ஹெல்த்
Published:Updated:

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்
பிரீமியம் ஸ்டோரி
News
மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்

உணவு - 3

`ஒருவர் வாழும் இடத்தில் உருவாகும் மூலிகைகள்தான், அவருக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தடுப்பதற்கான அடிப்படைத் தீர்வாக இருக்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அந்த வகையில், நம் ஊரைப் பொறுத்தவரையில் நம்மைச் சுற்றியுள்ள கொடி வகை மூலிகையான தூதுவளை நமக்கு ஆகச்சிறந்த மருந்து. இலை வகைகளில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத மருந்து, கண்டங்கத்திரி. 'கொடிவகை கண்டங்கத்திரி'தான் தூதுவளை.

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்

தேவையானவை:

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்தூதுவளை    : 15 இலைகள்

தக்காளி : ஒன்று

புளி : சிறிய நெல்லிக்காய் அளவு

பூண்டு : 2 பல்

மிளகு, சீரகம் : தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் : 2

கடுகு : அரை டீஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் : சிறிது

எண்ணெய்    : ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் : ஒரு சிட்டிகை

உப்பு :  தேவையான அளவு

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்

செய்முறை: தூதுவளை, பூண்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். புளியை ஊறவைத்து, கரைத்துக்கொள்ளவும். புளித் தண்ணீரில், நசுக்கிவைத்திருக்கும் தூதுவளையைச் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து, பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இத்துடன் தூதுவளை கலந்திருக்கும் புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்

பலன்கள்: சிறந்த கிருமிநாசினியான தூதுவளை, சுவாசப் பிரச்னைகளையும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நுரையீரல் பிரச்னைகளையும் தடுக்கும். தொடர்ந்து தூதுவளை சாப்பிடுவதன் மூலம், கர்ப்பப்பை நீர்கட்டி பிரச்னையைத் தடுக்கலாம் என்பதால், பெண்கள் தவிர்க்கக் கூடாத மருந்துப் பொருள்களில் ஒன்றாகவும் இருக்கிறது. 

மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்

ரெசிபியில் சேர்க்கப்பட்டிருக்கும் கட்டிப் பெருங்காயம், உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவும்; செரிமானத்தையும் சீராக்கும். தூதுவளையை வற்றல் வடிவத்திலோ, காய்கறிகளோடு சேர்த்தோ, தோசை மாவில் சேர்த்தோ உண்ணலாம். தூதுவளையின் வேர் முதல் இலைவரை எடுத்து, கஷாயம் வைத்து காலை வேளையில் குடிப்பது உடலுக்கு நல்லது.  

- ஆ.சாந்தி கணேஷ், ஜெ.நிவேதா

படம். தே.அசோக்குமார்