ஹெல்த்
Published:Updated:

காலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்

காலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்

ஹெல்த்

காய்கறிகளையும் பழங்களையும்கொண்ட உணவே சரிவிகிதச் சத்துணவாக இருக்கும். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் சுலபமான வழிகள் இவை. முயன்று பாருங்கள்.

காலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்

காலை உணவில் ஒரு காயை மட்டும் பயன்படுத்தாமல் கலவையாகப் பல காய்கறிகளைச் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது.  முட்டை, இறைச்சி என அசைவ உணவாக இருந்தாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தொடுகறியாகவாவது காய்கறிக் கலவை இடம்பெற வேண்டும். அப்படி அமைந்தால் உங்கள் காலை உணவு ஆரோக்கியத்தின் சுரங்கமாக அமைந்துவிடும்.

காலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்சிலருக்கு, கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற குளூட்டன் நிறைந்த உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள், குளூட்டன் இல்லாத நூடுல்ஸுடன் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மதியம் மற்றும் இரவு உணவின்போதும் குறைந்தது இரண்டு காய்கறி வகைகளை பொரியல், கூட்டு என செய்து சாப்பிடுங்கள்.

மார்க்கெட்டில் விதவிதமான, பல வண்ணங்கள்கொண்ட காய், பழங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

காய்கறிகளை நீளவாக்கில் குச்சிபோல நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது சாப்பிடத் தோன்றும்போது அந்தக் காய்கறித் துண்டுகளைச் சாப்பிடுங்கள். சட்னி அல்லது துவையலில் அந்தக் காய்கறித்துண்டுகளைத் தோய்த்தும் சாப்பிடலாம்.

காலை உணவுடன் காபி, டீ குடிப்பது பல குடும்பங்களில் வழக்கம். இதற்கு பதிலாக வைட்டமின் சி நிறைந்த பழரசங்களைக் குடிப்பதைக் குடும்பத்திலிருக்கும் எல்லோரும்  பின்பற்றலாம்.

பழங்களை அப்படியே அரைத்து, சர்க்கரைக்கு பதில் தேன் அல்லது பேரீச்சம்பழ விழுது சேர்த்துக் கொடுக்கலாம். இதை  வடிகட்டாமல் கொடுப்பது சிறப்பு.

காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எல்லா காய்கறிகளையும் வேகவைத்து, அரைத்து, சூப் தயாரித்து மேலே கொஞ்சம் க்ரீம் சேர்த்துக் கொடுக்கலாம்.

உங்கள் வீட்டின் எந்த இடத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவீர்களோ அந்த இடத்தில் பழத்துண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கிண்ணத்தை வைத்துவிடுங்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் பழத்தை எடுத்துச் சாப்பிடத் தோன்றும்.

மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், ஆப்பிள் துண்டுகள் சாப்பிடலாம். ‘அது மட்டும் போதாது’ என்று நினைத்தால் வேர்க்கடலை, பாதாம் போன்ற பருப்புகளால் தயாரான ‘நட்ஸ் பட்டரை’ ஆப்பிளுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள். அமர்க்களமாக இருக்கும்.

- சு.கவிதா