Published:Updated:

How to: உங்களுக்கு ஏற்ற ஜிம்மை தேர்ந்தெடுப்பது எப்படி? I How to choose a gym?

இப்போது பலரும் ஃபிட்னஸ்ஸில் ஈடுபாடு காட்டுகின்றனர். விளைவாக, ஆங்காங்கே பல உடற்பயிற்சி நிலையங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. உங்களுக்கான ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிக் கூறுகிறார், ஃபிட்னஸ் டிரெய்னர் ஆனந்த்.

How to: உங்களுக்கு ஏற்ற ஜிம்மை தேர்ந்தெடுப்பது எப்படி? I How to choose a gym?

இப்போது பலரும் ஃபிட்னஸ்ஸில் ஈடுபாடு காட்டுகின்றனர். விளைவாக, ஆங்காங்கே பல உடற்பயிற்சி நிலையங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. உங்களுக்கான ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிக் கூறுகிறார், ஃபிட்னஸ் டிரெய்னர் ஆனந்த்.

Published:Updated:

தற்போது பலருக்கும் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து உள்ளது. கூடவே ஃபிட்னஸ்ஸிலும் ஈடுபாடு காட்டுகின்றனர். விளைவாக, ஆங்காங்கே பல உடற்பயிற்சி நிலையங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. உங்களுக்கான ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிக் கூறுகிறார் ஃபிட்னஸ் டிரெய்னர் ஆனந்த்.

Gym (Representational Image)
Gym (Representational Image)
Image by David Mark from Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* ஜிம்மில் சேரும் முன் ஜிம்முக்கும் உங்கள் வசிப்பிடத்துக்கும் உள்ள தொலைவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக தூரத்தில் உள்ள ஜிம்மை தேர்வு செய்தால், போக்குவரத்து சிரமங்களால் தொடர்ந்து அங்கு செல்ல முடியாமல் போகலாம். அதனால் அருகிலேயே இருக்கும் ஜிம்மை தேர்வு செய்வது நல்லது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ஃபால்ஸ் ஸ்டேட்மென்ட் (false statement)... அதாவது, `இத்தனை நாள்களுக்குள் உங்கள் உடல் எடையைக் குறைத்து தருகிறோம்', `நீங்கள் கேட்பதை இத்தனை நாள்களில் செய்து தருகிறோம்' என்றெல்லாம் சாத்தியமில்லாத உறுதிகள் கொடுக்கும் ஜிம் என்றால், சேர்வதற்கு முன் நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொருவருடைய உடல் அமைப்பு, எடையைப் பொறுத்து அவருக்கான ஃபிட்னஸ்ஸுக்கு மாறும் காலம் மாறுபடும். அதனால் இதுபோன்ற உறுதிகளை நம்பி ஜிம்மில் சேர வேண்டாம்.

Gym
Gym
Image by Jonas Fehre from Pixabay

* ஜிம்மைப் பொறுத்தவரை, ஆண்டுக் கட்டணம் (annual package) முடிவை எடுக்காதீர்கள். `ஓர் ஆண்டுக்கு சேர்த்துக் கட்டும்போது கட்டணம் குறைவாக இருக்கிறதே...' என்று எண்ணியோ, `ஓர் ஆண்டுக்கும் கட்டணம் செலுத்திவிட்டால், அதற்காகவாவது நாம் நிச்சயம் தவறாது ஜிம்முக்கு வந்தே தீர்வோம்' என்று நினைத்தோ அந்த முடிவை எடுக்காதீர்கள். ஜிம்மைப் பொறுத்தவரை, ஒரு மாதத்தில் ஆர்வத்துடன் செல்லும் பலருக்கும் அடுத்தடுத்த மாதங்களில் ஆர்வம் குறைந்துவிடும் என்பதே உண்மை. மேலும், ஆண்டுக்கட்டணம் செலுத்திவிட்டதால், ஒரு மாதம் ஸ்கிப் செய்து அடுத்த மாதம் சென்றுகொள்ளலாம் என்ற எண்ணமும் தலைதூக்கலாம். அதனால் எப்போதும் `ஷார்ட் டேர்ம் பேக்கேஜ்' தேர்ந்தெடுப்பதே நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* ஃபிட்னஸ்ஸில் உங்களுக்கு என்று ஓர் இலக்கு செட் செய்த பிறகு, ஜிம்மில் சேருங்கள். சென்ற பின் அங்கிருக்கும் அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்த நினைக்காமல், உங்களுக்கு என்ன தேவையோ அதற்கான கருவுகளில் மட்டும் வொர்க் அவுட் செய்யுங்கள். அதேபோல, உங்கள் ஃபிட்னஸ் கோலுக்கான கருவிகள் இருக்கும் ஜிம்மாகப் பார்த்து தேர்வு செய்யுங்கள்.

Gym
Gym

* ஆரம்பநிலையில் இருப்பவர்கள் (beginners) முடிந்த அளவுக்கு ஒரு குழுவுடன் இணைந்து ஜிம்மில் உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். பலருடன் இணைந்து செய்யும்போது தொடர்ச்சி மிஸ் ஆகாமல் இருக்கும்; ஒருவர் மற்றவருக்கு மோட்டிவேட் செய்துகொள்ளலாம். சோம்பேறித்தனம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழுவில் உள்ளவர்களில் உங்கள் உடலமைப்பு/உங்கள் ஃபிட்னஸ் கோலுடன் ஒத்துப்போகிறவர்கள் உங்களுக்கு ஒரு நல்ல துணையாகவும் கிடைப்பார். எனவே, முடிந்த அளவுக்கு குழுவுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது போன்ற ஜிம்மை தேர்வு செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism