Published:Updated:

`உங்களால் முடியாது என்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்!'- 89 கிலோ டூ 63 கிலோ சானியா மிர்சா

சானியா
சானியா ( Instagram )

சானியாவின் இந்தப் பதிவு, பிரசவத்துக்குப் பிறகு ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க பெண்களுக்கு உத்வேகமும் நம்பிக்கையும் கொடுக்கும் விதத்தில் இருக்கிறது. டென்னிஸில் மட்டுமல்ல, ஃபிட்னெஸ்ஸிலும் பல பெண்களுக்கு சானியா முன்மாதிரியாக இருக்கிறார்.

இந்தியாவில் பல பெண்களை டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுக்க வைத்தவர் சானியா மிர்சா. 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Sania Mirza
Sania Mirza
Instagram

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்திருந்தவர், பல்வேறு விதமான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருந்தார். சமீபத்தில் சட்டென உடல் எடையைக் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சானியா.

6 வயது முதல் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தாலும், 17 வயதில்தான் தனக்கென தனி முத்திரையைப் பதிக்க ஆரம்பித்தார் மிர்சா. வெற்றிக் கோப்பைகளுடன், `இஸ்லாமியப் பெண் `ஷார்ட் ஸ்கர்ட்' அணிந்து விளையாடுவது குற்றம்', `பாகிஸ்தான் நாட்டு மருமகள்' உள்ளிட்ட பல்வேறு விதமான சர்ச்சைகளும் சானியாவைப் பின்தொடர்ந்தன.

Sania
Sania
Instagram

ஆனாலும், சற்றும் மனம் தளராத சானியா, தன் விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். இந்தியாவில் பல பெண்களுக்கு டென்னிஸ் விளையாட்டில் ரோல் மாடலாக இருக்கும் இவர், சமீபத்தில் உடல் எடை அதிகரித்திருந்ததற்காக ட்ரோல் செய்யப்பட்டார். தன் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர் சானியா.

அந்த வகையில், தன் பிரசவத்துக்குப் பிறகு கூடிய உடல் எடையைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது இவருடைய சமீபத்திய பதிவு.

Sania with her son
Sania with her son
Instagram

ஆம், நான்கு மாதங்களில் சுமார் 26 கிலோ எடையைக் குறைத்து தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சானியா. அதுமட்டுமன்றி, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய உடல் எடை கூடிய மற்றும் குறைத்த இரு புகைப்படங்களையும் இணைத்துப் பதிவிட்டு, அதில் தான் கடந்து வந்த பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், ``89 கிலோ Vs 63. நீண்ட கால இலக்கு, அன்றாட இலக்குகள் என நம் அனைவருக்கும் பல இலக்குகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றிலும் பெருமை கொள்ளுங்கள். ஒரு குழந்தையைப் பெற்ற பின் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க வேண்டும் என்ற என்னுடைய இந்த இலக்கை அடைய எனக்கு 4 மாதங்கள் தேவைப்பட்டன.

Sania Mirza Post
Sania Mirza Post
Instagram

இயல்பு நிலைக்குத் திரும்பி, ஆரோக்கியத்தின் உயர்ந்த நிலையை அடைவதென்பது நீண்ட தூரப் பயணமாக இருந்தது. உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். உங்களால் முடியாது என்று சொல்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அவர்கள் யார் என்பது கடவுளுக்குத் தெரியும். என்னால் முடியுமென்றால், உங்கள் எல்லோராலும் முடியும்" என்று பதிவிட்டிருந்தார் சானியா மிர்சா.

ஜிம்மில் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் காணொலிகளை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்த சானியா, அதன் முழுமையான ரிசல்ட்டை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

Sania with her husband Shoab
Sania with her husband Shoab
Instagram
`உலகக் கோப்பை விமர்சனம்; டென்னிஸ் என்ட்ரி; கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை!' - சானியா மிர்சா ஷேரிங்ஸ்

சானியாவின் இந்தப் பதிவு, பிரசவத்துக்குப் பிறகு ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க பெண்களுக்கு உத்வேகமும் நம்பிக்கையும் கொடுக்கும் விதத்தில் இருக்கிறது. டென்னிஸில் மட்டுமல்ல, ஃபிட்னெஸ்ஸிலும் பல பெண்களுக்கு சானியா முன்மாதிரியாக இருக்கிறார்.

வெல்டன் கோல்டன் லேடி!

பின் செல்ல