தொழில்நுட்ப உலகில், விரல் நுனியில் வேலைபார்த்து வருகிறோம். உடல் அசைவுகள் குறைந்துவிட்டன. இந்தச் சூழலில், ஃபிட்னெஸ் ட்ராக்கர்களைக் கொண்டு உடல் நலத்தைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார்கள் பலர். மொபைல்போன் விற்பனையைப்போல இப்போது ஸ்மார்ட் வாட்ச், ஃபிட்னெஸ் பேண்ட்களின் மார்க்கெட்டும் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு புத்தாண்டுக்கும், ஜிம் போவதாக உறுதிமொழி எடுப்பவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முதல் புராடக்ட் ஆகியுள்ளது ஃபிட்னெஸ் பேண்ட்!
உறக்க நேரத்தைக் கண்காணிப்பது, நடக்கும் தூரத்தை கணக்கிடுவது, இதயத் துடிப்பு அனாலிஸிஸ், தண்ணீர் குடிக்கச் சொல்லும் ரிமைண்டர் எனத் தனி மனிதனின் ஹெல்த்துக்கான டிஜிட்டல் நண்பனாகவே மாறியுள்ள இந்த ஃபிட்னெஸ் பேண்ட்களை, நம்பலாமா வேண்டாமா... ஓர் அலசல்!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இயல் முறை மருத்துவர் ஶ்ரீநாத் ராகவன், ஃபிட்னெஸ் பேண்ட்களின் ப்ளஸ், மைனஸ்களை எடுத்துரைத்தார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSப்ளஸ்..
அக்கறை காட்டும் டிஜிட்டல் நண்பன்
`ஸ்மார்ட் போன்களுக்கு ஓய்வளித்துவிட்டு, கை கால்களுக்கு அசைவு கொடுங்கள்', `உடலிலிருந்து வியர்வை வெளியேறட்டும்', `8 மணி நேரத் தூக்கம் அவசியம்' என ஆரோக்கியமான உடல் நலத்துக்குத் தேவையான பழக்க வழக்கங்களை நினைவூட்டும் டிஜிட்டல் நண்பன் இந்த ஃபிட்னெஸ் பேண்ட்.

நம்பர்களால் அதிரவைக்கும் டேட்டா மானிட்டர்
`இரண்டு மணி நேரத் தூக்கம் போதாது, உறக்க நேரத்தை அதிகப்படுத்துங்கள்' - இதுபோன்ற எச்சரிக்கைகள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கும். வெறும் மெசேஜ் பரிந்துரைகளாக இல்லாமல், உங்களது உடல் நலத்தைப் பற்றிய real-time டேட்டா ட்ராக்கராகச் செயல்படும். நம்பர்களால் அதிரவைக்கும் இந்த டேட்டா மானிட்டர், உங்களை ஹெல்த் கான்ஷியஸாக மாற்றும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பயன்கள் நிறைய
தகவல் பரிமாறவும், மெசேஜ் அனுப்பவும் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்கள், இன்று நினைத்துப் பார்க்க முடியாத வேலைகளை நொடிப் பொழுதில் செய்துமுடிக்கின்றன. அதேபோல, ஃபிட்னெஸ் பேண்ட்களின் பயன்பாடுகளும் வெகுவாக அதிகரிக்கும். பல அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் புகுத்தப்படும். வெறும் டேட்டா ட்ராக்கராக இல்லாமல், பெர்சனல் ஹெல்த் மானிட்டராக வேலைசெய்யும்.

பேட்டரி தொல்லை இல்லை
ஒரு முறை சார்ஜ் செய்தால், ஃபிட்னெஸ் பேண்டின் பேட்டரி காலம் 20 - 25 நாள்கள் வரை நீடிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தொல்லை இருக்காது.
ஆரோக்கியம் மட்டுமே பிரதானம்
ஃபிட்டான உடலுக்குத் தேவையான பயிற்சிகளைப் பரிந்துரைப்பது ஒரு பக்கமும், ஒருவேளை அவற்றை ஃபாலோ செய்யவில்லை என்றால், பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகள் பின்பற்றப்படவில்லை என்ற அலர்ட் இன்னொரு பக்கமும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இது, ஹெல்த் கோல் செட் செய்து, அதற்குத் தேவையான பயிற்சிகளை நோக்கி உங்களை நகர்த்தும். அப்படி உங்களது ஃபிட்னெஸ் கோல்ஸ் ஒவ்வொன்றாக நிறைவேறும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். எதையோ சாதித்துவிட்ட உணர்வு, மேலும் உங்களை ஃபிட்டாக இருக்கத் தூண்டும். தன்னை கவனித்துக்கொள்ள நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஆரோக்கியமே பிரதானம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருப்பதுதான் இந்த ஃபிட்னெஸ் பேண்ட்களின் வேலை.
மைனஸ்...
தோராயமான டேட்டா

ஃபிட்னெஸ் பேண்ட்களின் கணக்கு தோராயமாக இருக்குமே தவிர, அது துல்லியமானது இல்லை. உதாரணமாக, தரையில் நடப்பதற்கும், படி ஏறுவதற்கும் வெவ்வேறு அளவிலான கலோரிகள் உடலிலிருந்து வெளியேறும். ஆனால், ஃபிட்னெஸ் பேண்ட்கள் இந்த இரு வேலைகளுக்கும் ஒரே கணக்கீட்டைத்தான் எடுத்துக்கொள்ளும். படி ஏறும்போதும், அது ஓர் அடியாகத்தான் கணக்கிடப்படும். மற்றொரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் 10 மணிக்கு உறங்கச் சென்றிருக்கலாம். ஆனால், டீப் ஸ்லீப் ஆரம்பமான நேரத்தைத்தான் ஃபிட்னெஸ் பேண்ட்கள் கணக்கில் கொள்ளும்.
ரிமைண்டர் மட்டுமே
ஃபிட்னெஸ் பேண்ட்கள், ஆரோக்கியமான உடல் நலத்தை வலியுறுத்தும் ஒரு ரிமைண்டர் மட்டுமே. பரிந்துரைக்கப்படும் பயிற்சிகளை செயல்படுத்துவது அவரவரின் முயற்சியால்தான் சாத்தியமாகும்.
Also Read
மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு
`நீங்கள் ஃபிட்டாக இல்லை', `உடல் எடை அதிகமாக உள்ளது' போன்ற நினைவூட்டல்கள், உங்களை மனச்சோர்வடைய வைக்கலாம். கோல் செட் செய்து அதை நிறைவேற்றாமல் போனால், ஏமாற்றம் அடையலாம். இதுபோன்ற நேரங்களில் மனம் தளராது, அதை நேர்மறையாக அணுகி பயிற்சிகளைச் செய்து நல்ல ரிசல்ட்டைப் பெற வேண்டும்.