Published:Updated:

`உப்புமா, போஹா, முட்டையின் வெள்ளைக் கரு!' - ஷ்ரத்தா கபூரின் ஃபிட்னெஸ் ரகசியம்

பச்சைக் காய்கறிகள், பருப்பு மற்றும் சப்பாத்திகளை உள்ளடக்கியது இவரின் மதிய உணவு.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர் ( Instagram.com )

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷ்ரத்தா கபூர் தன் நடிப்பாலும், கச்சிதமான உடல் அழகாலும் ரசிகர்களின் மனதைக் கட்டிப் போட்டு வைத்திருப்பவர்.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்
Instagram.com

பாலிவுட்டில் பல நடிகர்கள் தங்கள் நடனத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே நடனத்துடன் சேர்ந்த முகபாவத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்களில் ஒருவர்தான் ஷ்ரத்தா கபூர். இவர் சமீபத்தில் தனது ஃபிட்னெஸ் ரகசியம் பற்றியும், உணவு முறைகள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

ஷ்ரத்தா கபூரின் உணவு முறைகள்:

1) ஆரம்பத்தில் எந்த டயட் முறையையும் கடைப்பிடிக்காத ஷ்ரத்தா பிறகு சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றத் தொடங்கினார். இதன்படி இவர் தினமும் தனது உணவில் வேகவைத்த காய்கறிகள், முட்டை, மீன் மற்றும் பழச்சாறுகளை அதிகம் சேர்த்துக் கொள்வாராம்.

உணவு முறை
உணவு முறை

2) நேரம் தவறாமல் தன் காலை உணவைச் சாப்பிட விரும்பும் ஷ்ரத்தா உப்புமா, போஹா, முட்டையின் வெள்ளைக் கரு ஆகிய உணவு வகைகளை விரும்பி உண்பாராம்.

`டயட்டில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை!' -காரணம் பகிரும் நடிகை மேகா ஆகாஷ்

3) பச்சைக் காய்கறிகள், பருப்பு மற்றும் சப்பாத்திகளை உள்ளடக்கியது இவரின் மதிய உணவு. எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு பிளேட்டில் இடம் இல்லை.

4) இரவு உணவுக்கு முழு கோதுமை ரொட்டி அல்லது பழுப்பு அரிசியுடன் பருப்பு மற்றும் வறுத்த மீன் அல்லது மீன் கறியைச் சாப்பிடும் இவர் இரவு 11 மணிக்குத் தூங்கினாலும் இரவு உணவை 8 மணிக்குள் முடித்துக் கொள்வாராம்.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்
Instagram.com

5) செரிமானத்திற்காக நாள் முழுவதும் அதிகமாக தண்ணீர் குடிக்கும் ஷ்ரத்தா புரதச்சத்து அதிகம் உள்ள சைவ உணவையே அடிக்கடி விரும்பிச் சாப்பிடுவாராம்.

முறையான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியே என் ஃபிட்னெஸ் ரகசியம் என்கிறார் இந்த பாலிவுட் பியூட்டி.