Published:Updated:

300 ஃபிட்னெஸ் மையங்கள் - நடிகர் சல்மான்கானின் அதிரடித் திட்டம்!

சல்மான்கான்
சல்மான்கான் ( Salman Khan's fb page )

கட்டுக்கோப்பான உடலுக்குச் சொந்தக்காரரான நடிகர் சல்மான்கான் ஃபிட்னஸ் விஷயத்தில் 'வெரி ஸ்டிரிக்ட்'. தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிடுவதும் வழக்கம்.

தான் மட்டுமல்லாது தனக்கு நெருக்கமானவர்களையும் உடற்பயிற்சியில் ஈடுபட வைத்து அழகு பார்ப்பவர்.

சல்மான்கான்
சல்மான்கான்
Salman Khan's fb page

''நடிகர் சல்மான்கான்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு ஃபிட்னஸ் ஐகான்'' என நடிகை கத்ரீனா கைப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு ஃபிட்னஸ் விஷயத்தில் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

சல்மான்கான் அண்மையில் 'மனிதநேயத்தைக் காப்போம்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் 'பீயிங் ஹூயுமன்' ( Being Human) என்ற பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து, உடல்நலத்தைக் காக்க, 'பீயிங் ஸ்ட்ராங்' (Being Strong) என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி
Salman Khan's fb page

அதன் ஒரு அம்சமாக, கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதுமுள்ள 175 ஃபிட்னெஸ் மையங்களுக்கு, உடற்பயிற்சி உபகரணங்களை நிறுவினார்.

அதன் தொடர்ச்சியாக எஸ்.கே. 27 என்ற பெயரில் 2020 - க்குள் நாடு முழுவதும் 300 ஃபிட்னஸ் மையங்களைத் தொடங்க முடிவெடுத்துள்ளார்.

உடற்பயிற்சி செய்யும் சல்மான்
உடற்பயிற்சி செய்யும் சல்மான்
Salman Khan's fb page

இதன்மூலம், "ஜிம் பயிற்சியாளர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் தனிமனிதனும் கட்டுக்கோப்பான மற்றும் ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு" என்கிறார் சல்மான்கான்.

அடுத்த கட்டுரைக்கு