Published:Updated:

சர்ஜரி செய்த ஐந்தே மாதங்களில் கிரிக்கெட்! -கவனம் ஈர்க்கும் ஹர்திக் பாண்டியாவின் உடல், மன உறுதி

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

மூன்றே மாதங்களில் ஏழு கிலோ எடை அதிகரிக்கச் செய்து, மீண்டும் கிரிக்கெட் களத்தில் வலம்வரப்போகிறார்.

விதவிதமான உடைகள், வித்தியாச ஹேர்ஸ்டைல், வதந்திகள் என விளையாட்டையும் தாண்டி தன்னை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

Hardik Pandya
Hardik Pandya

உடல்நலக்குறைவால் அதிகமான எடையை இழந்த ஹர்திக், மூன்றே மாதங்களில் ஏழு கிலோ எடை அதிகரிக்கச் செய்து, மீண்டும் கிரிக்கெட் களத்தில் வலம்வரப்போகிறார்.

இறுதியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியாவுக்காக விளையாடிய ஹர்திக், கடுமையான முதுகுவலி காரணமாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகி இருந்தார்.

Hardik in Hospital
Hardik in Hospital

அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையை மேற்கொண்டு, சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளத் தயாராக இருந்தார். ஆனால், அவருடைய உடல் திறன் விளையாடுவதற்குக் கைகொடுக்காத காரணத்தால், அவரால் இந்தச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

26 வயதான பாண்டியா மிகவும் கடுமையான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. என்றாலும், போட்டிகளில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடல் திறனைச் சரியாக வைத்துக்கொள்ள உடல் எடையை அதிகரிக்கச் செய்யக் கடினமாக உழைத்திருக்கிறார்.

Hardik with his Girlfriend
Hardik with his Girlfriend

அதன் பலனாக தற்போது, மும்பையில் நடந்து வரும் டி-20 போட்டியில் ஹர்திக் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

செர்பிய நடிகையோடு திருமண நிச்சயதார்த்தம்! - இன்ஸ்டாவில் அறிவித்த ஹர்திக் பாண்டியா

"மூன்று மாதங்களில் 68 கிலோவிலிருந்து இப்போது 75 கிலோவரை உடல் எடை அதிகரித்துள்ளேன். இடைவிடா முயற்சி, குறுக்குவழிகள் எதுவுமில்லை #StrongerAndBetter” என்ற ஹேஷ்டேக்குடன் தன்னுடைய 'ஃபிட்னெஸ்' புகைப்படத்தோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாண்டியா. இது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு