வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வருவது ஜிம் மட்டும் தான். ஒரே எடத்துல உட்காந்து வேலை செஞ்சு செஞ்சு உடம்பு ரொம்ப கெட்டுப்போச்சு. மொதல்ல ஜிம் சேரனும் பாடிபில்டர் மாறி உடம்ப ஏத்தனும்.அப்போதான் நாம ஃபிட்.
ஜிம் என்றாலே கட்டுமஸ்தான உடல் அமைப்பும்,பாடிபில்டிங் மட்டும் தான? அதற்கு பதில் "இல்லை" என்பதுதான்.
நீங்கள் உடற்பயிற்சி மையத்தில் சேரும் போது அங்கே trainer உங்களிடம் முதலில் கேட்பது உங்களோட ஃபிட்னெஸ் கோல் என்ன?
என்னுடைய பதில் ஜெனரல் ஃபிட்னெஸ் சார்.
எண்ணற்ற வகையான உடற்பயிற்சி முறைகள் ஜிம்மில் பயிற்றுவிக்க படுகின்றன, இங்கு நாம் பார்க்க போகும் உடற்பயிற்சி வகை ஜெனரல் ஃபிட்னெஸ்.

ஜெனரல் ஃபிட்னெஸ் என்றால் என்ன?
பொதுவான உடற்பயிற்சி என்பது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நம் நல்வாழ்வை நோக்கி செயல்படுகிறது. இது, எனக்கு மிக பெரிய தசைகள் வேண்டும், நான் பார்க்க அழகாக இருக்க வேண்டும், பாடிபில்டர் ஆக வேண்டும், போட்டிகளில் கலந்துக்கொள்ள வேண்டும்... என்றில்லாமல், நம் அன்றாட வேலைகளை தொடங்கும் முன்போ அல்லது அன்றாட வேலையை முடித்த பின்போ நம் உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்க மிதமான உடற்பயிற்சி போதும் என்ற மனநிலையே ஜெனரல் ஃபிட்னெஸ்.
நாம் இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் நம் மன அழுத்தம் குறைகிறது, நம்மை நன்றாக உணரச்செய்கிறது. சீராக நம் உடற்பயிற்சியை அதிகரிப்பதன் மூலம் நம் உடலின் வலிமையும் அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு, நான் சராசரி உடல் அமைப்புடன் இருக்கிறேன் என்னுடைய ஜெனரல் Workout Routine கீழ் வருமாறு,
-> தினமும் ஜிம் சென்ற உடன் நான் செய்வது ஸ்ட்ரெச்சிங்.
-> பின் ஐந்து நிமிடம் சைக்ளிங் அல்லது திரேட்மில் வாக்கிங்.
-> புஷ் அப்ஸ், புள் அப்ஸ், ஸ்குவாட்ஸ் (3 செட் 10 ரெப்ஸ்)
அதன் பிறகுதான் நான் அந்த நாளுக்கான ஒர்க்கவுட் தொடங்குவேன், தினமும் ஒவ்வொரு ஒர்க்கவுட் (Chest, triceps, shoulder, biceps, wings and legs) ஒவ்வொரு தசைக்கும் நான்கிலிருந்து ஐந்து முறைகள் மற்றும் மூன்று செட் போதுமானது ஒவ்வொரு செட்டிற்கும் 10 ரெப் போதுமானது அல்லது 12-10-8 ரெப்ஸ் எடுக்கலாம்.
பின் அப்ஸ் (Abs) ஒர்க்கவுட், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறுபடும் (Crunches, leg raise, plank, sides) இதும் மூன்று செட் போதுமானதாக இருக்கும்.
இறுதியாக மீண்டும் ஸ்ட்ரெச்சிங்.
இதுதான் என் ஜெனரல் ஒர்க்கவுட். இதை நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் இதில் சிறிதளவு கார்டியோ, ஒரு பகுதி Muscle Building, மற்றும் ஒரு பகுதி abs ஒர்க்கவுட்.
ஒவ்வொரு நபரின் உடலிற்கு ஏற்ப அவர்களது உடற்பயிற்சியும் மாறுபடும்.

உடற்பயிற்சி மட்டும் போதுமா?
போதாதுங்கோ!
நல்ல உணவுகளை உட்கொள்ளுவது மிகவும் அவசியம். புரத சத்து நிறைந்த உணவுகள் நம் தசைகள் வலுப்பெறவும், நம் உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது.துரித உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
சரிப்பா நல்ல உணவு என்றால் என்ன?
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் புரத சத்து மிகவும் குறைவே மாறாக மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் தான் அதிகம்.
தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். கொய்யா, மலை நெல்லிக்காய், மாதுளை, திராட்சை, சப்போட்டா, வாழைப்பழம் ( ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்), ஆரஞ்சு, ஆப்பிள்,பப்பாளி,தர்பூசணி ... இன்னும் பல.

முளைகட்டிய பயிர்வகைகள், வேகவைத்த சுண்டல், சக்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, பாதாம், முந்திரி, உளர் திராச்சை, அத்திப்பழம், அக்ரூட் பருப்பு (walnuts), முட்டை, வாரம் ஒரு முறை சிக்கன்,மட்டன் அல்லது மீன் (குழம்பு நல்லது.எண்ணையில் வருத்ததோ பொரித்ததோ (அடிக்கடி) உண்பதை தவிர்க்கவும்.)
சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நாம் வெள்ளை அரிசியை உட்கொள்ள பழகிவிட்டோம் அதனால் சிறுதானிய உணவிற்கு மாறுவது கொஞ்சம் கடினம்தான் இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பொக்கிஷத்தை நம் உணவில் சேர்ப்போம்.

நல்ல வாழ்விற்கு மிதமான உடற்பயிற்சியும், நல்ல உணவுகளும் போதும். இவை இரண்டுமே நம் உடலை மட்டும்மல்ல, நம் மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளும்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.