக் கேட்டோம்.

``பொதுவாக எனக்கு டயட்டில் நம்பிக்கை இல்லை. ஆரம்பத்தில் கீட்டோ டயட் முறையைப் பின்பற்றிப் பார்த்தேன். ஆனால், அது எனக்கு ஒத்துவரவில்லை. அதனால் இப்போது நான் எந்த டயட்டையும் பின்பற்றுவதில்லை. பசிக்கும்போது சாப்பிடுவேன். அதிகமாகக் காய்கறிகள், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வேன்.

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

நான் நான்-வெஜிடேரியன் என்பதால் முட்டை சேர்த்துக் கொள்வேன். பெரும்பாலும் வீட்டில் அம்மா சமைக்கும் உணவுகளைத்தான் உண்பேன். ஆனால், எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் அளவாகத்தான் எடுத்துக் கொள்வேன்.

உணவுமுறைபோல் தூக்கமும் முக்கியம். சில நாள்களில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரவே அதிகாலை நான்கு மணி ஆகிவிடும். அப்போது மட்டும் நான்கு மணியிலிருந்து காலை ஏழு மணிவரை தூங்குவேன். மற்ற நாள்களில் ஏழு மணிநேரம் தூக்கத்தை மிஸ் பண்ணவே மாட்டேன்'' என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு