Published:Updated:

அவலும் நானும்... 19 கிலோ குறைத்த ரகசியம் பகிரும் பாடலாசிரியர் விவேக்!

’ஆளப்போறான் தமிழன்’ பாடலாசிரியர் விவேக்
’ஆளப்போறான் தமிழன்’ பாடலாசிரியர் விவேக்

பாடலாசிரியர் விவேக்: "நைட்ல எதுவுமே சாப்பிட மாட்டேன். சாயங்காலம் 6 மணியில இருந்து 7 மணிக்குள்ள ஒரேயொரு மாதுளம்பழம் மட்டும்தான்.’’

லாக்டெளனில் சகல செலிபிரிட்டிகளும் ஃபிட்னஸ்ஸில் தீவிர ஈடுபாடு காட்டிக்கொண்டிருக்க, 'ஆளப் போறான் தமிழன்' பாடல் புகழ் பாடலாசிரியர் விவேக் 19 கிலோ எடையைக் குறைத்து தம்ஸ் அப் காட்டியிருக்கிறார். அப்படியென்ன டயட் ஃபாலோ செய்தீர்கள் என அவரிடமே கேட்டோம்.

எடையைக் குறைப்பதற்கு முன்
எடையைக் குறைப்பதற்கு முன்

"லாக்டெளனுக்கு முன்னாடி 101 கிலோ வெயிட் இருந்தேன். இந்த நாலு மாசத்துல டயட்ல இருந்து இப்போ 82 கிலோ இருக்கேன். நான் பெரும்பாலும் உடற்பயிற்சி செய்ய மாட்டேன். ஏன்னா, எனக்கு வியர்த்தா ஜலதோஷம் பிடிச்சிடும். உடற்பயிற்சி செஞ்சா வியர்க்குமே" என்று சிரிக்கிற விவேக் முழுக்க முழுக்க டயட்டில் இருந்தே உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.

"கடந்த நாலு மாசமா காலையிலும் மதியமும் விதவிதமான அவல் ஒரு கப் சாப்பிட்டேன். கூடவே கால் லிட்டர் வெந்நீர் குடிச்சிட்டு வந்தேன். வெறும் அவல் மட்டும் சாப்பிட்டா போரடிச்சுடும்னு புளிவிட்ட அவல், எலுமிச்சைச்சாறு விட்ட அவல், இனிப்பா சாப்பிடணும்னு தோணுச்சுன்னா அவலோட பேரீச்சம் பழம் போட்டு அரைச்சு சாப்பிட்டேன். அவல்ல மாவுச்சத்து, இரும்புச்சத்து, கொஞ்சம் புரதம், நார்ச்சத்துனு எல்லாம் உண்டு. அதனாலதான் என் டயட்டுக்கு அவலை நான் தேர்ந்தெடுத்தேன். புரோட்டீன் போதலைன்னு தோணுச்சுன்னா முளைகட்டினப் பயறு அல்லது முட்டை சாப்பிட்டேன். அவல் போரடிச்சப்போ சப்பாத்தி சாப்பிட்டேன். ஆனா, விரல் விட்டு எண்ணுற அளவுக்கு சில நாள்கள்தான் சப்பாத்தி சாப்பிட்டேன். உடம்பு சூடானா உடனே இளநீர் குடிச்சேன்.

பாடலாசிரியர் விவேக் எடை குறைந்த பிறகு...
பாடலாசிரியர் விவேக் எடை குறைந்த பிறகு...

தாகம் எடுக்கிறப்போ எல்லாம் வெந்நீர்தான் குடிச்சேன். இது உடம்புல இருக்கிற கெட்ட கொழுப்பைக் குறைக்கும். நிறைய காய்கறிகள் சாப்பிட்டேன். அதுல கேரட்டையும் வெள்ளரிக்காயையும் தவிர்த்து மற்ற காய்கறிகளை நல்லா வேக வெச்சு சாப்பிட்டேன்.

நைட்ல எதுவுமே சாப்பிட மாட்டேன். சாயங்காலம் 6 மணியில இருந்து 7 மணிக்குள்ள ஒரேயொரு மாதுளம் பழம் மட்டும்தான். கூடவே சாயங்காலத்துல ஆரம்பிச்சு நைட்டு தூங்கப்போகிற வரைக்கும் 1 லிட்டர் வெந்நீர் குடிச்சேன். ஆனா, இதெல்லாம் நான் எந்த டயட்டீஷியன்கிட்டேயும் அட்வைஸ் கேட்டு செய்யல. அதனால, இந்த டயட் மத்தவங்களுக்குப் பொருந்துமான்னு தெரியலை.

ரொம்ப நாளா ஹெல்த் கான்ஷியஸா இருக்கணும். டயட் இருக்கணும். உடம்பைக் குறைக்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன். லாக்டெளன்ல டைம் கிடைச்சதும் செய்ய ஆரம்பிச்சுட்டேன். 19 கிலோ எடையும் குறைச்சுட்டேன்.’’
பாடலாசிரியர் விவேக்
`இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிப் போக முடியுமா?!' -கொரோனா தாக்கம் குறித்து கூகுள் சிஇஓ

அரிசி, பால், சர்க்கரை, தயிர், மைதான்னு வெள்ளை உணவுகளை சுத்தமா தவிர்த்துவிட்டேன். ரொம்ப ரொம்ப முக்கியமா எனக்குப் பிடிச்ச ஜங்க் ஃபுட்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டேன்.

`சர்வர் சுந்தரம்’ படத்துல `உணவே மருந்து’ங்கிற ஒரு பாட்டு எழுதியிருந்தேன். அந்தப் பாட்டு எழுதின பிறகு ஜங்க் ஃபுட் சாப்பிடுறப்போ எல்லாம் குற்றவுணர்ச்சியா இருக்கும். நான் எழுதினதை நானே ஃபாலோ செய்யலையேன்னு நினைச்சுப்பேன். தவிர, அந்தப் பாட்டு எழுதுறதுக்காக நம்மோட உணவுக் கலாசாரம் பத்தி நிறைய படிச்சேன். முதல்ல பருப்பும் நெய்யும் உணவுக்குழாய்க்குள்ள போறப்போ குடலுக்குள் மென்மைத் தன்மையை ஏற்படுத்துமாம். அடுத்து சாம்பார், வத்தக்குழம்புன்னு சத்தா, ஹெவியா சாப்பிடுறோம். அவை ஜீரணிக்க ரசம், சாப்பிடுறதால உடம்புல ஏற்படுற சூட்டைத் தணிக்க மோர்னு நம்மோட உணவுகள் அத்தனையும் மருந்துகள். ஆனா, ஸ்டூடியோவுல உட்கார்ந்து வேலைபார்த்துட்டு இருக்கிறப்போ கிடைச்சதைத்தான் சாப்பிடணும்.

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்
சிங்கிள் பெண்களே... பாசிட்டிவ் வாழ்க்கைக்கு இதெல்லாம் முக்கியம்!

ரொம்ப நாளா ஹெல்த் கான்ஷியஸா இருக்கணும். டயட் இருக்கணும். உடம்பைக் குறைக்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன். லாக்டெளன்ல டைம் கிடைச்சதும் செய்ய ஆரம்பிச்சுட்டேன். 19 கிலோ எடையும் குறைச்சுட்டேன். லாக்டெளன் முடிஞ்சாலும் டயட்லேயும் ஹெல்த்துலேயும் கவனமா இருக்கணும்னு முடிவெடுத்திருக்கேன்’’ என்கிறார் ஹேப்பியாக... ஃபிட்னஸ் தமிழன்!

அடுத்த கட்டுரைக்கு