Published:Updated:

```நோ' ஸ்டீராய்டு; நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி!' - சல்மான் கானின் ஃபிட்னெஸ் சீக்ரெட்

சல்மான்கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஃபிட்னெஸில் அதிகம் கவனம் செலுத்தி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.

```நோ' ஸ்டீராய்டு; நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி!' - சல்மான் கானின் ஃபிட்னெஸ் சீக்ரெட்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஃபிட்னெஸில் அதிகம் கவனம் செலுத்தி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.

Published:Updated:
சல்மான்கான்

பாலிவுட் நடிகரான சல்மான்கான் ஸ்டீராய்டுகளையும், இயற்கைக்கு எதிராக தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று தன் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கான், சிறந்த நடிகராகவும், ஃபிட்னெஸ் நாயகனாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர். இவர் சமீபத்தில் பிரபல பிராண்டின் உடற்பயிற்சி சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சல்மான் கான் ஃபிட்னெஸில் அதிகம் கவனம் செலுத்தி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். இதற்காகவே பல இளைஞர்கள் அவரை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளனர்.

 சல்மான்கான்
சல்மான்கான்

அந்த நிகழ்சியில் பேசிய சல்மான், ``உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டி பலர் ஸ்டீராய்டு மருந்துகளையும், இயற்கைக்கு எதிரான முறையில் தயாரிக்கும் உணவுப் பொருள்களையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது மிகவும் ஆபத்தானது. அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் ஸ்டீராய்டுகளை முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்" என்றார்.

 சல்மான்கான்
சல்மான்கான்

அவரின் ஃபிட்னெஸ் ரகசியம் பற்றியும் அதற்கான அவரின் உழைப்பு பற்றியும் கேட்டபோது, ``படப்பிடிப்பின்போது பிசியாக இருந்தால், உடற்பயிற்சி செய்வதற்கென்று அதிக நேரத்தைச் செலவிடுவதென்பது இயலாத ஒன்று. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சிகளைச் செய்வேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism