Published:Updated:

`பஞ்சாபி உணவு, மீன், உருளைக்கிழங்கு, ஒரு மணி நேர யோகா!'- ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் சன்னி லியோன்

தினமும் அதிகம் தண்ணீர் அருந்தும் சன்னி, எங்கு சென்றாலும் கையில் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்வாராம்.

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சன்னி லியோன்.

சன்னி லியோன்
சன்னி லியோன்

முறையான உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கும் சன்னி, ஃபிட்னெஸ்ஸில் அதிகம் கவனம் செலுத்துபவராம்.

சன்னி லியோனின் உடற்பயிற்சி முறை:

சன்னியின் சருமம் பளபளப்புடன் இளமையாக இருக்க காரணம் அவர் தினமும் செய்யும் யோகாதானாம். யோகாவுக்காகத் தினமும் ஒரு மணி நேரம் செலவழிப்பாராம்.

சன்னி லியோன்
சன்னி லியோன்

நாள்தோறும் ஜிம் செல்லும் இவர், ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளில் தொடங்கி தசைகளை வலுப்படுத்த உதவும் அனைத்துப் பயிற்சிகளையும் மேற்கொள்வாராம்.

`உப்புமா, போஹா, முட்டையின் வெள்ளைக் கரு!' - ஷ்ரத்தா கபூரின் ஃபிட்னெஸ் ரகசியம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சன்னி லியோனின் உணவு முறை:

பஞ்சாபியான சன்னிக்கு பஞ்சாபி உணவுகள் மற்றும் மீன் வகைகள் மீது கொள்ளை பிரியமாம். கீட்டோஜெனிக் டயட் முறைப்படி உணவில் கொழுப்பைச் சேர்த்துக்கொள்ளும் சன்னியின் உணவு பிளேட்டில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு அதிகம் இடம் இல்லையாம். உருளைக்கிழங்கு மிகவும் பிடித்த உணவு என்பதால் அதை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்.

சன்னி லியோன்
சன்னி லியோன்

தினமும் அதிகம் தண்ணீர் அருந்தும் சன்னி, எங்கு சென்றாலும் கையில் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்வாராம். அடிக்கடி தண்ணீர் அருந்துவதால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கிறார்.

முறையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பது நம்மை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும் என்கிறார் இந்த அழகு தேவதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு