Published:Updated:

`ஜிம்முக்கு செல்லாமலே எடையைக் குறைக்க வேண்டுமா?'- ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் ஃபிட்னஸ் ரகசியம்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

உடற்பயிற்சிகள் போல உணவு முறையையும் சரியாகப் பின்பற்றுகிறார் ஜாக்குலின். சரிவிகித உணவு மற்றும் டயட் முறைகள் இவரின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள துணைசெய்கின்றன.

`` எனக்கும் உடலை ஃபிட்டாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆசைதான். ஆனால், அதற்கெல்லாம் ஜிம்முக்கு செல்ல வேண்டும். நிறைய உழைக்க வேண்டும். நமக்கு எங்கே நேரம் இருக்கிறது" என்று கவலைப்படுபவரா நீங்கள்?'' இனி கவலையே வேண்டாம். ஜிம்முக்கு செல்லாமலே ஃபிட்டாக இருக்க, பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் உடற்பயிற்சி ட்ரிக்ஸ் இதோ உங்களுக்காக.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
Instagram

தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள திரைப் பிரபலங்கள் பல மணி நேரம்  ஜிம்மில் செலவிடும் இந்த காலகட்டத்தில், இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையும் முன்னாள் இலங்கை பிரபஞ்ச அழகியுமான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ஜிம்முக்கு செல்லாமலே வீட்டில் செய்யும் எளிய உடற்பயிற்சிகள் மூலமாகவும், ஆரோக்கியமான உணவு முறையின் மூலமாகவும் தனது உடலை ஸ்லிம்மாக மெருகேற்றிவருகிறார்.

``எடை ஏற்ற இறக்கம் இயல்பானது... ஃபிட்டாக இருப்பதே முக்கியம்" - தீபிகா பல்லிக்கல்!

இதற்கு, அவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளே சான்று. மேலும், தனது ரசிகர்களை ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளச் சொல்லியும் உடற்பயிற்சி செய்யச் சொல்லியும் ஊக்கப்படுத்துகிறார்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

ஜாக்குலின், கார்டியோ உடற்பயிற்சிகளையும் யோகா செய்வதையும் முறையாகப் பின்பற்றிவருகிறார். கார்டியோ பயிற்சிகள் என்பவை ஜாக்கிங், வாக்கிங், ஜம்ப்பிங், சைக்கிளிங் போன்றவையே. மேலும், இவர் செய்யும் பைலேட் உடற்பயிற்சிகள், தசைகளை மென்மையாகவும் தொய்வின்றியும் வைத்திருக்க உதவுகின்றன. இந்தப் பயிற்சிகள் எல்லாம் வீட்டிலிருந்தே செய்யக்கூடியவை.

உடற்பயிற்சிகள் போல உணவு முறையையும் சரியாகப் பின்பற்றுகிறார். சரிவிகித உணவு மற்றும் டயட் முறைகள் இவரின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள துணை செய்கின்றன.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்

தனது உணவில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்துக்கொள்ளும் இவர், இரவு உணவை 7 - 7.30-க்குள் முடித்துக்கொள்வாராம். சர்க்கரை இல்லாத உணவு, மிளகு சேர்க்கப்படும் உணவு போன்றவற்றை இவர் எடுத்துக்கொள்கிறார். மிளகு, உடலில் தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவுகிறது.

மேலும், இவரது டயட்டில் அதிக காய்கறிகள், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இடம்பெறுகின்றன. இவர், புல்லெட் ப்ரூஃப் காபியையே விரும்பி அருந்துகிறார். புல்லெட்புரூஃப் காபி என்பது, சிறிது நெய் மற்றும் தேங்காய் சார்ந்த எம்.சி.டி எண்ணெயைக் கொண்ட எஸ்பிரெசோவின் ஒருவகை ஆகும். இது, கொழுப்பு எரியும் செயல்முறையைத் துரிதப்படுத்துகிறது. மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

எனவே, ஜிம்முக்கு சென்று மூச்சை தம்பிடித்து பளு தூக்கினால் தான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்றில்லை. வீட்டுலிருந்து செய்யும் முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே போதும். இதற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸே சிறந்த எடுத்துக்காட்டு!

அடுத்த கட்டுரைக்கு